இணைந்தே இருப்போம் .
விஜய் டிவியில் ஞாயிற்றுக்கிழமை இரவு தோறும் ஒளிபரப்பாகும் நீயா நானா தொடரை பார்க்காதவர்கள் இருக்க முடியாது. நீயா நானா என்றாலே முதலில் நினைவுக்கு வருபவர் திரு.கோபிநாத் தான். ஆனால் இந்த மனிதரின் பின்னால் பலரின் கடுமையான உழைப்பு உயிர்ப்புத்தன்மையோடு இருப்பதை கண்ணால் காணும் ஒரு அரிய வாய்ப்பு கிடைத்தது. என் மகள் செல்வி கிருத்திகாவோடு திருக்குறளின் சிறப்பினை வெளிப்படுத்தும் சிறப்பு நீயா நானாவில் பங்கேற்பதற்காக சென்றிருந்தேன். கிட்டத்தட்ட 7 மணி நேரம் ஒலி/ஒளிப்பதிவு நடைபெற்றது. இதை எடிட் செய்து 1 அல்லது 1-1/2 மணி நேரம் ஒளிபரப்பப் போகிறார்கள். 8 கேமராக்கள், கிட்டத்தட்ட 15 ஊழியர்கள், அவர்களுக்கு தண்ணீர், தேனீர், உணவு பரிமாற சில ஊழியர்கள் பங்கேற்ற 50 பேர் இது தவிர பார்வையாளர் என்று ஏ.வி.எம். ஸ்டூடியோ அலங்கோலப்பட்டது. நிகழ்ச்சியை பதிவு செய்வதில் அனைவரும் காட்டிய முனைப்பு சிறப்பாக இருந்தது.அதுவும் நிகழ்ச்சியை படமெடுத்துக் கொண்டிருந்த கேமராமேன் நண்பர்கள் சாப்பிடக் கூட எழுந்து செல்லாமல் நகரும் டிராலியில் உட்கார்ந்து கொண்டே படப்பிடிப்பு பணியினைப் பார்த்துக் கொண்டே சாப்பிடுவதும் தண்ணீர் குடிப்பதுமாக செயல்பட்டது உள்ளத்தை நெகிழச் செய்த்தது. அறிவு ஜீவிகள் நிறைந்த அரங்கில் ஒரு சில கருத்து மோதல்கள் நடந்த போதிலும் அனைவரையும் ஒன்றிணைத்து நிகழ்ச்சியை சிறப்பாக நண்பர் திரு கோபிநாத் கொண்டு சென்றது அதனினும் சிறப்பு. இணைந்து இருந்தால், கரங்களை இணைத்து இருந்தால் எந்த செயலும் வெற்றி பெறும் . சிறப்பு பெறும் ..

No comments:
Post a Comment