Saturday, 10 September 2016

மும்பை அருங்காட்சியகத்துக்கு அழைக்கிறோம்...

மும்பையில் உள்ள அருங்காட்சியகத்தைப் பார்த்து மெய் சிலிர்த்துப் போனோம். மிக அருமையாக பராமரித்து வைத்திருக்கிறார்கள் ..












மும்பை - இந்தியாவின் நுழைவு வாயில்

மெய் சிலிர்க்க வைத்த இந்தியாவின் நுழைவு வாயில் (மும்பை) அருகில் தாஜ் ஹோட்டல் ..


Friday, 9 September 2016

புதுச்சேரியும், சென்னையும் கழுகுப்பார்வைகளில்...







பாரதியர் நினைவு நாள் நிகழ்வு - 12.09.2016

பாரதி அன்பர்கள் அறக்கட்டளை சார்பில் வருகிற 12.09.2016 திங்கள் மாலை 6 மணிக்கு "மஹாகவி பாரதியார் நினைவு நாள் சிறப்புரை நிகழ்வு புதுச்சேரி ஈசுவரன் கோவில் வீதியில் உள்ள மஹாகவி பாரதியார் நினைவு அருங்காட்சியகத்தில் நடைபெறுகிறது. வரவேற்புரை சிவ.மாதவன் தலைமை ச.ஹேமசந்திரன் முன்னிலை க.பஞ்சாங்கம் சிறப்புரை முனைவர்.ச.சுப்புரெத்தினம் (தமிழ்ப்பேராசிரியர் (பணி நிறைவு), தருமபுரம் ஆதீனக் கலைக்கல்லூரி, மயிலாடுதுறை.

தோழர்.திருவுடையானுக்கு அஞ்சலி

புதுச்சேரி மாநில கலை இலக்கியப் பெருமன்றமும், முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் புதுச்சேரியும் இணைந்து வருகிற ஞாயிற்றுக்கிழமை 11.09.2016 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி முதல் புதுச்சேரி முல்லை நகர் மூவேந்தர் வீதியிலுள்ள அரசு ஊழியர் சம்மேளன அலுவலகத்தில் (புதுபேருந்து நிலையத்திற்கு எதிரில்) ,மக்கள் பாடகன் திருவுடையான் அவர்களுக்கு அஞ்சலி நிகழ்வையும், புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர் பேரவை சிறப்பு மலர் வைடர்ஸ்டாண்ட் (WIDERSTAND) மற்றும் ராணா அயூப் அவர்களின் குஜராஜ் கோப்புகள் (மறைக்கப்பட்ட கோரவடிவங்கள்) நூல்களின் அறிமுக விழாவினையும் நடத்திட உள்ளன. பங்கேற்க அன்புடன் அழைக்கிறோம்.



Wednesday, 3 August 2016

மரம் வெட்டிகள் ...

புதுச்சேரி மின்சார வாரியம் மிகவும் பெருமை வாய்ந்தது.. மற்ற மாநிலங்களில் எப்போதாவது தான் பராமரிப்பு செய்வார்கள் .. புதுச்சேரியில் தான் உலகிலேயே தினமும் பராமரிப்பு செய்கிறார்கள்.. இது மட்டுமல்ல .. பராமரிப்பின் போது மரங்களை எல்லாம் வெட்டிச் சாய்க்க இவர்கள் தயங்குவதில்லை.. ஒரு மரம் வளர்க்க எவ்வளவு பாடுபட வேண்டியிருக்கிறது என்பது இங்கு பணிபுரியும் அதிகார்கள்மார்களுக்கு தெரியவில்லை போலும் .. ஒரு சாதாரண குடிமகன் மரத்தை வெட்டியிருந்தால் உடனே வனத்துறை வந்து வழக்கு பதிவு செய்து கைது செய்துவிடும். ஆனால் இங்கு செய்வது அரசுத் துறையாயிற்றே .. என்ன செய்வது .. (வேடிக்கை பார்க்க வேண்டியதுதான்) .. யாராவது மி்ந்துறையை தட்டிக் கேட்க மாட்டார்களா ...? மேலும் படங்களுக்கு PUDUVAIPPARANI.BLOGSPOT.COM வருக







Friday, 6 May 2016

இரண்டு நாள் சிறுகதை பயிற்சிப் பட்டறை

சுற்றறிக்கை
புதுச்சேரி கலை இலக்கியப் பெருமன்றமும் புல்வெளி இலக்கிய அமைப்பும்
இணைந்து நடத்தும்
இரண்டு நாள் சிறுகதைப் பயிற்சிப் பட்டறை

          தமிழ் இலக்கிய வரலாற்றில் தமிழ்ச் சிறுகதைகளுக்கென தனித்த இடமுண்டு. தமிழின் முதல் சிறுகதை என அறிஞர்களால் சுட்டப்படுகின்ற பாரதியின் ஆறில் ஒரு பங்கு, வ.வே.சு.ஐயரின் குளத்தங்கரை அரசமரம் சொன்ன கதை இரண்டும் புதுச்சேரியில் இருந்து எழுதப்பட்டவை. மணிக்கொடி இதழ், சிறுகதை இலக்கியத்தை வளர்த்தெடுத்தது. புதுமைப்பித்தன், கு.ப.ரா., லா.ச.ரா., மௌனி, ஜெயகாந்தன், பிரபஞ்சன், அம்பை, எஸ்.ரா, ஜெயமோகன் எனப் பல ஆளுமைகள் சிறுகதை இலக்கியத்தில் தனிமுத்திரை பதித்தனர்.
தற்போது சிறுகதை இலக்கியத்தில் ஒருவிதத் தேக்கநிலை காணப்படுகிறது. எனவே, சிறுகதை இலக்கியத்தில் ஆர்வத்தை உண்டாக்கும் வகையில் புதுச்சேரியில் மே 28 மற்றும் 29 (சனி & ஞாயிறு) ஆகிய இரண்டு நாட்கள் பயிற்சிப் பட்டறை நடத்தப்படவுள்ளது.
தமிழின் முக்கியமான சிறுகதையாசிரியர்கள் உலகச் சிறுகதைகள் குறித்தும், இந்தியச் சிறுகதைகள் குறித்தும், தமிழ்ச் சிறுகதையின் போக்குகள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடவுள்ளனர்.
இந்த இரண்டு நாள் சிறுகதைப் பயிற்சிப் பட்டறையில் கலந்துகொள்ள விருப்பமுடையவர்கள் tamilshortstory@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்குத் தங்களைப் பற்றிய சுயவிவரக் குறிப்புடன் இதற்கு முன்பு தாங்கள் சிறுகதைகள் எழுதியிருந்தால் அதில் ஏதேனும் ஒரு சிறுகதையினையும் இணைத்து அனுப்ப வேண்டும். 35 பங்கேற்பாளர்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு. பங்கேற்பாளர்களிடமிருந்து 250/- ரூபாய் பதிவுக் கட்டணம் வசூலிக்கப்படும். 35 வயதிற்குட்பட்டவர்கள் மட்டுமே பயிற்சிப் பட்டறையில் கலந்துகொள்ள விண்ணப்பிக்கலாம். பங்கேற்பாளர்களுக்கு மதிய உணவு மற்றும் தேநீர் ஏற்பாடு செய்து தரப்படும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 10.05.2016.
தொடர்புக்கு :-
             9894583715  -      பிரபஞ்சன்
                    9843177943  -      எல்லை சிவக்குமார்
                    9444327507  -      பா. இரவிக்குமார்
                    8760711334  -      மனுஷி

          மின்னஞ்சல் முகவரி      :         tamilshortstory@gmail.com