5-வது புதுச்சேரி சர்வதேச குறும்படம் மற்றும் ஆவணப்படத் திருவிழா
– 11-14 பிப்ரவரி 2016
தொடக்க விழாவில் விருந்தினர்களின்
உரைகள் :
பேரா.சென்னுபதி கே.ராமையா (DEAN – SCHOOL OF
MEDIA AND COMMUNICATIONS, PONDICHERRY UNIVERSITY):
இந்த விழாவின் மூலம் மாணவர்கள் ஊடகம் குறித்த
தங்களது ஆற்றலை வளர்த்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும். திரையிடுதலில் அனலாக் சகாப்தம்
முடிந்து தற்போது டிஜிட்டல் தொழில் நுட்பம்
புகுந்துள்ளது. சொல்ல வேண்டிய கருத்து மிக மிக முக்கியமானது. தற்போது தான் எங்கள் மாணவர்கள்
ஹைதராபாத் கல்விச்சுற்றுலா சென்று வந்துள்ளார்கள். பல ஸ்டுடியோக்களுக்கும் சென்று வந்துள்ளார்கள்.
துறைத் தலைவர் பேராசிரியர் திரு.அன்புச்செல்வம் அவர்கள் மிக சுறுசுறுப்பாகவும் வேகமாகவும்
பணியாற்றி வருகிறார். அவருக்கு என்னுடைய பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பேரா.அனிஷா பி.கான் (துணை வேந்தர் – பாண்டிச்சேரி
பல்கலைக்கழகம்) :
திரைப்படங்கள் நமக்கு தளர்வினைக் கொடுக்கக்
கூடியன. ஆனால் எல்லாத் திரைப்படங்களும் அந்த பணியினைச் செய்வதில்லை. ஆனால் குறும்படங்கள்
பல்வேறு விஷயங்களை ஆழமாக ஆராய்கின்றன. இங்கு சிரியா நாட்டில் நடைபெறும் நிகழ்வுகள்
குறித்த ஆவணப்படம் திரையிடப்பட இருப்பதாகச் சொன்னார்கள். மக்களின் கஷ்டங்களை அந்த ஆவணப்படம்
காட்டுவதாகச் சொன்னார்கள். உலகில் நடைபெறும் பல்வேறு விஷயங்களைப் பற்றி நாம் தெரிந்து
கொள்ள வேண்டும். இன்று எல்லாமே உள்ளங்கையில் உள்ளது. இந்த விழாவிலிருந்து பல தகவல்களை
மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த திரையிடல் நமது பாடத் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
மாணவர்கள் ஆவணப்படங்களை உருவாக்க வேண்டும்.
தோழர்.ச.தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் :
கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த விழா நடத்தப்பட்டாலும்
இது வரை எந்த துணை வேந்தரும் தொடக்க விழாவில் பங்கேற்றதில்லை. இந்த முறை துணை வேந்தர்
பங்கேற்றது எங்களுக்கெல்லாம் மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது. குறும்படங்களையும், ஆவணப்படங்களையும்
மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். தற்போது குறும்படங்களைப் பார்ப்பது ஒரு பண்பாடாகி
வருகிறது. குறிப்பாக சென்னையில் கோடம்பாக்கம் ஏரியாவில் ப்ளக்ஸ் பேனர்கள் வைத்து குறும்படங்களை
திரையிட்டு வருகிறார்கள்.
எடிட்டர் பி.லெனின் :
தமிழகத்தில் சிறந்த குறும்படங்களுக்கு விருது
வழங்குவதை கலைஞர் அவர்கள் அறிமுகப்பட்டுத்தினார்.
அதற்காக அவருக்கு நன்றி சொல்லச் சொன்னார்கள். மறுத்து விட்டோம். மக்களிடம் நல்ல
விஷயங்களை கொண்டு சென்று சேர்ப்பதற்காக அரசு தான் எங்களுக்கு நன்றி சொல்ல வேண்டுமே
தவிர நாங்கள் அல்ல என்று சொல்லி விட்டோம்.
விழாவில் மறைந்த முனைவர்.கே.ஏ.குணசேகரன் அவர்களுக்கும்,
முனைவர்.த.பரசுராமன் அவர்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது. அஞ்சலித் தீர்மானத்தை தோழர்.சு.இராமச்சந்திரன்
முன்மொழிந்தார்.