Friday, 6 February 2015

இந்தியாவை இந்தியாவாக இருக்க விடுங்கள் ...

படித்ததில் பிடித்தது ..
"இந்தியாவை இந்தியாவாக இருக்க விடுங்கள் ...
டெல்லியில் நடந்த குடியரசு தின அணிவகுப்பில், ஓர் அலங்கார ஊர்தியின் பிரச்சாரப் படத்துக்குக் கீழே, இந்தியக் குடியரசு சட்டத்தின் முகவுரையிலிருந்து  'இறையாண்மை மிக்க ஜனநாயகக் குடியரசு" என்ற வாசகங்கள் மட்டுமே இடம் பெற்றிருந்தன. 'சமத்துவம்' 'மதச்சார்பின்மை' ஆகிய இரண்டு சொற்களும் விடுபட்டிருந்தன. எதிர்க்கட்சிகள் விளக்கம் கேட்டபோது "அவ்விரு சொற்களும் நீக்கப்படத்தான் வேண்டும்" என்று சிவசேனை கருத்து தெரிவிக்க, இந்த விவகாரம் பெரிய சர்ச்சையாக மாறியிருக்கிறது. நல்லவேளை இவ்விரு சொற்களையும் நீக்கப் போவதேயில்லை என்று பாஜக தலைவர் அமித் ஷா இப்போது கூறியிருக்கிறார்.
இந்தியாவின் உயிர்நாடியே அதன் பன்மைத்தன்மைதான். எத்தனை இனங்கள் .. எத்தனை மொழிகள் .. எத்தனை மதங்கள் ... சமமாதான சகவாழ்வின் மூலமாக மட்டுமே இந்தப் பன்மைத்தன்மையை நமது பலமாக ஆக்கிக் கொள்ள முடியும். "ஒரே இனம், ஒரே மொழி, ஒரே மதம்' என்ற கொள்கையோ இந்தியாவை மிகவும் பலவீனமாக ஆக்கிவிடும். பலமான இந்தியா வேண்டுமா, பலவீனமான இந்தியா வேண்டும என்ப;ட்ஹை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும் ...
(நன்றி : தி ஹிந்து (தமிழ்) -  பிப்ரவரி 3,2015)

No comments:

Post a Comment