Sunday, 23 November 2014

வள்ளலார் கண்ட சாகாக்கலை

வள்ளலார் கண்ட சாகாக்கலை அறிவியல், மெய்ப்பொருள், சித்தர் தத்துவ, சுத்த சன்மார்க்கத் திங்களிதழ் சார்பில் சிறப்புக் கூட்டம் புதுச்சேரி கிழக்கு கடற்கரைச் சாலையிலுள்ள நாகாத்தம்மன் கோவிலில் 23.11.2014 ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. இதழாசிரியர் திரு.நாராயணன் அனைவரையும் வரவேற்றார்.  நிகழ்வுக்கு இதழின் இணை ஆசிரியர் திரு.காசி வில்லவன் தலையேற்றார்.
திரு.காசி வில்லவன்
அருட்பாவை படிப்பது என்பது பொழுது போக்கல்ல. வள்ளலாரின் பாடல்களை மனமிரங்கிப் பாடினால் கண்ணில் நீர் வரும். மரணமில்லா பெருவாழ்வு என்பது சாத்தியமே. மேலை நாடுகளில் இது குறித்து ஆய்வு செய்தனர். உடம்பு மட்டுமே செயலிழந்து விடுகிறது. நமது தேகம் சூட்சும தேகம், அஞ்சுக தேகம், காரண தேகம் என் விரிந்து செல்கிறது. பொதுவுடைமை சிந்தாத்தத்தை புரிந்து கொண்டவர்களால் வள்ளலாரின் நெறிகளை எளிதில் புரிந்து கொள்ள முடியும். இதைத் தான் திருவள்ளுவர் "தெய்வத்தால் ஆகாதெனினும்" எனும் குறளில் வலியுறுத்துகிறார். கம்யூனிசம், மார்க்சியம் எட்டிய தூரத்தை விட வள்ளலார் கண்ட நெறி மிகவும் ஆழமானது.  வள்ளலாரின் கருத்துக்களை பரப்பும் அமைப்புகளுக்கிடையே கருத்து வேற்றுமை இருக்கக் கூடாது. அது வள்ளலாருக்கு இழுக்கை ஏற்படுத்தும். தேர்ச்சி பெற்றவனும், 100 மதிப்பெண் பெற்றவனும் தேர்ச்சி பெற்றவர்களே. எனினும் வேறுபாடு உண்டு. பரிமாணம் என்பது வேறு. படிமானம் என்பது வேறு. இதனைத் தான் ஆறு திருமறைகள் உணர்த்துகின்றன.
பேரா.கருணாநிதி (திருத்தணி)
"ஆய்வாளர்கள் தங்களுக்கென குறிக்கோளை அமைத்துக் கொள்வார்கள். அதையொட்டி அவர்களின் செயல்பாடுகள் இருக்கும்.  ஆய்வின் பயன்பாடு தரமுள்ளதாக இருக்கும். சாகாக்கலை இப்போது தான் பிரபலமாகிக் கொண்டு வரும் நெறி. உயிரிணக்கத்தில் வள்ளலாரை விட உயர்ந்தவர் இல்லை. சமுதாய சீர்திருத்தம், இலக்கியச் சுவை, இறை அருள் என அனைத்து சிந்தனைகளுமே அதில் தளும்பிக் கிடக்கின்றன. உயிரிணக்கத்தின் மூலம் இறைவன் அருளைப் பெறலாம். இறைவன் அருளைப் பெற்றவர்கள் சாகாக் கலையை கற்றுத் தேறலாம். "என்றுமுள்ள தென்தமிழ்" என்று திரு.வி.க. சொன்னார். அதாவது தமிழ் தோன்றமுமில்லை. அழியப் போவதுமில்லை.
தமிழில் உள்ள "ழ" என்ற எழுத்து இயற்கை, உண்மை, சிறப்பியல் எழுத்து. இந்த எழுத்தை உச்சரிக்கும் போது நாக்கு மடங்கி அன்னாக்கைத் தொடும். இந்த எழுத்தை உச்சரிக்கும் போது சுவாசம் நடைபெறாது. இது மூச்சு செயலாகாத சாகாக்கலையைக் குறிக்கிறது. சன்மார்க்கம் போல சாகாக்கலை தொடக்கமில்லாதது. முடிவில்லாதது."ழ" உச்சரிப்பின் அடையாளம் சிறப்பானது. சுவாசம் வீணாவதில்லை. இதனால் ஆயுள் நீட்டிப்பு உண்டாகும் சுவாசத்தை வீணாக்காமல் இருந்தால் நீண்ட நாள் வாழலாம். பிரம்மாவின் ஒரு சுவாசத்திற்கு ஆகும் காலம் 4,32,000 ஆண்டுகள். விஷ்ணு ஒரு சுவாசத்திற்கு எடுத்துக் கொள்ளும் காலம் 8,64,000 ஆண்டுகள். சுவாசம் குறையக் குறைய ஆயுள் அதிகரிக்கும்.  ஆமையின் ஆயுள் 300 ஆண்டுகள். எனவே தான் திருவள்ளுவர் "பொறுமையுள் ஆமை போல" என்கிறார். உடல் அற்புதமான கருவி. நமது உடலிலுள்ள உறுப்புகளை வரிசையாக அடுக்க ஆரம்பித்தால் 1-1/2 இந்தியாவை சுற்றி வரவேண்டி இருக்கும். இவ்வாறு உள்ள உறுப்புகளை மிக அழகாக அடுக்கி வைத்தது யார் ?  நாம் உண்ணும் உணவினை தொண்டை வரும் கொண்டு செல்வதோடு நமது பணி முடிந்து விடுகிறது. பிறகு அதை நெறிப்படுத்துவது யார் செயல் ? சாகாக்கலை நோக்கி பயணிக்க ஆரம்பித்தவர்களுக்கு கீழ்நிலை வாராது. முதுமை வருவதற்கான காரணம் என்ன ? உடம்பில் PRE-RADICALS என்று சொல்லக் கூடிய நேர்மின்னேற்றம் கொண்ட துகள்கள் அதிகரிப்பே. வயது வயோதிகத்திற்கு காரணமல்ல. சிறியவர்களிடம் ஒரு காரியத்தை சொல்லி அதை செய்வதற்கு அவர்கள் சோம்பேறித்தனப் பட்டால் அவர்கள் வாலிபத்தில் வயோதிகத்தை அடைந்து விட்டார்கள் என்று பொருள். இந்தியா திபெத் எல்லையில் உள்ள பழங்குடி மக்கள் ஐந்து உடற்பயிற்சிகள் செய்கிறார்கள். அவர்களுக்கு அதனை கற்பிக்க பணித்தது வள்ளார் அவர்கள். அவர்கள் ஆரோக்கியமாக இருக்கிறார்கள். அந்த ஐந்து உடற்பயிற்சிகளை அவர்கள் ஆராதனை என்கிறார்கள்.
"தாயார் முதல் சுற்றத்தார் நீங்குவார்
அந்நேரமதில் நோயால் அணுகுவார்
படுத்த பாயார் துணையார்
நீயார் நான்யார் என்பர் சுற்றத்தார்"
என்கிற வரிகள் வயோதிகத்தின் சுழல் குறித்து விவரிக்கிறது.
மறுபிறப்பு குறித்து ஒரு படம் YOUTUBE உள்ளது. THE UNMISTAKEN CHILD என்கிற அப்படத்தில் மறைந்து போன தனது குருவை சிஷ்யன் கண்டுபிடிப்பது படமாக்கப்பட்டுள்ளது. சாகாக்கலையை கற்பிக்கும் பணியினைச் செய்வோம். புதுச்சேரிக்கு வந்திருந்து அதனை நானே கற்பிக்கும் திட்டமும் உள்ளது. விருப்ப்முள்ளவர்கள் அதில் இணைந்து பயன் பெறலாம்."
இது குறித்து மேலும் விவரங்கள் தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் முனைவர்.க.நாராயணன் அவர்களை கைபேசி எண் 9442152764- யில் தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.




No comments:

Post a Comment