புதுச்சேரியில் உள்ள சிற்றிதழாளர்கள் நலனுக்காக அமைப்பு ஒன்றினைத் தொடங்கினோம். முதலில் புதுச்சேரி சிற்றிதழ் இயக்கம் எனப் பெயரிட்டோம். அப்பெயரில் அமைப்பு இருக்கிறது என்பதால் புதுச்சேரி சிறுபத்திரிக்கையாளர் சங்கம் என்கிற பெயரிட்டோம். அதுவும் ஏற்கேனவே தொடங்கப்பட்டு விட்டது என பதிவுத் துறையில் சொல்லப்பட்ட நிலையில் மிகவும் ஆழமாக பல நண்பர்களுடன் ஆலோசித்து "புதுச்சேரி சிற்றிதழ் இயக்கம்" எனப்பெயரிட்டோம். பதிவும் கிடைத்து விட்டது.
"புதுச்சேரி சிற்றிதழ் இயக்கம்" தொடக்க விழா நாளை மாலை 6 மணிக்கு புதுச்சேரி நீடராஜப்பய்யர் வீதியில் உள்ள செகா ஆர்ட் கேலரியில் நடைபெற உள்ளது. இயக்கத்தினை திருமிகு.க.இலட்சுமிநாராயணன் - சட்டமன்ற உறுப்பினர் தொடங்கி வைக்க உள்ளார்கள். பத்திரிக்கையாளரும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைச் செயலாருமாகிய தோழர்.மயிலை பாலு சிறப்புரை ஆற்றிட உள்ளார்.
No comments:
Post a Comment