புதுச்சேரி மாநில கலை இலக்கியப் பெருமன்றமும், முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் புதுச்சேரியும் இணைந்து வருகிற ஞாயிற்றுக்கிழமை 11.09.2016 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி முதல் புதுச்சேரி முல்லை நகர் மூவேந்தர் வீதியிலுள்ள அரசு ஊழியர் சம்மேளன அலுவலகத்தில் (புதுபேருந்து நிலையத்திற்கு எதிரில்) ,மக்கள் பாடகன் திருவுடையான் அவர்களுக்கு அஞ்சலி நிகழ்வையும், புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர் பேரவை சிறப்பு மலர் வைடர்ஸ்டாண்ட் (WIDERSTAND) மற்றும் ராணா அயூப் அவர்களின் குஜராஜ் கோப்புகள் (மறைக்கப்பட்ட கோரவடிவங்கள்) நூல்களின் அறிமுக விழாவினையும் நடத்திட உள்ளன. பங்கேற்க அன்புடன் அழைக்கிறோம்.
Friday, 9 September 2016
Wednesday, 3 August 2016
மரம் வெட்டிகள் ...
புதுச்சேரி மின்சார வாரியம் மிகவும் பெருமை வாய்ந்தது.. மற்ற மாநிலங்களில் எப்போதாவது தான் பராமரிப்பு செய்வார்கள் .. புதுச்சேரியில் தான் உலகிலேயே தினமும் பராமரிப்பு செய்கிறார்கள்.. இது மட்டுமல்ல .. பராமரிப்பின் போது மரங்களை எல்லாம் வெட்டிச் சாய்க்க இவர்கள் தயங்குவதில்லை.. ஒரு மரம் வளர்க்க எவ்வளவு பாடுபட வேண்டியிருக்கிறது என்பது இங்கு பணிபுரியும் அதிகார்கள்மார்களுக்கு தெரியவில்லை போலும் .. ஒரு சாதாரண குடிமகன் மரத்தை வெட்டியிருந்தால் உடனே வனத்துறை வந்து வழக்கு பதிவு செய்து கைது செய்துவிடும். ஆனால் இங்கு செய்வது அரசுத் துறையாயிற்றே .. என்ன செய்வது .. (வேடிக்கை பார்க்க வேண்டியதுதான்) .. யாராவது மி்ந்துறையை தட்டிக் கேட்க மாட்டார்களா ...? மேலும் படங்களுக்கு PUDUVAIPPARANI.BLOGSPOT.COM வருக
Friday, 6 May 2016
இரண்டு நாள் சிறுகதை பயிற்சிப் பட்டறை
சுற்றறிக்கை
புதுச்சேரி
கலை இலக்கியப் பெருமன்றமும் புல்வெளி இலக்கிய அமைப்பும்
இணைந்து நடத்தும்
இரண்டு நாள்
சிறுகதைப் பயிற்சிப் பட்டறை
தமிழ் இலக்கிய வரலாற்றில் தமிழ்ச் சிறுகதைகளுக்கென
தனித்த இடமுண்டு. தமிழின் முதல் சிறுகதை என அறிஞர்களால் சுட்டப்படுகின்ற பாரதியின்
ஆறில் ஒரு பங்கு, வ.வே.சு.ஐயரின் குளத்தங்கரை அரசமரம் சொன்ன கதை இரண்டும் புதுச்சேரியில்
இருந்து எழுதப்பட்டவை. மணிக்கொடி இதழ், சிறுகதை இலக்கியத்தை வளர்த்தெடுத்தது. புதுமைப்பித்தன்,
கு.ப.ரா., லா.ச.ரா., மௌனி, ஜெயகாந்தன், பிரபஞ்சன், அம்பை, எஸ்.ரா, ஜெயமோகன்
எனப் பல ஆளுமைகள் சிறுகதை இலக்கியத்தில் தனிமுத்திரை பதித்தனர்.
தற்போது
சிறுகதை இலக்கியத்தில் ஒருவிதத் தேக்கநிலை காணப்படுகிறது. எனவே, சிறுகதை இலக்கியத்தில்
ஆர்வத்தை உண்டாக்கும் வகையில் புதுச்சேரியில் மே 28 மற்றும் 29 (சனி & ஞாயிறு) ஆகிய இரண்டு நாட்கள் பயிற்சிப் பட்டறை நடத்தப்படவுள்ளது.
தமிழின்
முக்கியமான சிறுகதையாசிரியர்கள் உலகச் சிறுகதைகள்
குறித்தும், இந்தியச் சிறுகதைகள் குறித்தும்,
தமிழ்ச் சிறுகதையின் போக்குகள் குறித்தும்
விரிவாகக் கலந்துரையாடவுள்ளனர்.
இந்த
இரண்டு நாள் சிறுகதைப் பயிற்சிப் பட்டறையில் கலந்துகொள்ள விருப்பமுடையவர்கள் tamilshortstory@gmail.com
என்ற மின்னஞ்சல் முகவரிக்குத் தங்களைப் பற்றிய சுயவிவரக் குறிப்புடன் இதற்கு முன்பு
தாங்கள் சிறுகதைகள் எழுதியிருந்தால் அதில் ஏதேனும் ஒரு சிறுகதையினையும் இணைத்து அனுப்ப
வேண்டும். 35 பங்கேற்பாளர்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு. பங்கேற்பாளர்களிடமிருந்து
250/- ரூபாய் பதிவுக் கட்டணம் வசூலிக்கப்படும். 35 வயதிற்குட்பட்டவர்கள் மட்டுமே பயிற்சிப்
பட்டறையில் கலந்துகொள்ள விண்ணப்பிக்கலாம். பங்கேற்பாளர்களுக்கு மதிய உணவு மற்றும் தேநீர்
ஏற்பாடு செய்து தரப்படும்.
விண்ணப்பிக்க
வேண்டிய கடைசி நாள் : 10.05.2016.
தொடர்புக்கு
:-
9894583715 - பிரபஞ்சன்
9843177943 - எல்லை சிவக்குமார்
9444327507 - பா. இரவிக்குமார்
8760711334 - மனுஷி
Thursday, 17 March 2016
PUDUCHERRY FILM FORUM
SCREENING OF SHORT / DOCUMENTARY / FEATURE
FILMS
ALL THE INVISIBLE
CHILDREN - TANZA
(Italy/France 2005, 17 min, Fiction, Short)
Language: Afrikaans, English
Seven shorts about childhood problem through the eyes of seven directors.
Tanza: Director Mehdi Chafer shows a boy called Tanza in an undefined country in Africa fighting in a civil war with machine gun and explosives, and dreaming on having his home and going to school.
A GOOD STORY
Germany, 2013, 20 min, Fiction, Short
Language: German with English subtitles
This film is about an elder woman Helga Landowsky who wants to buy a jug in an antiques shop in Goerlitz but the shop assistant does not want to sell it for money. Jakub Lato would only sell the jug for a good story - her story.
BICYCLE
India, 2015, 27 min, Fiction, Short
Language: Marathi with English subtitles
The story revolves around a new bicycle which the son gets after much effort from his father. What happens to this precious cycle on a fateful day and how would each one in the family handle it ?
(Italy/France 2005, 17 min, Fiction, Short)
Language: Afrikaans, English
Seven shorts about childhood problem through the eyes of seven directors.
Tanza: Director Mehdi Chafer shows a boy called Tanza in an undefined country in Africa fighting in a civil war with machine gun and explosives, and dreaming on having his home and going to school.
A GOOD STORY
Germany, 2013, 20 min, Fiction, Short
Language: German with English subtitles
This film is about an elder woman Helga Landowsky who wants to buy a jug in an antiques shop in Goerlitz but the shop assistant does not want to sell it for money. Jakub Lato would only sell the jug for a good story - her story.
BICYCLE
India, 2015, 27 min, Fiction, Short
Language: Marathi with English subtitles
The story revolves around a new bicycle which the son gets after much effort from his father. What happens to this precious cycle on a fateful day and how would each one in the family handle it ?
n
See
all the above short films at ….
n
VILIMBU NILAI
MAKKAL VAAZVATHARA MAIYAM, East Coast Road, (Near Shankara Vidyalaya
School, Lawspet, Puducherry 605008.
School, Lawspet, Puducherry 605008.
n
On
22.03.2016 – Tuesday – 6.30 pm sharp.
All are Welcome …
Thursday, 10 March 2016
உலக நூலக தினம் சிறப்புக்கூட்டம் 15.03.2016
முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்
உலக நூலக தினம் – சிறப்புக்கூட்டம்
நாள்
: 15.03.2016 – செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு
இடம்
: விளிம்புநிலை மக்கள் வாழ்வாதார மையம், கிழக்கு கடற்கரைச் சாலை, இலாசுப்பேட்டை, புதுச்சேரி
605008.
தலைமை :
தோழர்.ஞானசேகரன் –
மாவட்டச் செயலாளர் – மு.எ.க.சங்கம்
நூல் அறிமுகம் :
தோழர்.ம.மணிமாறனின் “தூரத்துப் புனைவுலகம்”
அறிமுகப்படுத்துபவர் : தோழர்.லெனின்பாரதி
சிறப்புரை:
“மறந்து போன வாசிப்பு”
தோழர்.கவிஞர்.பால்கி,
கடலூர்
பங்கேற்க அன்புடன் அழைக்கிறோம் …
Tuesday, 1 March 2016
ப(பி)டித்த கவிதை - அரைக்குட ஆரவாரங்கள்
படித்ததில் பிடித்தது....
அரைக்குட ஆரவாரங்கள் ...
கல்வியேதும் கற்காத கயவர் கூட்டம்
கல்லூரி பள்ளியெனக் கடைவ் ரித்துக்
கல்வியினை விற்கின்ற அவலம் இந்தக்
காசினியில் இங்கன்றி வேறெங் குண்டு ?
செல்வத்தைக் குவிப்பதற்காய்ச் சிந்தை தன்னைச்
சீரழிக்கும் செயலுக்குத் துணையாய் நின்று
அல்வழியில் மதுவிற்று ஆளு கின்ற
அரசாட்சி அரைக்குடத்தின் ஆர வாரம்
சவக்குழியாய்ச் சாலைகள், சாக்க டைகள்;
சந்தையின் நெரிசலெனக் கட்ட டங்கள்
கவர்தலிலே நீர்நிலைகள் எல்லா மிங்கே
காசாகும் பேராசைக் கையூட் டாட்சி;
சுவரோட்டி பெருகிட்ட சுற்றுச் சூழல்;
சூழ்சுவாசக் காற்றெல்லாம் சுரண்டல், ஊழல்;
அவவாழ்வு வாழ்கின்ற அடிமைக் கூட்டம்;
அரசாளும் அரைக்குடங்கள் ஆட்டம், பாட்டம்
ஏருழவர் இல்லத்துள் இருளின் ஆட்சி;
எத்தருக்கே யாவுமெனில் எங்கே மீட்சி ?
வாருகின்ற வரிப்பணத்தைச் சுருட்டி ஏழை
வயிற்றுனிலே அடிப்பதுவோ ? வறுமைக் கோட்டை
வேருடனே நீக்கியதாய் மாயம் காட்டும்
வித்தையிலே மயங்குவதோ ? விழித்தெ ழுந்து
சீருடைய நிறைகுடங்கள் கண்டெ டுப்போம்;
சிதறட்டும் அரைக்குடங்கள் ஆரவாரம்
_கவிஞர்.கே.பி.பத்மநாபன், கோவை
Subscribe to:
Posts (Atom)















