Wednesday, 5 December 2018

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் - விருது வழங்கும் விழா 2018








புதுவைப்பரணி – செய்திகள்
       தமிழ்நாடு கலைஇலக்கியப் பெருமன்றம் மற்றும் நியூ செஞ்சூரி புக் ஹவுஸ் இணைந்து நடத்தும் “விருது வழங்கும் விழா – 2018” - 08.12.2018 சனிக்கிழமை மாலை 5 மணி முதல் புதுச்சேரி ஜெயராம் உணவக கருத்தரங்கக் கூடத்தில் நடத்திட உள்ளன.
       விழாவில் திரு.ஆர்.விசுவநாதன் (முன்னாள் அமைச்சர் – புதுச்சேரி), முனைவர்.இரா.காமராசு (பொதுச்செயலாளர், த.க.இ.பெ) திரு.ப.பா.ரமணி (பொருளாளர், த.க.இ.பெ) திரு.அ.மு.சலீம் வாழ்த்துரை வழங்குகின்றனர்.
       எழுத்தாளர்.பிரபஞ்சன் சிறப்புரையாற்றுகிறார்.
       விருதுகள் வழங்கி பாராட்டுரை : திரு.;வே.நாராயணசாமி – மாண்புமிகு முதல் அமைச்சர், புதுச்சேரி அரசு.
       விருதாளர்களும் அவர்தம் படைப்புகளும் :
வாழ்நாள் சாதனையாளர் – சிற்பி சக்தி விருது :
தொல்லியல் ஆய்வாளர் செந்தீ நடராசன்
தமிழியல் ஆளுமைக்கான சிலம்புச் செல்வர் ம.பொ.சி. விருது :
முனைவர் இராம.சுந்தரம்
ஆய்வு நூல்கள்
பேராசிரியர் நா.வானமாமலை நினைவு விருது :
முனைவர். கே.பழனிவேலு
(தொல்காப்பியத் திணைக் கோட்பாடு, திறனாய்வியல் நோக்கு)
முதுமுனைவர் வ.ஐ.சுப்பிரமணியன் நினைவு விருது :
முனைவர்.சிலம்பு.நா.செல்வராசு
(தொல் தமிழர் திருமண முறை)
கட்டுரை நூல்கள் :
என்.சி.பி.எச். இராதாகிருஷ்ணமூர்த்தி நினைவு விருது :
பேரா.பொ.முத்துக்குமரன் மற்றும் முனைவர்.ம.சாலமன் பெர்னாட்ஷா
(அழிவின் விளிம்பில் அந்தமான்)
மேலவாசல் கோ.இராமசாமி நினைவு விருது :
ராமச்சந்திர வைத்தியநாத்
(சென்னப்பட்டணம் மண்ணும் மக்களும்)
கவிதை நூல்கள் :
பின்னையூர்.மா.சண்முகம் நினைவு விருது :
தனசக்தி
வாளிப்பற்ற உடல்காரி
கே.சி.எஸ்.அருணாசலம் நினைவு விருது :
சஹானா
(கண் அறியாக்காற்று)
சிறுகதை நூல்கள் :
எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமி நினைவு விருது :
வி.ஜீவகுமாரன்
(நிர்வாண மனிதர்கள்)
திருமதி.சுந்தரி சாந்திலால் நினைவு விருது :
விஜே
(வாசிக்க மறந்த பக்கங்கள்)
சிறுவர் நூல்கள்
தவத்திரு குன்றக்குடி அடிகளார் நினைவு விருது :
நெல்லை.சு.முத்து
(முத்துவைக் கேளுங்கள்)
எம்.கெளதம் நினைவு விருது :
ஏ.ஆர்.முருகேசன்
(சிந்துவும் வண்ணக்குருவியும்)
நாவல்கள்
அழகியநாயகி அம்மாள் நினைவு விருது :
அண்டனூர் சுரா.
(முத்தன்பள்ளம்)
தென்னமநாடு – இராமசாமி மாரியம்மாள் நினைவு விருது :
சைலபதி
(பெயல்)
மொழிபெயர்ப்பு நூல்கள்
தொ.மு.சி.ரகுநாதன் நினைவு விருது :
ச.வீரமணி மற்றும் தஞ்சை ரமேஷ்
(குஜராய் – திரைக்குப்பின்னால்)
அறந்தை நாராயணன் நினைவு விருது :
முனைவர்.தி.உமாதேவி
(ராதிகா சாந்தவனம்)
குறும்படங்கள்
தோழர்.பா.முத்துசாமி நினைவு விருது :
அருண் பகத்
(தாகம்)
பவானி பி.என்.பாலு – பாக்கியலட்சுமி நினைவு விருது
புஷ்பநாதன் ஆறுமுகம்
(காவல் தெய்வம்)