முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், புதுச்சேரியின் 9-ஆவது மாவட்ட மாநாடு 04.01.2015 அன்று புதுச்சேரி அரசு ஊழியர் சம்மேளன அலுவலகத்தில் நடைபெற்றது.
செயலறிக்கையிலிருந்து சில பகுதிகள் :
·
புதுவையில்
பல கலை இலக்கிய அமைப்புகள் செயல்பட்டு வந்தாலும் பெரும்பாலானவை தனி மனிதர்களை மையமாகக் கொண்டவை. அவர்களின் புகழ்பாட ஏற்பாடு செய்து அதைக் கேட்டு இன்புற்றுக்களிக்க அவர்களே உருவாக்கிக் கொண்டவை. அவற்றின் செயல்பாடுகளும் அதற்கேற்பவே இருக்கின்றன. பாராட்டு விழா, விருது வழங்கும் விழா, நூல் வெளியீட்டு விழா போன்றவையே பெரிதும் நடக்கின்றன. மாறி மாறி அதே பேச்சாளர்கள் அதே பார்வையாளர்கள் எனச் சுழற்சி முறையில் செயற்பாடுகள் உள்ளன.
·
புதுச்சேரி
கலை, பண்பாட்டுத் துறை நூலகங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நூல்களை ஒழுங்காக வாங்கினாலே இத்திட்டம் (நூல்கள் வெளியிடுவதற்காக ரூ.10,000/-
நிதி வழங்கும் திட்டம்) தேவையில்லை. எனவே நூலகங்களுக்கு நூல்களைத் தவறாது வாங்கி விட்டுப் பிறகு நிதி உதவும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.
·
நிதியுதவி
வழங்கும் திட்டத்தில் இறுதிப் பட்டியல் தயாரிக்கும்போது குழுவினர் எல்லோரும் கூடி விவாதித்துத் தெரிவு செய்தால் அதிகம் பிழைகளோடு நூல்கள் வெளிவருவதைத் தடுக்கலாம்.
·
புதுச்சேரியில்
இன்று மாமணி விருதுகள் மா MONEY (பெரும்பண) விருதுகளாக மாறி விட்டன. எனவே விருதின் மதிப்பைக் காப்பாற்ற விருதிற்கான பணப்பயனை உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று நாம் புதுவை அரசைக் கேட்டுக் கொள்ள வேண்டும். மாமணி விருதுகள் பென்ஷன் திட்டங்களல்ல.
·
புதுவை
அரசின் பள்ளி நூலகங்களுக்கு நூல்கள் வாங்கப்படுகின்றனவா என்பதே தெரியவில்லை. பள்ளி நிலையிலேயே அதிக கமிஷன் கொடுக்கும் புத்தக விற்பனையாளர்களிடமிருந்து புத்தகங்கள் வாங்கிக் கணக்குக் காட்டப்படுகிறதா அல்லது புத்தகங்களே வாங்குவதில்லையா எனத் தெரியவில்லை.
·
எல்லா
பள்ளிகளிலும் நூலகர்கள் இருப்பதையும் அவர்கள் நூலகப் பணி தவிர மற்றவற்றையெல்லாம் செய்யும் நிலை இல்லாமல் நூலகப் பணியை ஆற்றச் செய்வதும் வாரம் ஒரு பிரிவேளையாவது எல்லா மாணவர்களும் நூலகம் சென்று படிக்கும் ஏற்பாட்டைச் செய்வதும் மிகவும் இன்றியமையாதது.
·
தமிழக
அரசு ஏற்கெனவே கன்னிமாரா நூலகம் இருக்க புதிதாக அண்ணா நூற்றாண்டு நூலகத்தைச் சென்னை கோட்டூர்புரத்தில் மிகச் சிறப்பாகக் கட்டிச் செயல்படுத்தி வரும் நிலையில் நாமோ மிக நல்ல நூலகத்தை மோசமடைய விட்டு விட்டு இருக்கிறோம். அதைச் சீர்படுத்திப் புதுவைக்குப் புகழ் சேர்க்கும் இடமாக மாற்ற வேண்டும். கணணி மயமாக்கப்பட்ட நூலடைவு அமைப்பும் படி எடுத்தல் வசதி, மின்னணு நூலகப் பகுதி, குழந்தைகள் பகுதி போன்றவையும் வேண்டும்.
·
புதுச்சேரி
தமிழ்ச் சங்கத்தை மையமாகக் கொண்டு நடைபெறும் செயல்கள் கவலையளிப்பதாக உள்ளன. சங்கத்தில் சேர விரும்புவோர் சங்க அலுவல நேரத்தில் எப்போது வேண்டுமானாலும் உறுப்பினராகச் சேரும் வகையில் விதிமுறைகள் இருக்க வேண்டும் எனும் நியாயத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் : (சுருக்கம்)
1. பாரதி நினைவு இல்ல புனரைமப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் ;
2. கலை பண்பாட்டுத் துறையின் விழாக்களை குழுக்கள் அமைத்து சீர்படுத்த வேண்டும் ;
3. ரோமன் ரோலண்ட் நூலகத்தை நவீனப்படுத்த வேண்டும் ;
4. புதுச்சேரி அரசு கடந்த ஆண்டு நடத்தியது போன்ற புத்தகக் கண்காட்சியை உடனே நடத்த வேண்டும் ;
5. எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய மாதொருபாகன் நூலை எரித்தத்தற்கு கண்டனம் தெரிவிக்கப்படுகிறது ;
மாநாட்டை வாழ்த்தி தோழர்.எஸ்.கருணா
(துணைப் பொதுச்செயலாளர், த.மு.எ.க.ச – திருவண்ணாமலை), தோழர்.சு.இராமச்சந்திரன் (மாநிலப்
பொருளாளர் – த.மு.எ.க.ச – புதுசேரி), ஷீத்தல் நாயக் (சகோதரன் சமூக நல மேம்பாட்டு நிறுவனம்)
பேசினார்கள்.
மாநாட்டில்
கீழ்க்கண்ட புதிய நிர்வாகிகள் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
தலைவர் : முனைவர்.த.பரசுராமன்
செயலாளர் : தோழர்.ஞானசேகர்
பொருளாளர் :
தோழர்.எஸ்.கோவிந்தராஜன்.
புதிய
நிர்வாகிகளுக்கு புதுவைப்பரணி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.













No comments:
Post a Comment