திரைப்பட
விழா 3ம் நாள் நிகழ்வுகள்
3ம் நாள் நிகழ்வின் தொடக்க குறும்படமாக “தமாஷ்”
(TAMAASH – THE PUPPET) திரையிடப்பட்டது. இயக்கம் : சத்யன்சூ சிங் மற்றும் தேவன்சூ
சிங் – காஷ்மீரி மொழிப்படம். தன்னை விட நன்றாகப் படிக்கும் மாணவன் மீது சிறுவன் அன்வர்
கொள்கின்ற பொறாமை அதன் தொடர்ச்சியாக நடைபெறக்கூடிய பல விஷயங்களை சுவாரசியமாக விவரிக்கும்
படம். இது சிறுவர்களுக்கான படம்.
அதனைத் தொடர்ந்து எடிட்டர் சிவக்குமார் அவர்களின்
திரைக்கதை எழுதுவது எப்படி என்கிற தலைப்பில் வகுப்பு நடைபெற்றது. (இது தனியே பதிவு
செய்யப்படும்).
பின்னர் “NEVERTHLESS IT MOVES” எங்கிற படம்.
புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர் அஷ்வந்த் ஜி.கிருஷ்ணன் இயக்கியது. காலப்போக்கில் பல்வேறு
மாற்றங்கள் நமது பொது போக்குவரத்தில் நடைபெற்றாலும் இன்றும் சைக்கிள் ரிக்க்ஷா மறையவில்லை.
வெளிநாட்டினர், வயதானவர்கள் விரும்பி உபயோகிக்கும் வாகனமாகவே இது இருக்கிறது. சைக்கிள்
ரிக்க்ஷா ஓட்டுனர் படும் அவஸ்தைகளை விவரிக்கும் படம்.
அதனைத் தொடர்ந்து “சொறப்பு” (SORAPPU) என்கிற
புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர் திரு.கே.பி.பிரபாகர் இயக்கியுள்ள குறும்படம். மீன் வளத்தை
மேலும் பெருக்க பவளப்பாறைகள் அதிகம் உருவாக்கப்படும் என்கிற மீனவர்களின் கோரிக்கையை
முன்வைக்கிறது.
இதனைத் தொடர்ந்து “THIS IS THE MOMENT” என்கிற
குறும்படம் திரையிடப்பட்டது. காலஞ்சென்ற ஹிந்தி நடிகர் அம்ரிஷ் பூரி குறித்த ஆவணப்படம்.
அம்ரிஷ் பூரி குறித்து ஷியாம் பெனகல், நஸ்ருதீன் ஷா மற்றும் அமோல் பலேக்கர் சிறப்பாக
கூறுகிறார்கள்.
சிவகாசியில் உள்ள பட்டாசுத் தொழிற்சாலையில் பெண்
குழந்தைகள் படும் பாட்டை விவரித்தது “LAST CHILDHOOD” என்கிற குறும்படம். இயக்கம் திரு.பக்கிரிசாமி.
அதனைத்
தொடர்ந்து “HINDUSTAN HAMARA” எனும் ஆவணப்படம் திரையிடப்பட்டது. பிரபல ஆவணப்பட இயக்குனர்
அனந்த் பட்வர்த்தன் பற்றிய செய்திகளைக் கூறும் இப்படத்தை திரு.ஆர்.வி.ரமணி இயக்கியுள்ளார்.
அடுத்து ஒரியா மொழி ஆவணப்படமான “அல்காரிதம்ஸ்”
(ALGORITHMS) திரையிடப்பட்டது. இயக்கம் : திரு இயன் மெக்டொனால்டு. கண் பார்வையற்றவர்கல்
சர்வதேச அளவில் நடைபெறும் சதுரங்கப் போட்டியில் வெற்றி பெறுவதற்காக நடத்தும் போராட்டங்களை
விவரிக்கும் அற்புதமான படம். காட்சியமைப்பு நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது.
No comments:
Post a Comment