Saturday, 21 March 2015

கருவடிக்குப்பத்தில் நாட்டிய நிகழ்வு


செல்வி கிருத்திகாவின் நாட்டிய நிகழ்வு 20.04.2015 அன்று மாலை  புதுச்சேரி கருவடிக்குப்பம் சுப்ரமணியர் ஆலயத்தில் நடைபெற்றது. நிகழ்வில் திருமிகு.மு.வைத்தியநாதன் சட்டமன்ற உறுப்பினர் இலாசுப்பேட்டை தொகுதி திருமிகு.பி.எம்.கல்யாணசுந்தரம் சட்டமன்ற உறுப்பினர் காலாப்பேட் தொகுதி திரு.சுந்தரவடிவேலு மாவட்ட ஆட்சியர்
















சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

தரங்கம்பாடி - அழகிய கோட்டை

வாழும் வரலாற்று













ப் பக்கங்கள்
தரங்கம்பாடி கோட்டையைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். வங்கக் கடலின் ஓரம் கம்பீரமாய் வரலாற்றின் பக்கங்களாய் நின்று கொண்டிருக்கும் இந்த பிரமாண்டத்தை கண்டு அதிசயித்துப் போனேன்.  எச்ச சொச்சங்களே இப்படி மலைப்பை ஏற்படுத்தும் போது அதன் உண்மைத் தோற்றம் எப்படியிருந்திருக்கும் என்று நினைக்கிற போது மனது ரொம்பவும் தான் மலைத்துப் போனது. நான் கண்டு மிகவும் மகிழ்ச்சி கொண்டேன். நீங்கள் அனைவரும் பார்த்து மகிழ வேண்டிய இடம். சிதம்பரத்திலிருந்து காரைக்கால் செல்லும் வழியில் உள்ளது.
-- லெனின்பாரதி--

Friday, 20 March 2015

காரைக்கால் பாலிடெனிக் கல்லூரி - ஒரு அற்புதம்

காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரியில் மகளிர் தின விழா 19.03.2015 அன்று நடைபெற்றது. செல்வி.கிருத்திகா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். புதுவை அரசின் பாலிடெக்னிக் கல்லூரி தான் என்றாலும் அங்கு உள்ள கட்டமைப்பு வசதிகளைப் பார்க்கும் போது நாம் ஏன் இங்கு வந்து படிக்கக் கூடாது என்கிற எண்ணத்தை உருவாக்குகிறது. அவ்வளவு அழகாக பார்த்துப் பார்த்து ஒவ்வொரு அம்சமாக செய்திருக்கிறார்கள். அங்கு படிக்கிற மாணவ மாணவிகளுக்கு கேம்பஸ் இண்டர்வியூ மூலம்  வேலை வாய்ப்புகளும் உறுதியாகக் கிடைக்கிறது. புதிய கல்லூரிகள் கட்டுகிற போது காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரியை ஒரு ROLE MODEL ஆக எடுத்துக்கொள்ளலாம். முதல்வர் திரு.சந்தானசாமியும் முத்தான ஊழியர்களும் அவசியம் பாராட்டக் கடமைப்பட்டார்கள். நிறைய சாதியுங்கள் .. வாழ்த்துக்கள் .










தஞ்சை தென்னக பண்பாட்டு மையம்

தஞ்சை தென்னக பண்பாட்டு மையத்தை சமீபத்தில் சென்று பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அங்கு உள்ள அழகிய கலர் கலரான உருவ பொம்மைகள், அருங்காட்சியகம், இயற்கை வர்ணங்களை உபயோகப்படுத்திய வரையப்பட்ட ஓவியங்கள் கண்ணையும் மனதையும் பரவசப்படுத்துவதாக உள்ளன. அவசியம் கண்டு மகிழ வேண்டிய இடம்.