Wednesday, 29 April 2015
Monday, 27 April 2015
அறிஞர்கள், மருத்துவர்கள், அன்பர்கள் கெளரவிப்பு -
தமிழ்ப் பாரம்பரிய சித்த
மருத்துவ பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் உலகளாவிய பாரம்பரிய சித்த மருத்துவர்கள்
ஒருங்கிணைப்பு மாநாடு 25.4 மற்றும் 26.04.2015 அன்று தென்கயிலை உலக சமாதான ஆலயத்தில்
(ஸ்ரீ பரஞ்சோதி நகர், திருமூர்த்தி மலை, உடுமலைப்பேட்டை திருப்பூர் மாவட்டம், தமிழ்நாடு)
நடைபெற்றது.
விழாவில் தவத்திரு குருமகான்
பரஞ்சோதியார், மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் திரு.சி.சண்முகவேலு, கோவை பேரூர்
ஆதினம் தவத்திரு மருதாசல அடிகள் மருத்துவ பேரறிஞர் மரு.எம்.ஏ.ஹூசைன் கலந்து கொண்டனர்.
அதிலிருந்து சில காட்சிகள்
உலகளாவிய பாரம்பரிய சித்த மருத்துவர்கல் ஒருங்கிணைப்பு மாநாடு
தமிழ்ப் பாரம்பரிய சித்த
மருத்துவ பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் உலகளாவிய பாரம்பரிய சித்த மருத்துவர்கள்
ஒருங்கிணைப்பு மாநாடு 25.4 மற்றும் 26.04.2015 அன்று தென்கயிலை உலக சமாதான ஆலயத்தில்
(ஸ்ரீ பரஞ்சோதி நகர், திருமூர்த்தி மலை, உடுமலைப்பேட்டை திருப்பூர் மாவட்டம், தமிழ்நாடு)
நடைபெற்றது.
விழாவில் தவத்திரு குருமகான்
பரஞ்சோதியார், மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் திரு.சி.சண்முகவேலு, கோவை பேரூர்
ஆதினம் தவத்திரு மருதாசல அடிகள் மருத்துவ பேரறிஞர் மரு.எம்.ஏ.ஹூசைன் கலந்து கொண்டனர்.
அதிலிருந்து சில காட்சிகள்
உலக சமாதான அறக்கட்டளை - திருமூர்த்திமலை, உடுமலைப்பேட்டை
உலக சமாதான அறக்கட்டளை
உடுமலைப்பேட்டையிலிருந்து
20 கிலோமீட்டர் தொலைவில் திருமூர்த்திமலைக்குச் செல்லும் வழியில் அமைந்துள்ளது உலக
சமாதான அறக்கட்டளை வளாகம். அனைவரும் கண்டு
களிக்க வேண்டிய இடம்.
ஜெகத் மகாகுரு ஞானவள்ளல்
பரஞ்சோதி மகான் அவர்களின் உலக சமாதான அறக்கட்டளை நிறுவனம் ஒரு ISO 9001:2008 தரச்சான்று
பெற்ற நிறுவனமாகும்.
இதன் முழக்கங்கள்
“அன்னை பூமி நீடுழி வாழ்க
வளர்க மெய்ஞானம்
வாழ்க சமாதானம்
உலக நலம் காப்போம்
உலக அமைதி காப்போம்
இறை அருளால் சத்திய யுகம்
காப்போம்
உலக உயிர்கள் யாவும் இன்புற்று
வாழட்டும்
வையாகம் சாந்தியும் சமாதானமும்
சந்தோஷமும் அடையட்டும்”
புதியதோர் உலகம் படைப்போம்
வாரீர் ..வாரீர் .. வாரீர் அன அன்புடன் அழைக்கும் இந்த பரந்த பசுமையான வளாகத்தில் “சந்தோஷம்”
என்கிற வார்த்தைதான் எங்குமே எதிரொலிக்கிறது
புன்னகை தவழும் முகத்துடன்
உபசரிக்கும் ஊழியர்கள் . சந்தோஷம் என்று சொல்லிக் கொண்டே உணவு பரிமாறும் அவர்களின்
அன்பு தோய்ந்த முகங்கள் நம்மை ஒரு புதிய உலகுக்கே அழைத்துச் செல்கிறது .
ஒரு நான்கு அல்லது ஐந்து
நாட்கள் இங்கேயே இருந்து இயற்கையை அனுபவித்து ஆரோக்கியமான உணவினை உண்டு செவிக்கு குருஜி
அவர்களின் அருளுரையைக் கேட்டால் போதும் .. தீராத நோய்கள் எல்லாம் ஓடி விடும்.
இந்த வளாகத்தில் நடைபெறும்
பணிகள் மற்றும் சிறப்புகளை புதுவைப்பரணி வாசகர்களும், முகநூல் நண்பர்களும் அறிந்து
கொள்ள தகவல்களைத் தருமாறு பல முறை கேட்டுக் கொண்டும் வழங்கப்படவில்லை. மேற்கொண்டு தெரிந்து
கொள்ள 04252-295101 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள் …
Saturday, 18 April 2015
40--ஆம் ஆண்டு ஸத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் ஜெயந்தி விழா
40--ஆம் ஆண்டு ஸத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் ஜெயந்தி விழா - ஸ்ரீ சிருங்கேரி சிவகங்கா மடம், சாராதம்பாள் ஆலயம், எல்லைப்பிள்ளைச் சாவடி, 100 அடி சாலை, புதுச்சேரி 605005 -
23.04.2015 வியாழன்
மாலை 5 மணி : பிரகதி இசைப்பள்ளி மாணவர்கள் இசை அமுதம்
மாலை 6 மணி : ஸ்ரீ. சாரதா கலமந்திர் மாணவர்கள் இசை அமுதம்
மாலை 630 மணி : யோகாச்சாரினி திருமதி. தேவசேனா பவனானி வாய்ப்பாட்டு
இரவு 7 மணி : வேலூர் திரு.ஏ.ஆர்.சீனிவாசன் வாய்ப்பாட்டு
இரவு 730 மணி : ஸ்ரீவில்லிபுத்தூர் திருமதி எஸ்.கே.விஜயலட்சுமி வாய்ப்பாட்டு
இரவு 8 மணி : திருமதி டாட்டா பானுமதி வீணைக் கச்சேரி
இரவு 830 மணி : முசிறி திரு பி.ரங்கராஜன் வாய்ப்பாட்டு2
24.04.2015 - வெள்ளிக்கிழமை
மாலை 530 மணி : யோகாஞ்சலி மாணவர்கள் இசை அமுதம்
மாலை 6 மணி : இசைப்பெருநெறி : திரு வீ.ஞானப்பிரகாசம் வாய்ப்பாட்டு
மாலை 630 மணி : நெய்வேலி திருமதி.லலிதா ராஜீலு வாய்ப்பாட்டு
இரவு 7 மணி : சங்கீத பூஷணம் திரு வீ.ஜெகதீசன் வாய்ப்பாட்டு
இரவு 730 மணி : கொட்டடாரக்கரை திரு வீ.எஸ்.பாலமுரளி வாய்ப்பாட்டு
இரவு 8 மணி : மஹாராஜபுரம் சங்கீத சூடாமணி திரு.எஸ்.இராமச்சந்திரன் வாய்ப்பாட்டு
25.04.2015 - சனிக்கிழமை
காலை 8 மணி : ஸ்ரீ.கிருஷ்ண பிரேமிக பஜனை மண்டலியின் தோடய மங்களம் மற்றும் உஞ்சவ்ருத்தி பஜனை
காலை 0930 மணி லாஸ்பேட்டை ஸ்ரீ பாண்டவதூதன் சங்கீர்த்தன சபா வழங்கும் நாம சங்கீர்த்தனம் செல்வன் டாக்டர்.சி.ஸ்ரீ.ஹரி
காலை 10 மணி : புதுவை மாதா அமிர்தானந்த மயி சமிதி வழங்கும் பஜன்
காலை 1030 மணி : திரு எஸ்.ரகுராம ராமானுஜதாஸர் அவர்கள் வழங்கும் ஸத்குரு ஸ்ரீதியாகராஜரின் சரித்திர உபன்யாசம்
மாலை 630 மணி யோகாச்சாரியா பல்கலைச்செம்மல் டாக்டர் ஆனந்தபாலயோகி பவனானி வாய்ப்பாட்டு
இரவு 7 மணி இசைஞானமணி திரு எஸ்.சுரேஷ்குமார் வாய்ப்பாட்டு
இரவு 730 மணி கலைமாமணி டாக்டர் அரிமளம் எஸ்.பத்மநாபன் வாய்ப்பாட்டு
இரவு 8 மணி : சின்மயா சகோதரிகள் யுவகலாபாரதி திருமதி.உமா ராதிகா வாய்ப்பாட்டு
26.04.2015 ஞாயிறு
காலை 8 மணி : பிரபல சங்கீத வித்வாங்களும் விதூஷிகளும் கோஷ்டி கானமாக வழங்கும் பஞ்சரத்ன கீர்த்தனைகள்
மாலை 6 மணி : ஸ்ரீ.காஞ்சி காமகோடி பீடம் ஆஸ்தான வித்வான் அல்லம் திரு. தூர்கா பிரசாத் அவர்கல் கோட்டு வாத்தியம்
இரவு 730 மணி : சங்கீத கலாநிதி பம்பாய் சகோதரிகள் சி.சரோஜா, சி.லலிதா.
---------- புதுவைப்பரணி இலக்கிய இதழ் தொடர்புக்கு 9443601439 ---------------

Friday, 17 April 2015
கவிஞர்.க.இந்திரசித்துவின் ஹைக்கூ கவிதைகள்
இன்று கவிஞர்.க.இந்திரசித்து,
உடுமலைப்பேட்டை (கைபேசி எண்.9944319188)
அவர்களின் "செவ்வியை ஆகுமதி" குட்டி ஹைக்கூ கவிதை தொகுப்பிலிருந்து சில கவிதைகள் ;
(இந்த சிறு புத்தகம் விலை மதிப்பில்லாதது)
* இந்தக் குறியீடு
ஒன்று போதும் என்கிறாய்
என் தனிக்குறியீடு என்னாவது ?
* உள்ளொடுங்கி உள்ளொடுங்கி
எத்தனை நாட்கள் வாழ்வது
ஒதுங்கி நில்
* வரலாறு முழுவதும்
வர்க்கப் போரா ?
தொடர்ந்து படை நடத்து.
* இலக்கியம் படைக்க வந்தாய்
இலக்கியமாய் இரு
"இட்லராய்" இராதே
* சிறைச்சுவர்களும் சங்கிலிகளும்
தடுத்து நிற்கின்றன
தோழர்கள் வருவார்கள்
* இரக்கம் காட்ட இது
உணவுக்கலம் அன்று-
போர்க்களம்.
* இத்தனை நாள்
காத்திருந்த கப்பல் வந்தது
புறப்படத்தயக்கம்.
* தாய்மையே
தடையாகும் போது ...
தகர்
* வெட்ட வெட்டத்
துளிர்க்கிறதே வாழை
வாழும்வரை வாழும்
* இதயப் பலகையில்
எழுதி எழுதிச் செல்கிறேன்
மறுபடி மறுபடியும் ...
* விளம்பரம் -
ஆயிரம் வாய் கொண்ட நாய்
விழுங்காமல் விடாது
* இந்த மண்
மண்ணாவதே இல்லை
வீரனாக்கும்
* அருகம்புல்லையும்
அசைக்க முடியவில்லையே
பணத்தின் மீதல்லா படுத்துக்கிடக்கிறது
* எல்லாம் விற்பனைக்கே
எனினும்
இதயத்திற்கே முன்னுரிமை
* உடைமையே மனுவின் அறம்
உடைமையின்மையே
மார்க்சிய வரம்
* தொடாத போதும்
தொடுகிறதே இந்தப்
புல்லாங்குழல் இசை ..
* வண்டைத் தாங்காத
மலரே
மலந்து மலர்ந்து மடியாதே ..
Subscribe to:
Posts (Atom)