Wednesday, 20 May 2015

நல்லி - திசை எட்டும் மொழியாக்க இலக்கிய விருதுகள் - 2015

நல்லி - திசை எட்டும் மொழியாக்க இலக்கிய விருதுகள் - 2015
மொத்த பரிசுத் தொகை ரூ.1 இலட்சம்
மொழியாக்கப்படைப்பாளிககளைப் பெருமைப்படுத்தி அத்துறையை வளப்படுத்தும் நோக்குடன் திசை எட்டும் இதழின் தலைமைப் புரவலர் பத்மஸ்ரீ நல்லி குப்புசாமி செட்டியார் அவர்கள் நிறுவியுள்ள நல்லி-திசை எட்டும் மொழியாக்க விருதுகளுக்கான போட்டியில் பங்கு பெற நூல்கள் வரவேற்கப்பட்டுள்ளது.
- தமிழிலிருந்து ஆங்கிலம் மற்றும் பிற இந்திய மொழிகளுக்குச் சென்ற நூல்கள் இரண்டு
- ஆங்கிலம் மற்றும் பிற இந்திய மொழிகளிலிருந்து தமிழுக்கு வந்த நூல்கள் இரண்டு
- மொத்தம் 4 விருதுகள், ஒவ்வொன்றிற்கும் ரொக்கப்பரிசு ரூ.15,000/-

போட்டியில் கலந்து கொள்ளாத மூத்த மொழிபெயர்ப்பாளர்களில் ஒருவர் - வாசகர்களின் பரிந்துரைகள் மற்றும் ஆசிரியர் குழுவின் பரிசீலனையின்படி - ஒரு வாழ்நாள் சாதனையாளர் தேர்ந்தெடுக்கப்பட்டு ரூ.20,000/- ரொக்கப்பரிசு வழங்கப்படும்.
மேல்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை மொழியாக்கத் துறையில் ஊக்கப்படுத்தும் வகையில் மொழியாக்கப் போட்டியும் நடைபெறுகிறது. இத்திட்டத்துக்கு மொத்தப் பரிசுத் தொகை ரூ.20,000/- கல்லூரி மாணவர்களுக்கு : முதல் பரிசு ரூ.5,000/- இரண்டாம் பரிசு ரூ.3,000/- மூன்றாம் பரிசு ரூ.2,000/- பள்ளி மாணவர்களுக்கு : முதல் பரிசு ரூ.5,000 - இரண்டாம் பரிசு ரூ.3,000/- - மூன்றாம் பரிசு ரூ.2,000/-
விருதாளர்களுக்கு 2015-ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் நடைபெறும் விழாவில் ரொக்கப் பரிசுகளும் பாராட்சுப் பத்திரங்களும் வழங்கப்படும். பரிசுக்குரிய நூல்களின் பதிப்பாளர்களும் விழாவில் பாராட்டுப் பத்திரம் வழங்கி கெள்ரவிக்கப்படுவார்கள்.
மொழியாக்கப் படைப்பாளிகள் கடந்த ஐந்து வருடங்களில் (2010-2015) வெளியான தங்கள் நூல்களில் மூன்று பிரதிகளை கீழ்க்கண்ட இணைப்புகளுடன் ஆசிரியர், திசை எட்டும், 6 பிள்ளையார் கோயில் தெரு, மீனாட்சிப்பேட்டை, குறிஞ்சிப்பாடி 607302 போன் : 04142-258314 - செல் 9443043583 என்ற முகவரிக்கு 2015 ஜீன் 15-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
தேவையான இணைப்புகள்
மூல நூலின் ஒரு பிரதி, தங்கள் இலக்கியப் பணி உள்ளிட்ட வாழ்க்கைக் குறிப்பு, புகைப்படம்
-- குறிஞ்சிவேலன், ஆசிரியர், திசை எட்டும் மொழியாக்க காலாண்டிதழ் குறிஞ்சிப்பாடி -

Tuesday, 19 May 2015

புதுச்சேரி - வாக்காளர் பட்டியல் சேர்ப்பு/திருத்தம் விவரம்

புதுச்சேரி வாக்காளப் பெருமக்களுக்கோர் செய்தி ..
வாக்காளர்கள் 24.05.2015 அன்று தங்கள் வாக்குச் சாவடிக்குச் சென்று தங்களுடைய ஆதார் விவரங்ககளையும், தங்களுடைய கைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி போன்ற விவரங்களையும் தாருங்கள். மேலும் தங்களுடைய பெயர், விலாசம் போன்றவற்றில் திருத்தங்கள் இருந்தாலும் அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பெயர் இருந்தால் அதனை நீக்கிக் கொள்ளவும் விண்ணப்பிக்கலாம். வாக்காளரின் பெயர் வாக்காளர் பட்டியலிருந்து நீக்கப்படுவாதாக இருந்தால் அது முறையான வழிமுறைகளை பின்பற்றியே நீக்கப்படும். இவ்வாறு புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி அவர்கள் தெரிவித்துள்ளார்கள். மேலும் விவரங்களுக்கு 0413-2292204 / 2292205 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Friday, 15 May 2015

தமிழ் அருட்சுனைஞர் ஓராண்டு பட்டயப்படிப்பு

பிறப்பு முதல் இறப்பு வரை உள்ள வாழ்வியல் சடங்குகளையும் கோவில் கடவுள் மங்கலம் மற்றும் நாட்பூசைகளையும் சிவதீக்கை பெற்று தமிழில் செய்ய உரிய பயிற்சி
எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் தமிழ்ப்பேராயம் தெய்வத்தமிழ் அறக்கட்டளையுடன் இணைந்து வடபழனி வளாகத்தில் நடத்தும் தமிழ் அருட்சுனைஞர் ஓராண்டு பட்டயப்படிப்பு (Diploma in Tamil Arutsunaignar).
தமிழ் வழிபாடு, தமிழ்ச்சடங்குகள், தமிழ் குடமுழுக்கு, தமிழ் ஆகமங்கள் குறித்த ஓராண்டு பட்டயப்படிப்பை (Diploma Course) SRM பல்கலைக் கழக வளாகத்தில் நடத்துகின்றது. மேற்படி வகுப்புகள் வாரயிறுதி விடுமுறைகளில் மாதம் 4 நாட்கள் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஒரு வாரம் விட்டு ஒரு வாரம் (Alternate Saturdays and Sundays) என்ற முறையில் இரண்டு பருவங்களாக (2 SEMESTERS) நடைபெறும். செந்தமிழ் வெள்விச் சதுரர் திரு.மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்கள் தலைமையில் முன்னிலையில் அவரால் பயிற்ருவிக்கப்பட்ட பயிற்சியாளர்கள் வாயிலாக நடத்தப்படும்.
மேலும் விவரங்களுக்கு :
தெய்வத்தமிழ் அறக்கட்டளை,
9/1 மாஞ்சோலை முதல் தெரு, கலைமகள் நகர்,
ஈக்காட்டுத்தாங்கல், சென்னை 600032.
மின்னஞ்சல் : WWW.DHEIVAMURASU.ORG / WWW.SRMUNIV.AC.IN / EDITOR@DHEIVATHAMIZH.ORG
கைபேசி : சரவணன் : 9884344958 / கருப்புசாமி : 9444079926 / தியாகராசன் 9380919082
கட்டணம் : ரூ.2500/-
தகுதி : 8ஆம் வகுப்பில் தேர்ச்சி.