Friday, 20 February 2015

சிதம்பரம் நாட்டியாஞ்சலி விழாவில் செல்வி கிருத்திகா

சிதம்பரம் நாட்டிய அஞ்சலி விழாவில் கிருத்திகா ரவிச்சந்திரனின் பரதநாட்டிய நிகழ்ச்சி 18.02.2015 அன்று நடைபெற்றது.
குரு.கலைமாமணி.ஜெயஸ்ரீ நாராயணன் நட்டுவாங்கம்,
திரு.வேல்முருகன் - வாய்ப்பாட்டு
திரு.அங்கப்பன் - மிருதங்கம்
திரு.ஸ்ரீனிவாசன் - வயலின்
திரு.கிரிஸ் - புல்லாங்குழல்
அந்த நிகழ்விலிருந்து சில படங்கள் ...


















Tuesday, 17 February 2015

குறும்படம் / டாக்குமென்ரி படங்கள் திரையிடல் ...

PUDUCHERRY FILM FORUM
No.3 32nd Cross, Avvai Nagar, Lawspet,
PUDUCHERRY 605008
Contact Nos. 9443067945 / 9443601439
E-mail : pondyfilms@gmail.com / puducherryfilmforum.blogspot.in


SCREENING OF SHORT FILMS / DOCUMENTS FILMS
22.02.2015 – SUNDAY 10.30 AM –


Title: Encounters at the End of the World
Director: Werner Herzog
Year: 2007
Duration: 99 minutes
Language: English
Country: USA

               Werner Herzog confirms his standing as poet laureate of men in extreme situations with "Encounters at the End of the World." In this visually stunning exploration, Herzog travels to the Antarctic community of McMurdo Station, headquarters of the National Science Foundation and home to 1,100 people during the austral summer (Oct-Feb). Over the course of his journey, Herzog examines human nature and Mother nature, juxtaposing breathtaking locations with the profound, surreal, and sometimes absurd experiences of the marine biologists, physicists, plumbers, and truck drivers who choose to form a society as far away from society as one can get.

கதைச் சுருக்கம் :

அண்டார்டிகா உலகின் மிகவும் குளிரான பகுதி. அங்கு அறிவியல் ஆய்வுப் பணிகளுக்காக நிறைய பேர் வசிக்கிறார்கள். அவர்களின் வாழ்க்கை நிலை எப்படி இருக்கிறது என்பதை வெர்னர் ஆய்வு செய்கிறார். இப்படம் அது குறித்து ஆழமான பல விஷயங்களை பதிவு செய்கிறது.

Sunday, 15 February 2015

கிருத்திகா ரவிச்சந்திரனின் பரத நாட்டிய நிகழ்ச்சிகள்

செல்வி.கிருத்திகா ரவிச்சந்திரனின் பரத நாட்டிய நிகழ்ச்சிகள் ..
 - 18.02.2015 - மாலை 0500 மணி முதல் 0520 மணி வரை - சிதம்பரம் நடராஜர் கோவில் நாட்டியாஞ்சலி விழா
-







20.02.2015 - இரவு 0800 மணி - புதுச்சேரி இலாசுப்பேட்டை பெத்துச்செட்டிப்பேட்டை அருள்மிகு சுப்ரமணியர் திருக்கோவில்
கண்டு களிக்க அன்புடன் அழைக்கிறோம். 

Friday, 13 February 2015

ஆதலினால் காதல் செய்வீர் ...

இன்று (14.02.2015) காதலர் தினம்
சிலரின் கண்களுக்கு காதல் என்றால் காமம் மட்டுமே தெரிகிறது. அதை கழிசடைப் பார்வை என்று கூடக் கொள்ளலாம். அல்லது அவர்கள் பார்வையில் காமம் மட்டுமே முன்னிலைப் படுத்தப்படலாம். அது பார்வைக் கோளாறு. காதல் என்பது காமம் மட்டும் சார்ந்தது அல்ல. அது சக உயிர் மீதான அன்பை, தனது ஆசைகளை, ஏக்ககங்களை, பரிமாறிக் கொள்வதற்கான ஒரு ஏற்பாடு என்று கூடக் கொள்ளலாம். காதல் தவறு என்றால் பல தெய்வங்களின் வரலாறே கேள்விக்குறியாகி விடும். எதுவுமே வரம்பு மீறும் போது கண்டிக்கலாம். தவறில்லை.  ஆனால் நான் சொல்வதைக் கேள்.. நீ இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும் என்றெல்லாம் ஹிட்லர் பாணியில் கட்டளையிட்டால் அதை ஏற்க முடியாது. இதற்கெல்லாம் பதில் மஹாகவி பாரதி சொன்னது போல .. "ஆதலினால் காதல் செய்வீர்"

Friday, 6 February 2015

இணைந்தே இருப்போம் .
விஜய் டிவியில் ஞாயிற்றுக்கிழமை இரவு தோறும் ஒளிபரப்பாகும் நீயா நானா தொடரை பார்க்காதவர்கள் இருக்க முடியாது. நீயா நானா என்றாலே முதலில் நினைவுக்கு வருபவர் திரு.கோபிநாத் தான். ஆனால் இந்த மனிதரின் பின்னால் பலரின் கடுமையான உழைப்பு உயிர்ப்புத்தன்மையோடு இருப்பதை கண்ணால் காணும் ஒரு அரிய வாய்ப்பு கிடைத்தது. என் மகள் செல்வி கிருத்திகாவோடு  திருக்குறளின் சிறப்பினை வெளிப்படுத்தும் சிறப்பு நீயா நானாவில் பங்கேற்பதற்காக சென்றிருந்தேன். கிட்டத்தட்ட 7 மணி நேரம் ஒலி/ஒளிப்பதிவு நடைபெற்றது. இதை எடிட் செய்து 1 அல்லது 1-1/2 மணி நேரம் ஒளிபரப்பப் போகிறார்கள். 8 கேமராக்கள், கிட்டத்தட்ட 15 ஊழியர்கள், அவர்களுக்கு தண்ணீர், தேனீர், உணவு பரிமாற சில ஊழியர்கள் பங்கேற்ற 50 பேர் இது தவிர பார்வையாளர் என்று ஏ.வி.எம். ஸ்டூடியோ அலங்கோலப்பட்டது. நிகழ்ச்சியை பதிவு செய்வதில் அனைவரும் காட்டிய முனைப்பு  சிறப்பாக இருந்தது.அதுவும் நிகழ்ச்சியை படமெடுத்துக் கொண்டிருந்த கேமராமேன் நண்பர்கள் சாப்பிடக் கூட எழுந்து செல்லாமல் நகரும் டிராலியில் உட்கார்ந்து கொண்டே படப்பிடிப்பு பணியினைப் பார்த்துக் கொண்டே சாப்பிடுவதும் தண்ணீர் குடிப்பதுமாக செயல்பட்டது உள்ளத்தை நெகிழச் செய்த்தது. அறிவு ஜீவிகள் நிறைந்த அரங்கில் ஒரு சில கருத்து மோதல்கள் நடந்த போதிலும் அனைவரையும் ஒன்றிணைத்து நிகழ்ச்சியை சிறப்பாக நண்பர் திரு கோபிநாத் கொண்டு சென்றது அதனினும் சிறப்பு. இணைந்து இருந்தால், கரங்களை இணைத்து இருந்தால் எந்த செயலும் வெற்றி பெறும் . சிறப்பு பெறும் ..  

இந்தியாவை இந்தியாவாக இருக்க விடுங்கள் ...

படித்ததில் பிடித்தது ..
"இந்தியாவை இந்தியாவாக இருக்க விடுங்கள் ...
டெல்லியில் நடந்த குடியரசு தின அணிவகுப்பில், ஓர் அலங்கார ஊர்தியின் பிரச்சாரப் படத்துக்குக் கீழே, இந்தியக் குடியரசு சட்டத்தின் முகவுரையிலிருந்து  'இறையாண்மை மிக்க ஜனநாயகக் குடியரசு" என்ற வாசகங்கள் மட்டுமே இடம் பெற்றிருந்தன. 'சமத்துவம்' 'மதச்சார்பின்மை' ஆகிய இரண்டு சொற்களும் விடுபட்டிருந்தன. எதிர்க்கட்சிகள் விளக்கம் கேட்டபோது "அவ்விரு சொற்களும் நீக்கப்படத்தான் வேண்டும்" என்று சிவசேனை கருத்து தெரிவிக்க, இந்த விவகாரம் பெரிய சர்ச்சையாக மாறியிருக்கிறது. நல்லவேளை இவ்விரு சொற்களையும் நீக்கப் போவதேயில்லை என்று பாஜக தலைவர் அமித் ஷா இப்போது கூறியிருக்கிறார்.
இந்தியாவின் உயிர்நாடியே அதன் பன்மைத்தன்மைதான். எத்தனை இனங்கள் .. எத்தனை மொழிகள் .. எத்தனை மதங்கள் ... சமமாதான சகவாழ்வின் மூலமாக மட்டுமே இந்தப் பன்மைத்தன்மையை நமது பலமாக ஆக்கிக் கொள்ள முடியும். "ஒரே இனம், ஒரே மொழி, ஒரே மதம்' என்ற கொள்கையோ இந்தியாவை மிகவும் பலவீனமாக ஆக்கிவிடும். பலமான இந்தியா வேண்டுமா, பலவீனமான இந்தியா வேண்டும என்ப;ட்ஹை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும் ...
(நன்றி : தி ஹிந்து (தமிழ்) -  பிப்ரவரி 3,2015)