இன்று கவிஞர்.க.இந்திரசித்து,
உடுமலைப்பேட்டை (கைபேசி எண்.9944319188)
அவர்களின் "செவ்வியை ஆகுமதி" குட்டி ஹைக்கூ கவிதை தொகுப்பிலிருந்து சில கவிதைகள் ;
(இந்த சிறு புத்தகம் விலை மதிப்பில்லாதது)
* இந்தக் குறியீடு
ஒன்று போதும் என்கிறாய்
என் தனிக்குறியீடு என்னாவது ?
* உள்ளொடுங்கி உள்ளொடுங்கி
எத்தனை நாட்கள் வாழ்வது
ஒதுங்கி நில்
* வரலாறு முழுவதும்
வர்க்கப் போரா ?
தொடர்ந்து படை நடத்து.
* இலக்கியம் படைக்க வந்தாய்
இலக்கியமாய் இரு
"இட்லராய்" இராதே
* சிறைச்சுவர்களும் சங்கிலிகளும்
தடுத்து நிற்கின்றன
தோழர்கள் வருவார்கள்
* இரக்கம் காட்ட இது
உணவுக்கலம் அன்று-
போர்க்களம்.
* இத்தனை நாள்
காத்திருந்த கப்பல் வந்தது
புறப்படத்தயக்கம்.
* தாய்மையே
தடையாகும் போது ...
தகர்
* வெட்ட வெட்டத்
துளிர்க்கிறதே வாழை
வாழும்வரை வாழும்
* இதயப் பலகையில்
எழுதி எழுதிச் செல்கிறேன்
மறுபடி மறுபடியும் ...
* விளம்பரம் -
ஆயிரம் வாய் கொண்ட நாய்
விழுங்காமல் விடாது
* இந்த மண்
மண்ணாவதே இல்லை
வீரனாக்கும்
* அருகம்புல்லையும்
அசைக்க முடியவில்லையே
பணத்தின் மீதல்லா படுத்துக்கிடக்கிறது
* எல்லாம் விற்பனைக்கே
எனினும்
இதயத்திற்கே முன்னுரிமை
* உடைமையே மனுவின் அறம்
உடைமையின்மையே
மார்க்சிய வரம்
* தொடாத போதும்
தொடுகிறதே இந்தப்
புல்லாங்குழல் இசை ..
* வண்டைத் தாங்காத
மலரே
மலந்து மலர்ந்து மடியாதே ..
No comments:
Post a Comment