Saturday, 10 September 2016

கலாச்சாரங்க வேற் எனினும் நாம் இந்தியரே ...

பாரத நாட்டின் சிறப்பம்சமே வேறு வேறு வகை கலாச்சாரங்கள், பண்பாடு, மொழி .. இவைகளையெல்லாம் ஒன்றிணைத்து உருவாகியிருப்பது தான் இந்தியா . இதில் ஒன்றை ஒன்று அழிக்க நினைப்பதோ, ஒழிக்க நினைப்பதோ மிக மிக தவறு.. வாருங்கள் அனைவரையும் பாராட்டுவோம்.. அனைத்து கலைகளையும் அழியாமல் காப்போம் .. அதுவே தேவை ..ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் சிறந்து நிற்கிறார்கள் ..



மும்பை அருங்காட்சியகத்துக்கு அழைக்கிறோம்...

மும்பையில் உள்ள அருங்காட்சியகத்தைப் பார்த்து மெய் சிலிர்த்துப் போனோம். மிக அருமையாக பராமரித்து வைத்திருக்கிறார்கள் ..












மும்பை - இந்தியாவின் நுழைவு வாயில்

மெய் சிலிர்க்க வைத்த இந்தியாவின் நுழைவு வாயில் (மும்பை) அருகில் தாஜ் ஹோட்டல் ..


Friday, 9 September 2016

புதுச்சேரியும், சென்னையும் கழுகுப்பார்வைகளில்...







பாரதியர் நினைவு நாள் நிகழ்வு - 12.09.2016

பாரதி அன்பர்கள் அறக்கட்டளை சார்பில் வருகிற 12.09.2016 திங்கள் மாலை 6 மணிக்கு "மஹாகவி பாரதியார் நினைவு நாள் சிறப்புரை நிகழ்வு புதுச்சேரி ஈசுவரன் கோவில் வீதியில் உள்ள மஹாகவி பாரதியார் நினைவு அருங்காட்சியகத்தில் நடைபெறுகிறது. வரவேற்புரை சிவ.மாதவன் தலைமை ச.ஹேமசந்திரன் முன்னிலை க.பஞ்சாங்கம் சிறப்புரை முனைவர்.ச.சுப்புரெத்தினம் (தமிழ்ப்பேராசிரியர் (பணி நிறைவு), தருமபுரம் ஆதீனக் கலைக்கல்லூரி, மயிலாடுதுறை.

தோழர்.திருவுடையானுக்கு அஞ்சலி

புதுச்சேரி மாநில கலை இலக்கியப் பெருமன்றமும், முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் புதுச்சேரியும் இணைந்து வருகிற ஞாயிற்றுக்கிழமை 11.09.2016 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி முதல் புதுச்சேரி முல்லை நகர் மூவேந்தர் வீதியிலுள்ள அரசு ஊழியர் சம்மேளன அலுவலகத்தில் (புதுபேருந்து நிலையத்திற்கு எதிரில்) ,மக்கள் பாடகன் திருவுடையான் அவர்களுக்கு அஞ்சலி நிகழ்வையும், புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர் பேரவை சிறப்பு மலர் வைடர்ஸ்டாண்ட் (WIDERSTAND) மற்றும் ராணா அயூப் அவர்களின் குஜராஜ் கோப்புகள் (மறைக்கப்பட்ட கோரவடிவங்கள்) நூல்களின் அறிமுக விழாவினையும் நடத்திட உள்ளன. பங்கேற்க அன்புடன் அழைக்கிறோம்.



Wednesday, 3 August 2016

மரம் வெட்டிகள் ...

புதுச்சேரி மின்சார வாரியம் மிகவும் பெருமை வாய்ந்தது.. மற்ற மாநிலங்களில் எப்போதாவது தான் பராமரிப்பு செய்வார்கள் .. புதுச்சேரியில் தான் உலகிலேயே தினமும் பராமரிப்பு செய்கிறார்கள்.. இது மட்டுமல்ல .. பராமரிப்பின் போது மரங்களை எல்லாம் வெட்டிச் சாய்க்க இவர்கள் தயங்குவதில்லை.. ஒரு மரம் வளர்க்க எவ்வளவு பாடுபட வேண்டியிருக்கிறது என்பது இங்கு பணிபுரியும் அதிகார்கள்மார்களுக்கு தெரியவில்லை போலும் .. ஒரு சாதாரண குடிமகன் மரத்தை வெட்டியிருந்தால் உடனே வனத்துறை வந்து வழக்கு பதிவு செய்து கைது செய்துவிடும். ஆனால் இங்கு செய்வது அரசுத் துறையாயிற்றே .. என்ன செய்வது .. (வேடிக்கை பார்க்க வேண்டியதுதான்) .. யாராவது மி்ந்துறையை தட்டிக் கேட்க மாட்டார்களா ...? மேலும் படங்களுக்கு PUDUVAIPPARANI.BLOGSPOT.COM வருக