Friday, 22 August 2014
புதுவைத் தொலைக்காட்சி நிலையத்தின் 22ம் ஆண்டு விழா
புதுச்சேரி தொலைக்காட்சி நிலையத்தின் 22-ஆம் ஆண்டு விழா
புதுச்சேரி தொலைக்காட்சி நிலையத்தின் 22-ஆம் ஆண்டு விழா 21.08.2014 மாலை 6.30 மணிக்கு புதுச்சேரி ஜிப்மர் ஆடிடோரியத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியினை புதுச்சேரி முதல்வர் திருமிகு.என்.ரங்கசாமி அவர்கள் தொடங்கி வைத்து உரையாற்றினார். அவர் பேசும்போது புதுச்சேரியில் நிலத்தடி நீர் குறைந்து வருவது குறித்து தனது அரசு ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாகக் கூறினார். மேலும் புதுச்சேரியின் நிலத்தடி நீர் மாசுபடக் கூடாது என்பதற்காக அத்தகைய தொழிற்சாலைகள் எதையும் புதுச்சேரியில் தொடங்க தனது அரசு அனுமதிக்காது என்றும் கூறினார். பாகூர் ஏரியின் பெருமையினையும், நிலத்தடி நீர் பாதுகாக்கப்பட வேண்டியதின் அவசியத்தையும் வலியுறுத்தும் பங்காரி-சிங்காரி நாட்டிய நாடகம் சரியான நேரத்தில் நடிக்கப்படுவதையும் பாராட்டினார்.
முதலாவதாக கலைமாமணி திருமதி.எஸ்.மாதங்கி அவர்களின் வாய்ப்பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. வயலின் கோவை.எஸ்.உஷா, மிருதங்கம் திரு.எம்.சிவக்குமார் (திருவண்ணாமலை),
கடம் திரு.வெங்கடகிருஷ்ணன், தம்புரா.இராதாசங்கர். நிகழ்ச்சி தேனாய் இனித்த்து. அனைத்து சுவைகளையும் கலந்து அறுசுவை உணவு சாப்பிட்ட
திருப்தி.
அதனையடுத்து கலைமாமணி திருமதி.ஜெயஸ்ரீ நாராயணன் அவர்களின் சலங்கை கல்ச்சுரல் அகாடமி மாணவ மாணவிகளின் பங்காரி-சிங்காரி நாட்டிய நாடகம் நடைபெற்றது. வாய்ப்ப்பாட்டு திருமதி.சாந்தி கோபாலகிருஷ்ணன், மிருதங்கம் திரு.அங்கப்பன், வீணை திருமதி.டாடா பானுமதி, வயலின் திரு.ஸ்ரீனிவாஸன், பங்காரியாக செல்வி.கிருத்திகா, சிங்காரியாக செல்வி.திவ்யா, பங்காரி-சிங்காரி தாயாக செல்வி.பிரேமா, தோழியாக செல்வி.திவ்யதர்ஷினி, ஊர் சபையினராக திரு.கிருஷ்ணன், திரு.குமரன், செல்வன்.மரி ஆண்டனி தினகர், செல்வன்.காசிராஜன் மற்றும் குழந்தைகள் மிகவும் சிறப்பாக நடித்திருந்தனர். கவிஞர்.வில்லியனூர் பழனி அவர்களின்
கவிதையாக்கத்தின் சிறப்பினை நன்கு உணர முடிந்தது.
ஒரு
மிகப் பெரிய பணியினை தனியொருவராக சாதித்திருக்கும் கலைமாமணி ஜெயஸ்ரீ நாராயணனின் உழைப்பும்
திறமையும் பாராட்டத்தக்கது. பங்காரி-சிங்காரி நாட்டிய நாடகத்தின் வெற்றி கூட்டு முயற்சிக்கும், தளராத உழைப்புக்கும் கிடைத்த வெற்றி.
நிகழ்ச்சியின்
இன்னொரு சிறப்பம்சம் கவிதாயினி உமாமோகனின் தேனினும் இனிமையான தொகுப்புரை. மறைந்து வரும்
மண்ணின் மணம் பேசும் கலைகளை ஆதரிக்கிற வேலைகளைச் செய்யும் புதுச்சேரி தொலைக்காட்சியின்
நோக்கம் பாராட்டத்தக்கது. தொடரட்டும்
புதுச்சேரி
தொலைக்காட்சியின் இலட்சிய இப்பயணம்
… இந்த நிகழ்ச்சியினை பார்க்க முடியாமல்
போய் விட்டதே என்று நினைக்கிறவர்களுக்கு ஒரு இனிய செய்தி .. தூர்தர்ஷனின் தேசிய சேனலில்
இந்த நிகழ்ச்சி செப்டம்பர் மாதம் 20ம் தேதி காலை 8 மணிக்கு
ஒலி/ஒளிபரப்பாகிறது .. அவசியம் கேளுங்க.
Subscribe to:
Comments (Atom)