Sunday, 25 January 2015

திரைப்பட விழா - நான்காம் நாள் - நிறைவு

திரைப்பட விழா 4ம் நாள் நிகழ்வுகள்
      திரைப்பட விழாவின் நான்காம் நாள் நிகழ்வுகள் இன்று (25.11.2014) “பாட்டாளி படைப்பாளியான வரலாறு” ஆவணப்படம் திரையிடப்பட்டது. இயக்கம் சாரோன். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் குறித்த அருமையான பதிவு. இயல்பாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அரிய பல தகவல்களை உள்ளடக்கியுள்ளது.
      அதனைத் தொடர்ந்து “யாதும்” என்கிற ஆவணப்படம் திரையிடப்பட்டது. இக்குறும்படம் த.மு.எ.க.ச. வின் சிறந்த குறும்படத்திற்கான விருது பெற்ற படமாகும். இயக்கியவர் கோம்பை.எஸ்.அன்வர். இந்து முஸ்லிம் மக்களுக்கிடையேயான கலாச்சாரப் பாரம்பரியங்களை அழகுற வெளிப்படுத்தும் படம். சேர, சோழ மன்னர்கள் காலத்தில் இந்து முஸ்லிம் மக்களுக்கிடையே இருந்த உறவுகள், அது இன்றும் தொடரும் சூழ்நிலைகளை விளக்கும் படம்.
      அதனை அடுத்து “அரணையைக் கண்டிருக்கிறீர்களா” (HAVE YOU SEEN THE ARANA ?” என்கிற மலையாள மொழி குறும்படம் காட்டப்பட்டது. அரணை என்கிற சிறிய உயிரினத்தைக் கண்டீர்களா என்கிற தேடலில் தொடங்கி இஞ்சி பயிரிட்டு நஷ்டமடைந்த விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதைக் கூறும் படம். இயக்கம் : சுனண்டா தத். அதனைத் தொடர்ந்து  நிறைவு விழா நடைபெற்றது.
      இந்த திரைப்பட விழாவில் மிசோராம் மாநிலத்திலிருந்து 20 மாணவ மாணவிகள் கலந்து கொண்டது ஒரு சிறப்பான அம்சம்.  இது குறித்த பல்வேறு பதிவுகள் தொடரும்.
      பங்கேற்க முடியாமல் போனவர்களை நினைக்கும் போது வருத்தமாக இருக்கிறது.


























No comments:

Post a Comment