Wednesday, 20 May 2015

நல்லி - திசை எட்டும் மொழியாக்க இலக்கிய விருதுகள் - 2015

நல்லி - திசை எட்டும் மொழியாக்க இலக்கிய விருதுகள் - 2015
மொத்த பரிசுத் தொகை ரூ.1 இலட்சம்
மொழியாக்கப்படைப்பாளிககளைப் பெருமைப்படுத்தி அத்துறையை வளப்படுத்தும் நோக்குடன் திசை எட்டும் இதழின் தலைமைப் புரவலர் பத்மஸ்ரீ நல்லி குப்புசாமி செட்டியார் அவர்கள் நிறுவியுள்ள நல்லி-திசை எட்டும் மொழியாக்க விருதுகளுக்கான போட்டியில் பங்கு பெற நூல்கள் வரவேற்கப்பட்டுள்ளது.
- தமிழிலிருந்து ஆங்கிலம் மற்றும் பிற இந்திய மொழிகளுக்குச் சென்ற நூல்கள் இரண்டு
- ஆங்கிலம் மற்றும் பிற இந்திய மொழிகளிலிருந்து தமிழுக்கு வந்த நூல்கள் இரண்டு
- மொத்தம் 4 விருதுகள், ஒவ்வொன்றிற்கும் ரொக்கப்பரிசு ரூ.15,000/-

போட்டியில் கலந்து கொள்ளாத மூத்த மொழிபெயர்ப்பாளர்களில் ஒருவர் - வாசகர்களின் பரிந்துரைகள் மற்றும் ஆசிரியர் குழுவின் பரிசீலனையின்படி - ஒரு வாழ்நாள் சாதனையாளர் தேர்ந்தெடுக்கப்பட்டு ரூ.20,000/- ரொக்கப்பரிசு வழங்கப்படும்.
மேல்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை மொழியாக்கத் துறையில் ஊக்கப்படுத்தும் வகையில் மொழியாக்கப் போட்டியும் நடைபெறுகிறது. இத்திட்டத்துக்கு மொத்தப் பரிசுத் தொகை ரூ.20,000/- கல்லூரி மாணவர்களுக்கு : முதல் பரிசு ரூ.5,000/- இரண்டாம் பரிசு ரூ.3,000/- மூன்றாம் பரிசு ரூ.2,000/- பள்ளி மாணவர்களுக்கு : முதல் பரிசு ரூ.5,000 - இரண்டாம் பரிசு ரூ.3,000/- - மூன்றாம் பரிசு ரூ.2,000/-
விருதாளர்களுக்கு 2015-ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் நடைபெறும் விழாவில் ரொக்கப் பரிசுகளும் பாராட்சுப் பத்திரங்களும் வழங்கப்படும். பரிசுக்குரிய நூல்களின் பதிப்பாளர்களும் விழாவில் பாராட்டுப் பத்திரம் வழங்கி கெள்ரவிக்கப்படுவார்கள்.
மொழியாக்கப் படைப்பாளிகள் கடந்த ஐந்து வருடங்களில் (2010-2015) வெளியான தங்கள் நூல்களில் மூன்று பிரதிகளை கீழ்க்கண்ட இணைப்புகளுடன் ஆசிரியர், திசை எட்டும், 6 பிள்ளையார் கோயில் தெரு, மீனாட்சிப்பேட்டை, குறிஞ்சிப்பாடி 607302 போன் : 04142-258314 - செல் 9443043583 என்ற முகவரிக்கு 2015 ஜீன் 15-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
தேவையான இணைப்புகள்
மூல நூலின் ஒரு பிரதி, தங்கள் இலக்கியப் பணி உள்ளிட்ட வாழ்க்கைக் குறிப்பு, புகைப்படம்
-- குறிஞ்சிவேலன், ஆசிரியர், திசை எட்டும் மொழியாக்க காலாண்டிதழ் குறிஞ்சிப்பாடி -

No comments:

Post a Comment