Wednesday, 2 December 2015

நீதியரசர் சந்துரு அவர்களின் உரை - 1

(இடதுசாரி கருத்துநிலையாளர்கள், அதிகாரத்தைச் செயல்படுத்தும் நிறுவனங்களில் தலைமைப் பொறுப்பில் செயல்படுவது அரிதிலும் அரிதான செயல். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்து, தன்னை எந்தச் சக்தியும் வீழ்த்த முடியாது என்று நிரூபித்த மனிதராக வாழ்ந்துவரும் அரிய மனிதர் சந்துரு அவர்கள். மார்க்சிய கருத்து நிலை சார்ந்து தமது இளமைக்காலம் முதல் செயல்படும் மனிதநேயர். சென்னை இலௌகிக சங்கம், ஆறு தொகுதிகள் நூல்களை வெளியிட்டு ஆற்றிய இவ்வுரை பகுத்தறிவு என்ற கருத்துநிலையின் பல்பரி மாணங்களைக் காட்டுவதாக அமைந்துள்ளது.)
ந்நூலைப்பற்றிப் பேசும் போது சில விஷயங்கள் நினைவுக்கு வரவேண்டும். கடந்த மாதம் மராட்டிய மாநிலத்தில்தபோல்கர்என்ற ஒரு தத்துவ அறிஞர் படுகொலை செய்யப்பட்டார். அவர் ஏதோ கள்ளக் கடத்தல், கருப்பு சந்தையில் ஈடுபட்டவர் அல்ல. இந்நூலில் உள்ள பல கருத்துக்களை இன்றைக்கும் எதார்த்தத்தில் சொல்லிலும் செயலிலும் காட்டிய ஒரு சிந்தனாவாதி. இதிலிருந்து நாம் ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
இப்படிப்பட்ட கருத்துக்களைச் சொல்பவர்களுக்கெல்லாம் காலம் காலமாகக் கொடுக்கப்பட்ட பதில்கள் அவர்களுடைய படுகொலைகள்தான். அவர்களைப் படுகொலை செய்து கல்லறையில் அடைத்து விட்டாலும் இப்படிப்பட்ட தத்துவ விசாரங்கள் எழும்பிக் கொண்டேதான் இருக்கின்றன. இம்மாதிரியான கருத்துக்களை ஒடுக்க முடியாது என்பதன் அடையாளம்தான் இப்படிப்பட்ட புத்தகங்களின் மறுபதிப்புகள் வெளியிடப்படுகின்றன. பகுத்தறிவு, மூடநம்பிக்கை ஒழிப்பு, கடவுள் மறுப்பு ஆகிய மும்முனைத் தாக்குதல்களையும் இன்றைய சமுதாயம் ஏற்றுக் கொள்ள காலதாமதங்கள் ஆகலாம்.
பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே இத்தகைய கருத்துக்களை சொல்லவும், எழுதவும், பகிர்ந்து கொள்ளவும் முடிந்தது என்பது நமக்கு வியப்பளிக்கிறது. ஆனால், இந்த மாதிரியான புத்தகங் களை விலைக்கு வாங்கி படிக்கக் கூடிய எழுத்தறிவு பெற்றவர்கள் அன்று மிகவும் குறைவு. இது போன்ற கூட்டங்களில் கலந்து கொண்டவர்களும் அதிக எண்ணிக்கையிலில்லை. அதையும் மீறி இப்படிப்பட்ட கருத்துக்களை ஆணித்தரமாக தமிழிலும் ஆங்கிலத்திலும் பதிவு செய்த அறிவுஜீவிகள் குழாமொன்று சென்னையில் இருந்ததற்கு நாம் பெருமைபட வேண்டும்.
இந்நூல்களையெல்லாம் ஆவணக் காப்பகங்கள் மற்றும் நூலகங்களில் அழிந்து விடாமல் அதை மறுபதிப்பு செய்த வீ.அரசு நல்ல பணியை ஆற்றியிருக்கிறார். இத்தொகுப்பு ஒரு மறுபதிப்பு தானேயழிய புதிய புத்தகங்களல்ல. மாணவர்கள் இப்புத்தகங் களை வாசிப்பதோடு நின்றுவிடாமல், அதைப்பற்றிய தங்க ளுடைய கருத்துக்களை ஆழமாக பதிவதற்கு முன் வர வேண்டும். பழைய புத்தகங்கள்தானே என்று படித்ததோடு நிற்காமல், அச் சிந்தனைகளை மறுபதிப்பு செய்து அவற்றை மக்களிடம் கொண்டு செல்வதற்கு இது போன்ற நிகழ்வுகள் பயன்படும். ஒரு நூற்றாண் டுக்கு முன்னரே இப்படிப்பட்ட கருத்துக்கள் இருந்தாலும் அதனால் சமுதாயம் மாறிவிட்டதா என்றால் நிச்சயமாக இல்லை.

இந்த 21ஆம் நூற்றாண்டிலும்தபோல்கர்போன்ற சிந்தனாவாதிகள் படுகொலை செய்யப்படுகிறார்கள் என்பதற்கு நாம் அவமானப்படவேண்டும். இந்திய அரசாங்கம் மற்றும் மாநில அரசாங்கத்திற்கென்று சில கொள்கைகள் இருக்கின்றன. அதற்குக் காரணம் பகுத்தறிவிற்கு ஒவ்வாத சமயவாதம் அல்லது சமயவெறி பிடித்தவர்களுடைய செயலாகவும் இருக்கலாம். கருத்து சுதந்திரம் என்பது இங்கு மறுக்கப்படுகிறது. Salman Rushdie எழுதிய “The Satanic verses” என்ற நூலை இந்த நாட்டிலே தடைசெய்தார்கள். புத்தகத்தை வாசித்துவிட்டுதான் செய்தார்களா என்று தெரியவில்லை! அப்புத்தகம் ஒரு சமயத்திற்கு எதிராக இருக்கிறது என்று சொல்லி தடைசெய்தார்கள்.

Saturday, 21 November 2015

மாதாந்திர புதுச்சேரி மாநில மனித உரிமைக்குழு கூட்டம் 23.11.2015

புதுச்சேரி மாநில மனித உரிமைக் குழுவின் மாதாந்திர கூட்டம் வருகிற 23.11.2015 (திங்கட்கிழமை) அன்று காலை 10.30 மணி முதல் 12.30 மணி வரை மனித உரிமைக் குழுவின் தலைவரி நீதியரசர் திரு ஜே.ஏ.கே.சம்பத் குமார் மற்றும் உறுப்பினர் சகோதரி சோவியர் மேரி ஆகியோர் தலைமையில் புதுச்சேரி, உப்பளம் கோலாஸ் நகரில் உள்ள அரசினர் விருந்தினர் விடுதியில் நடைபெற உள்ளது. பொதுமக்கள் (புதுச்சேரி மாநில மக்கள் மட்டும்) தங்கள் புகாரினை நேரில் வந்து கொடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். (மனித உரிமைகள் கமிட்டி புதுச்சேரி வெளியிட்ட பத்திரிக்கைச் செய்தியிலிருந்து)

மருத்துவ நண்ணுயிரியியல் தேசிய மாநாடு

செய்தி வெளியீடு

ஜிப்மர் ஆடிட்டோரியத்தில் 25-முதல் 29-ஆம் நவம்பர் 2015 வரை

MICROCON 2015, மருத்துவ நுண்ணுயிரியல் இந்தியன் அசோசியேஷன் இன்

39 வது தேசிய மாநாடு நடத்தப்படுகிறது. இருபது ஆண்டுகளுக்கு முன்பு,

1995 ல் ஜிப்மரில் இந்த மாநாடு நடத்தப்பட்டது. இந்த ஆண்டு மீண்டும்

பாண்டிச்சேரில் உள்ள அனைத்து மருத்துவ கல்லூரிகளும் கூட்டாக

இணைந்து இந்த மாநாட்டிற்கு ஜிப்மரில் ஏற்பாடு செய்துள்ளனர்.

மாநாட்டின் கருப்பொருள் "மேன் வெர்சஸ் நுண்ணுயிர்: வேற்றி

பெறபோவது யார் ". மாநாட்டின் போது நுண்ணுயிர் பரிணாம வளர்ச்சி

தாக்கங்கள், நுண்ணுயிர் எதிர்ப்புத் தடுப்பு போக்குகள், தொற்று நோய்

கண்டறிதல் மற்றும் சிகிச்சை முறைகள், தொற்று நோய் கட்டுப்பாடு

நடைமுறைகள், மேம்பட்ட மூலக்கூறு தொழில்நுட்பம் மற்றும் உயிர்

தகவலியல் பயன்பாடு, மற்றும் ஆக்கபூர்வமான நோய் விபரவியல்

கருவிகள் குறித்து கருத்து பகிர்வு நடைபெறும்.

இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து சுமார் 1300 பிரதிநிதிகள்

இந்த மாநாட்டில் பங்கேற்பார்கள். நாடு முழுவதும் உள்ள நுண்ணுயிரியல்

துறையை சேர்ந்தவர்கள் அவர்களின் கல்வி மற்றும் ஆராய்ச்சி

அனுபவத்தை பகிர்ந்து கொள்ள இந்த மாநாடு ஒரு நல்ல வாய்ப்பாக

இருக்கும். இந்த மாநாட்டில் நுண்ணுயிரியல் துறையின் தற்போதைய

ஆராய்ச்சி நடவடிக்கைகள் விவரிக்கபடும். இந்த மாநாட்டின் ஒரு

பகுதியாக, நுண்ணுயிரியல் துறையை சேர்ந்தவர்களுக்கு பல்வேறு

நோயறிதல் நுட்பங்கள் மற்றும் பொருள்விளக்கும் திறன்கள் குறித்து பயிற்சி

இந்த மாநாட்டை டாக்டர் எம்.கே. பன், திறந்து வைப்பார். 25, 26

நவம்பர் 2015 அன்று, இந்த துறையை சேர்ந்த மாணவர்களுக்கு மொத்தம்

14 தொடர் மருத்துவ கல்வி (CME) திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாநாட்டின் போது, நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பிரதிநிதிகள், 197

வாய்வழி மற்றும் 486 சுவரொட்டி விளக்கக்காட்சிகளை விவரிப்பர்.

மாநாட்டின் மூன்று நாட்களும் 8 இணை அறிவியல் அமர்வுகள் ஏற்பாடு

செய்யப்பட்டுள்ளது. நான்கு விருதுகளை பல்வேறு பிரிவுகள் கீழ் சிறந்த

வாய்வழி விளக்க உரையாற்றியவர்களுக்கு வழங்கப்படும் மற்றும் இரண்டு

விருதுகள் சிறந்த சுவரொட்டி விளக்க உரையாற்றியவர்களுக்கு

வழங்கப்படும். இது தவிர, டாக்டர் கே.பி. சர்மா நினைவு IAMM ஜூனியர்

சிறந்த பேப்பர் விருது, IAMM ஜனாதிபதி பேருரை விருது, டாக்டர் எஸ் சி

அகர்வால் பேருரை விருது, IAMM எந்‌டொமென்ட் பேருரை விருது மற்றும்

டாக்டர் யூசி சதுர்வேதி வாழ்நாள் சாதனையாளர் விருது, மாநாட்டின் போது

வழங்கப்படும்.

Sunday, 15 November 2015

ஜிப்மரில் கலை நிகழ்ச்சி நடத்திய குழுவினர்

14.11.2015 ஜிப்மரில் நடைபெற்ற கலை நிகழ்வில் பங்கேற்ற குழுவினர் .


எதிர்பார்ப்புகளும் ஏமாற்றங்களும் ..

தங்கள் குழந்தைகளோடு 14.11.2015 அன்று ஜிப்மர் மருத்துவமனையில் நடைபெற்ற "குழந்தைகள் தின விழாவில்" பங்கேற்க வந்திருந்த கான்சர் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் .. அவர்களின் முகங்கள் பேசும் ஒரு கோடி கவிதைகள் .











ஜிப்மர் மருத்துவமனையில் குழந்தைகளுக்கான கலை நிகழ்ச்சிகள்

14.11.2015 அன்று ஜிப்மர் மருத்துவமனை செவிலியர் கல்லூரி கருத்தரங்கக் கூடத்தில் கான்சர் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதிலிருந்து சில காட்சிகள்







ஜிப்மர் மருத்துவமனையில் குழந்தைகள் தின விழா

14.11.2015 அன்று புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை செவிலியர் கல்லூரியில் நடைபெற்ற கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான நிகழ்ச்சி . மனதை மிகவும் பாதித்த நிகழ்ச்சி . நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வமுன்னு சும்மாவா சொன்னாங்க ,,?