உலக சமாதான அறக்கட்டளை
உடுமலைப்பேட்டையிலிருந்து
20 கிலோமீட்டர் தொலைவில் திருமூர்த்திமலைக்குச் செல்லும் வழியில் அமைந்துள்ளது உலக
சமாதான அறக்கட்டளை வளாகம். அனைவரும் கண்டு
களிக்க வேண்டிய இடம்.
ஜெகத் மகாகுரு ஞானவள்ளல்
பரஞ்சோதி மகான் அவர்களின் உலக சமாதான அறக்கட்டளை நிறுவனம் ஒரு ISO 9001:2008 தரச்சான்று
பெற்ற நிறுவனமாகும்.
இதன் முழக்கங்கள்
“அன்னை பூமி நீடுழி வாழ்க
வளர்க மெய்ஞானம்
வாழ்க சமாதானம்
உலக நலம் காப்போம்
உலக அமைதி காப்போம்
இறை அருளால் சத்திய யுகம்
காப்போம்
உலக உயிர்கள் யாவும் இன்புற்று
வாழட்டும்
வையாகம் சாந்தியும் சமாதானமும்
சந்தோஷமும் அடையட்டும்”
புதியதோர் உலகம் படைப்போம்
வாரீர் ..வாரீர் .. வாரீர் அன அன்புடன் அழைக்கும் இந்த பரந்த பசுமையான வளாகத்தில் “சந்தோஷம்”
என்கிற வார்த்தைதான் எங்குமே எதிரொலிக்கிறது
புன்னகை தவழும் முகத்துடன்
உபசரிக்கும் ஊழியர்கள் . சந்தோஷம் என்று சொல்லிக் கொண்டே உணவு பரிமாறும் அவர்களின்
அன்பு தோய்ந்த முகங்கள் நம்மை ஒரு புதிய உலகுக்கே அழைத்துச் செல்கிறது .
ஒரு நான்கு அல்லது ஐந்து
நாட்கள் இங்கேயே இருந்து இயற்கையை அனுபவித்து ஆரோக்கியமான உணவினை உண்டு செவிக்கு குருஜி
அவர்களின் அருளுரையைக் கேட்டால் போதும் .. தீராத நோய்கள் எல்லாம் ஓடி விடும்.
இந்த வளாகத்தில் நடைபெறும்
பணிகள் மற்றும் சிறப்புகளை புதுவைப்பரணி வாசகர்களும், முகநூல் நண்பர்களும் அறிந்து
கொள்ள தகவல்களைத் தருமாறு பல முறை கேட்டுக் கொண்டும் வழங்கப்படவில்லை. மேற்கொண்டு தெரிந்து
கொள்ள 04252-295101 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள் …
No comments:
Post a Comment