சுற்றறிக்கை
புதுச்சேரி
கலை இலக்கியப் பெருமன்றமும் புல்வெளி இலக்கிய அமைப்பும்
இணைந்து நடத்தும்
இரண்டு நாள்
சிறுகதைப் பயிற்சிப் பட்டறை
தமிழ் இலக்கிய வரலாற்றில் தமிழ்ச் சிறுகதைகளுக்கென
தனித்த இடமுண்டு. தமிழின் முதல் சிறுகதை என அறிஞர்களால் சுட்டப்படுகின்ற பாரதியின்
ஆறில் ஒரு பங்கு, வ.வே.சு.ஐயரின் குளத்தங்கரை அரசமரம் சொன்ன கதை இரண்டும் புதுச்சேரியில்
இருந்து எழுதப்பட்டவை. மணிக்கொடி இதழ், சிறுகதை இலக்கியத்தை வளர்த்தெடுத்தது. புதுமைப்பித்தன்,
கு.ப.ரா., லா.ச.ரா., மௌனி, ஜெயகாந்தன், பிரபஞ்சன், அம்பை, எஸ்.ரா, ஜெயமோகன்
எனப் பல ஆளுமைகள் சிறுகதை இலக்கியத்தில் தனிமுத்திரை பதித்தனர்.
தற்போது
சிறுகதை இலக்கியத்தில் ஒருவிதத் தேக்கநிலை காணப்படுகிறது. எனவே, சிறுகதை இலக்கியத்தில்
ஆர்வத்தை உண்டாக்கும் வகையில் புதுச்சேரியில் மே 28 மற்றும் 29 (சனி & ஞாயிறு) ஆகிய இரண்டு நாட்கள் பயிற்சிப் பட்டறை நடத்தப்படவுள்ளது.
தமிழின்
முக்கியமான சிறுகதையாசிரியர்கள் உலகச் சிறுகதைகள்
குறித்தும், இந்தியச் சிறுகதைகள் குறித்தும்,
தமிழ்ச் சிறுகதையின் போக்குகள் குறித்தும்
விரிவாகக் கலந்துரையாடவுள்ளனர்.
இந்த
இரண்டு நாள் சிறுகதைப் பயிற்சிப் பட்டறையில் கலந்துகொள்ள விருப்பமுடையவர்கள் tamilshortstory@gmail.com
என்ற மின்னஞ்சல் முகவரிக்குத் தங்களைப் பற்றிய சுயவிவரக் குறிப்புடன் இதற்கு முன்பு
தாங்கள் சிறுகதைகள் எழுதியிருந்தால் அதில் ஏதேனும் ஒரு சிறுகதையினையும் இணைத்து அனுப்ப
வேண்டும். 35 பங்கேற்பாளர்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு. பங்கேற்பாளர்களிடமிருந்து
250/- ரூபாய் பதிவுக் கட்டணம் வசூலிக்கப்படும். 35 வயதிற்குட்பட்டவர்கள் மட்டுமே பயிற்சிப்
பட்டறையில் கலந்துகொள்ள விண்ணப்பிக்கலாம். பங்கேற்பாளர்களுக்கு மதிய உணவு மற்றும் தேநீர்
ஏற்பாடு செய்து தரப்படும்.
விண்ணப்பிக்க
வேண்டிய கடைசி நாள் : 10.05.2016.
தொடர்புக்கு
:-
9894583715 - பிரபஞ்சன்
9843177943 - எல்லை சிவக்குமார்
9444327507 - பா. இரவிக்குமார்
8760711334 - மனுஷி