Sunday, 19 February 2017

6ஆவது குறும்பட ஆவணப்பட விழா

6ஆவது குறும்படத் திருவிழாவில் திரையிடப்பட்ட குறும்படம் ROLL NO 41 - தனியார் பள்ளிகளில் விளையாட்டு வீரனாக விளங்கும் குழந்தைகளுக்கு எந்த அங்கீகாரமும் இல்லை என்று சொல்லி கண்ணீர் விட்டு இறுதியில் அரசு பள்ளியில் சேரும் ஒரு மாணவனின் பதிவு .. மிக அருமை .. இந்த படத்தை இயக்கி நடித்த அந்த குட்டிப் பையன் மாஸ்டர் பிராகி .. பாராட்டுக்கள் பிராகி.
6ஆவது குறும்படத் திருவிழாவில் திரையிடப்பட்ட குறும்படம் பனை - பனை மரத்தின் சிறப்பம்சங்களை விளக்கும் அருமையான படம் - பனைக்கென ஒரு அரசுத் துறை இருந்தும் அதன் மீது போதுமான கவனம் செலுத்தவில்லை என்பதும் கூறப்படுகிறது .. பட இயக்குனர் திரு.அருண்மொழிவர்மன், கடலூர்..
இயக்குனர் சிகரம் திரு.கே.பாலசந்தர் குறித்த ஒரு ஆவணப்படம் - "இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் (1930-2014) - சொன்னால் நம்ப மாட்டீர்கள் இந்தப் படத்தை தயாரித்தது தமிழ் தெரியாத ஒரு இயக்குனர் - திரு.பிஸ்ட் (M.S.BISHT) பிலிம்ஸ் டிவிஷன் தயார்த்துள்ள படம் - மிக மிக சிறப்பாக இருக்கிறது - மிகவும் அருமையான பதிவு --
பிலிம்ஸ் டிவிஷன் பல்வேறு மிக மிக சிறப்பான ஆவணப்படங்களையும், குறும்படங்களையும் பல்வேறு சிறப்பான இயக்குனர்களைக் கொண்டு தயாரித்து வருகிறது. ஆனால் அவை மக்களைச் சென்றடைய என்ன வழி .. ஆனால் அவசியம் கொண்டு சேர்க்கப்பட வேண்டும்
கோவையில் நடைபெற்ற 1998 பிப்ரவரி 14 சம்பவங்களை ஒட்டி நடைபெற்ற மதக் கலவரங்களின் பின்னணியில் எடுக்கப்பட்ட 3 நிமிட குறும்படம் "கர்சீப்" - இன்னும் சற்று ஆழமாக யோசித்து கோவைக் கலவரத்தை அருமையான டாக்குமென்ட்ரி படமா எடுத்திருக்கலாமே என்று தோன்றியது.. இயக்குனர் திரு.ஜி.எம்.சண்முகராஜ்

Saturday, 18 February 2017

18.02.2017 நிகழ்வுகள்
6வது சர்வ்தேச ஆவணப்பட குறும்பட விழாவில் 18.02.2017 அன்று திரையிடப்பட்ட படம் WHERE TO INVADAE NEXT என்கிற படம். அமெரிக்கர் ஒருவர் உலகின் சில நாடுகளுக்கு சென்று அங்குள்ள நிலைமையை அமெரிக்காவுடன் ஒப்பிட்டுப் பார்த்து அமெரிக்காவை விட அந்த நாடுகள் கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் முன்னேறி வருவதைக் கண்டு பெருமூச்சு விட்டு நம்மையும்ஆச்சரியப்பட வைக்கிறார் ..குறிப்பாக பின்லாந்து ஜெர்மனி,போர்ச்சுகல், நார்வே, டுனீசியா, ஐஸ்லாந்து நாடுகளுக்கு நம்மை அழைத்துச் செல்கிறார்.
6வது சர்வதேச ஆவணப்பட குறும்பட விழா மலரை மாண்புமிகு க்.லட்சுமிநாராயணன் அவர்கள் வெளியிட்டார்.
6வது சர்வதேச ஆவணப்பட குறும்பட விழாவில் இயக்குனர், பாடலாசிரியர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முகத் திறமை கொண்ட திரு.பஞ்சு அருணாச்சலம் அவர்களைப் பற்றிய குறும்படம் திரையிடப்பட்டது. 6வது சர்வதேச ஆவணப்பட குறும்பட விழாவில் இயக்குனர் பஞ்சு அருணாசலம் அவர்களைப்பற்றிய டாக்குமெண்ட்ரி திரைப்படம் A CREATOR WITH MIDAS TOUCH திரையிடப்பட்டது. அதன் இயக்குனர் திரு.தனஞ்செயன் மற்றும் எடிட்டர்.திரு.;விக்னேஷ் கெளரவிக்கப்பட்டனர்.
6வது சர்வதேச ஆவணப்பட குறும்பட விழாவில் திருமிகு.க.இலட்சுமிநாராயணன், அரசு ஊழியர் சங்கத்தின் கெள்ரவத் தலைவர்.சி.ஹெச்.பாலமோகனன், தோழர்.சு.இராமச்சந்திரன் ...













Thursday, 16 February 2017

புதுச்சேரி குறும்பட ஆவணப்பட விழா - 2017 - பகுதி ஒன்று

6-ஆவது ஆவணப்பட குறும்பட விழா இன்று 16.02.2016 புதுச்சேரி பல்கலைக்கழக ஜவஹர்லால் நேரு ஆடிட்டோரியத்தில் இனிமையாக தொடங்கியது. விழாவில் முதல் ஆவணப்படமாக "இறுதி ஊர்வலம்" திரையிடப்பட்டது. இது புதுச்சேரி பல்கலைக் கழக மாணவர்களின் சொந்த தயாரிப்பாகும்.