Friday, 20 March 2015

காரைக்கால் பாலிடெனிக் கல்லூரி - ஒரு அற்புதம்

காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரியில் மகளிர் தின விழா 19.03.2015 அன்று நடைபெற்றது. செல்வி.கிருத்திகா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். புதுவை அரசின் பாலிடெக்னிக் கல்லூரி தான் என்றாலும் அங்கு உள்ள கட்டமைப்பு வசதிகளைப் பார்க்கும் போது நாம் ஏன் இங்கு வந்து படிக்கக் கூடாது என்கிற எண்ணத்தை உருவாக்குகிறது. அவ்வளவு அழகாக பார்த்துப் பார்த்து ஒவ்வொரு அம்சமாக செய்திருக்கிறார்கள். அங்கு படிக்கிற மாணவ மாணவிகளுக்கு கேம்பஸ் இண்டர்வியூ மூலம்  வேலை வாய்ப்புகளும் உறுதியாகக் கிடைக்கிறது. புதிய கல்லூரிகள் கட்டுகிற போது காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரியை ஒரு ROLE MODEL ஆக எடுத்துக்கொள்ளலாம். முதல்வர் திரு.சந்தானசாமியும் முத்தான ஊழியர்களும் அவசியம் பாராட்டக் கடமைப்பட்டார்கள். நிறைய சாதியுங்கள் .. வாழ்த்துக்கள் .










No comments:

Post a Comment