சென்னனை தி.நகர் கிருஷ்ணா கான சபாவின் காம கோடி ஹாலில் செல்வி.கிருத்திகா ரவிச்சந்திரன், செல்வி.திவ்யா ரமேஷ் ஆகியோரின் பரத நாட்டிய நிகழ்ச்சி 25.12.2014 அன்று மாலை நடைபெற்றது. இவர்கள் இருவரும் புதுச்சேரி கலைமாமணி ஜெயஸ்ரீ நாராயணனின் சிஷ்யைகள் என்பது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சிக்கு வாய்ப்பாட்டு திரு.வேல்முருகன், வயலின் திரு.ஸ்ரீனிவாசன், மிருதங்கம் திரு.அங்கப்பன். நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் எங்கள் உறவினர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள்
Friday, 26 December 2014
Sunday, 21 December 2014
ஆபிரகாம் பண்டிதர் அறக்கட்டளை சொற்பொழிவு
ஆபிரகாம்
பண்டிதர் அறக்கட்டளை சொற்பொழிவு
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இசைத் துறை சார்பில் “ஆபிரகாம்
பண்டிதர் அறக்கட்டளைச் சொற்பொழிவு மற்றும் இசைப் போட்டிப் பரிசளிப்பு விழா
16.12.2014 மதியம் 3 மணிக்கு மொழிப்புலக் கருத்தரங்க அறையில் நடைபெற்றது. அதில் நிகழ்த்தப்பட்ட
உரையின் சுருக்கம் :
முனைவர்.ம.திருமலை (மாண்பமை துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம்) :
திரைப்பட பாடல்கள் கர்நாடக இராகத்தை அடிப்படையாகக் கொண்டவை. நல்ல
பாடல்கள் தாள ஒழுங்குக்குக் கட்டுப்பட்டவை.
சாருகேசி இராகத்தில் அமைந்த ‘முல்லை மலர் மேலே’ பாடலை இன்றும் பலரும் ரசிப்பதற்கு
அது தான் காரணம்.
இசை குறித்து ஆழ்ந்த புலமை பெற்றிருந்த ஆபிரகாம் பண்டிதர் ஒரு ஆசிரியர்.
அவர் நினைத்திருந்தால் தானுண்டு தன் வேலையுண்டு என்று ஆண்டு தோறும் இங்க்ரிமேண்ட் வாங்கிக்
கொண்டு இருந்திருக்க முடியும். சித்த மருத்துவம்
குறித்து ஆழ்ந்த அறிவு கொண்ட அவர் அதற்காக அதிக நேரம் செலவிட்டார். மலேசியாவிலிருந்த தோட்டத் தொழிலாளர்களுக்கு மருத்துவம்
பார்த்தார். பின்னர் இந்தியா திரும்பி இங்குள்ள
மக்களுக்கு மருத்துவம் பார்த்தார். நான் சமீபத்தில்
12வது 5 ஆண்டு திட்டம் குறித்து படித்தேன். அதையொட்டி தமிழ்ப் பல்கலைக்கழகம் சார்பில்
ஒரு கிராமத்தை தத்து எடுக்க முடிவு செய்தேன். அவ்விழா ஜனவரி முதல் வாரத்தில் இருக்கும்.
ஆபிரகாம் பண்டிதர் 1859யில் பிறந்தார். 1917ல் கருணாம்ருத சாகரம்
நூலை வெளியிட்டார். “உன்னைச் சுற்றி எவ்வளவு குழப்பம் நடந்து கொண்டிருந்தாலும் உன்னை
அதிலிருந்து விடுவித்துக் கொண்டு முன்னேறு” என்பது தான் அவர் வாழ்க்கை கூறும் பாடம். பாரதியார் குறித்து கனகலிங்கம் எழுதிய நூலை தமிழ்ப்
பல்கலைக் கழகம் ஜனவரியில் வெளியிட உள்ளது. கனகலிங்கம் பாரதியாரால் பூணூல் அணிவிக்கப்பட்டவர்.
அவரது வாரிசைக் கொண்டு அந்த நூலை வெளியிட வேண்டும் என்பது எங்களின் ஆசை. விளம்பரமும் கொடுத்தோம். ஆனால் யாரும் முன்வரவில்லை.
உங்களுக்கு யாரையாவது தெரியும் என்றால் பதிவாளரிடம் தெரிவியுங்கள். இசைத் துறை நல்ல எதிர்காலம் உள்ள துறை. எனவே அதைக்
கற்க பலரும் முன் வரவேண்டும்.
“ஆபிரகாம்
பண்டிதரும், தமிழிசையும்”
பொறியாளர். சு.கோவிந்தராசன், தஞ்சாவூர்
ஆபிரகாம் பண்டிதர் ஒரு நல்ல புகைப்படக் கலைஞர். தனது சங்கீதம் குறித்த ஆய்வு பலருக்கும் பயன்பட
வேண்டும் என்பதற்காக நூலாகக் கொண்டு வந்தார்.
எடுத்த முடிவை எப்பாடு பட்டாவது நிறைவேற்றியே தீர வேண்டும் என்ற குணம் கொண்டவர்
ஆபிரகாம் பண்டிதர்.
அவர் ஒரு சிறந்த சித்த மருத்துவர். கோரோசனை மாத்திரைகளை சுயமாக தயாரித்து
கருவுற்ற பெண்களுக்கு வழங்கினார். மூலிகைப் பண்ணை நடத்தி வந்தார். அவரது சித்த மருந்துகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி
செய்யப்பட்டது. அவரது கணக்கில் வரவு செலவு பார்ப்பதற்கு சிரமப்பட்டு, பின்னை தஞ்சாவூர்
தபால் நிலையத்தில் ஆபிரகாம் பண்டிதர் கவுண்டர் என்பது திறக்கப்பட்டது. மத நல்லிணக்கத்தோடு
சிந்திக்கத் தெரிந்த ஆன்மீகவாதி. 100 ஆண்டுகளுக்கு முன் ஆய்வு செய்து வெளியிடப்பட்ட
கருத்துக்கள் இன்றும் மறுக்கப்படவில்லை. ஆபிரகாம் பண்டிதர் 6 முறை தஞ்சாவூரில் அகில
இந்திய அளவில் இசை குறித்த கருத்தரங்குகளை நடத்தினார்கள். அதில் அகில இந்திய அளவிலிருந்து
பல மன்னர்கள், வித்வான்கள், தமிழறிஞர்கள் பங்கேற்றனர். அம்மாநாட்டில் தனக்கேற்பட்ட
சந்தேகங்களை தீர்த்துக் கொள்ள முயற்சித்தார்.
தமிழகம், இந்தியா முழுமை மற்றும் ஐரோப்பிய அளவில் உள்ள இசை அறிஞர்களுக்கு தனது
ஐயப்பாட்டினைக் கேட்டார். யாரும் தெரியாது
என்று சொல்லி விட்டார்கள். அந்த மாநாடுகளை நடத்திய அமைப்பு தஞ்சாவூர் சங்கீத வித்யாஜன
சங்கம். அதில் பல்வேறு தலைப்புகளில் விவாத
மேடை நடைபெறும். தமிழ்ப் பஞ்சாயது, கணிதப்
பஞ்சாயத்து. விவாத மேடைகளுக்கு தலைவராக பட்டாச்சார்யா அவர்களும் உதவியாளராக வேம்பு
அவர்களும் இருந்திருக்கின்றார்கள். இந்த நிகழ்வுகளுக்கு
அவருக்கு பூண்டி அப்பாசாமி வாண்டையார் அவர்களும், உதவிக்கு பிச்சமுத்து அவர்களும் இருந்திருக்கின்றார்கள்.
தனது கருத்துக்களை மெய்ப்பிப்பதற்காக இரண்டு வீணைகளைச் செய்தார். தந்திகளை இயற்பியல்
விதிப்படி அமைத்தார். நரம்பினைத் தட்டினால் இரண்டு பக்கமும் இசை வரும். 24 சுரங்களை மகன்களுக்கு சொல்லிக் கொடுத்தார். பரோடா
மாநாட்டிலே மகன்களை வாசிக்கச் செய்தார். மாதவ
ராவ் சொன்னார் “இசை குறித்த சர்ச்சை ஓய்ந்தது”
ஆபிரகாம் பண்டிதரின் கருணாமிர்த சாகரம் குறித்து ஹைகோர்ட் நீதிபதி
திரு.டி.வி.சேஷகிரி ஐயர் சொன்னார் “தமிழ் இசை பற்றிய இந்நூல் தமிழனின் வரலாற்றையும்
பேசுகிறது”. கடல்கோல் என்றறியப்படும் சுனாமி
திருச்செந்தூரிலிருந்து பல பகுதிகளையும், இராமேஸ்வரத்திலிருந்து பல பகுதிகளையும் வெட்டி
எடுத்துச் சென்று விட்டது. இதனை லெமூரியா கண்டம் என்பார்கள் வெளிநாட்டினர். குமரிக்கண்டம்
என்பார் தேவநேயப் பாவாணர். மடகாஸ்கர் தீவில் காணப்படும் பாபோப் என்றழைக்கபடும் மரம்
தஞ்சாவூரில் உள்ளது. ஆப்ரிக்காவைச் சேர்ந்த
ஆதிவாசி மக்களின் கடவுள் பெயர் “மாரி”. வாய்க்கரிசி போடும் பழக்கமும் உள்ளது.
நைஜீரியாவில் பல கிராமங்களின் பெயர்கள் தமிழ்ப் பெயர்களாக உள்ளன.
பஞ்சாபில் உள்ள 400 கிராமங்களின் பெயர்கள் தமிழ்ப் பெயர்கள். ஆஸ்திரேலியாவில் வாழும் பழங்குடியினர் குறித்த நூல்
ஒன்றினைப் படித்தேன். ஆஸ்திரேலியாவில் கொரமண்டல் காடு உள்ளது. கொரமண்டல் என்றால் சோழ
மண்டலை என்று பொருள். இராஜராஜ சோழன் வெற்றி
கொண்ட பல நாடுகளின் பெயர்கள் தமிழ்ப் பெயர்களே.
தமிழகம் எவ்வளவு விரிந்து பரந்து இருந்தது என்பதற்கு இதுவெல்லாம் சாட்சிகள்.
குரல் வளையிலிருந்து வெளி வரும் ஒலியை பகுத்துப் பகுத்துப் பார்த்துக்கொண்டே
சென்றால் ஒவ்வொரு கூட்டத்தின் ஒலியும் மாறுபடு. இயக்கு மற்றும் சுருதி கணக்கில் அடங்காதது.
தொகுப்பு ; லெனின்பாரதி
Saturday, 29 November 2014
இனிமையான நேரங்கள் ..
ஒரு புறம் நடுங்க வைக்கும் குளிர் .. மறுபுரம் தொடர்ந்து இடைவிடாது பெய்து கொண்டிருக்கும் மழை .. இப்படிப்பட்ட இந்த காலத்தில் நேற்று மாலை (29.11.2014) ஆரோவில் யூனிட்டி ஹாலில் ஒரு சுவையான நடன நிகழ்ச்சி .. செல்வி.கிருத்திகா இரவிச்சந்திரன் அவர்களின் பரதநாட்டியம், திருமதி.தேஜஸ் (ஆரோவில்) மற்றும் செல்வி.அஸ்வினி (பெங்களூரு) ஆகியோரின் ஒடிசி நடன நிகழ்ச்சி.
குறைவான பார்வையாளர்களோடு நடைபெற்றது. மொத்தம் ஒரு மணி நேரம் நடைபெற்றது. நடன அசைவுகளும், அரங்க அமைப்பும் அனைவரையும் மெய் சிலிர்க்க வைத்தன ..கருத்துக்களை பகிருங்கள் ..
ஒரு புறம் நடுங்க வைக்கும் குளிர் .. மறுபுரம் தொடர்ந்து இடைவிடாது பெய்து கொண்டிருக்கும் மழை .. இப்படிப்பட்ட இந்த காலத்தில் நேற்று மாலை (29.11.2014) ஆரோவில் யூனிட்டி ஹாலில் ஒரு சுவையான நடன நிகழ்ச்சி .. செல்வி.கிருத்திகா இரவிச்சந்திரன் அவர்களின் பரதநாட்டியம், திருமதி.தேஜஸ் (ஆரோவில்) மற்றும் செல்வி.அஸ்வினி (பெங்களூரு) ஆகியோரின் ஒடிசி நடன நிகழ்ச்சி.
குறைவான பார்வையாளர்களோடு நடைபெற்றது. மொத்தம் ஒரு மணி நேரம் நடைபெற்றது. நடன அசைவுகளும், அரங்க அமைப்பும் அனைவரையும் மெய் சிலிர்க்க வைத்தன ..கருத்துக்களை பகிருங்கள் ..
Sunday, 23 November 2014
வள்ளலார் கண்ட சாகாக்கலை
வள்ளலார் கண்ட சாகாக்கலை அறிவியல், மெய்ப்பொருள், சித்தர் தத்துவ, சுத்த சன்மார்க்கத் திங்களிதழ் சார்பில் சிறப்புக் கூட்டம் புதுச்சேரி கிழக்கு கடற்கரைச் சாலையிலுள்ள நாகாத்தம்மன் கோவிலில் 23.11.2014 ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. இதழாசிரியர் திரு.நாராயணன் அனைவரையும் வரவேற்றார். நிகழ்வுக்கு இதழின் இணை ஆசிரியர் திரு.காசி வில்லவன் தலையேற்றார்.
திரு.காசி வில்லவன்
அருட்பாவை படிப்பது என்பது பொழுது போக்கல்ல. வள்ளலாரின் பாடல்களை மனமிரங்கிப் பாடினால் கண்ணில் நீர் வரும். மரணமில்லா பெருவாழ்வு என்பது சாத்தியமே. மேலை நாடுகளில் இது குறித்து ஆய்வு செய்தனர். உடம்பு மட்டுமே செயலிழந்து விடுகிறது. நமது தேகம் சூட்சும தேகம், அஞ்சுக தேகம், காரண தேகம் என் விரிந்து செல்கிறது. பொதுவுடைமை சிந்தாத்தத்தை புரிந்து கொண்டவர்களால் வள்ளலாரின் நெறிகளை எளிதில் புரிந்து கொள்ள முடியும். இதைத் தான் திருவள்ளுவர் "தெய்வத்தால் ஆகாதெனினும்" எனும் குறளில் வலியுறுத்துகிறார். கம்யூனிசம், மார்க்சியம் எட்டிய தூரத்தை விட வள்ளலார் கண்ட நெறி மிகவும் ஆழமானது. வள்ளலாரின் கருத்துக்களை பரப்பும் அமைப்புகளுக்கிடையே கருத்து வேற்றுமை இருக்கக் கூடாது. அது வள்ளலாருக்கு இழுக்கை ஏற்படுத்தும். தேர்ச்சி பெற்றவனும், 100 மதிப்பெண் பெற்றவனும் தேர்ச்சி பெற்றவர்களே. எனினும் வேறுபாடு உண்டு. பரிமாணம் என்பது வேறு. படிமானம் என்பது வேறு. இதனைத் தான் ஆறு திருமறைகள் உணர்த்துகின்றன.
பேரா.கருணாநிதி (திருத்தணி)
"ஆய்வாளர்கள் தங்களுக்கென குறிக்கோளை அமைத்துக் கொள்வார்கள். அதையொட்டி அவர்களின் செயல்பாடுகள் இருக்கும். ஆய்வின் பயன்பாடு தரமுள்ளதாக இருக்கும். சாகாக்கலை இப்போது தான் பிரபலமாகிக் கொண்டு வரும் நெறி. உயிரிணக்கத்தில் வள்ளலாரை விட உயர்ந்தவர் இல்லை. சமுதாய சீர்திருத்தம், இலக்கியச் சுவை, இறை அருள் என அனைத்து சிந்தனைகளுமே அதில் தளும்பிக் கிடக்கின்றன. உயிரிணக்கத்தின் மூலம் இறைவன் அருளைப் பெறலாம். இறைவன் அருளைப் பெற்றவர்கள் சாகாக் கலையை கற்றுத் தேறலாம். "என்றுமுள்ள தென்தமிழ்" என்று திரு.வி.க. சொன்னார். அதாவது தமிழ் தோன்றமுமில்லை. அழியப் போவதுமில்லை.
தமிழில் உள்ள "ழ" என்ற எழுத்து இயற்கை, உண்மை, சிறப்பியல் எழுத்து. இந்த எழுத்தை உச்சரிக்கும் போது நாக்கு மடங்கி அன்னாக்கைத் தொடும். இந்த எழுத்தை உச்சரிக்கும் போது சுவாசம் நடைபெறாது. இது மூச்சு செயலாகாத சாகாக்கலையைக் குறிக்கிறது. சன்மார்க்கம் போல சாகாக்கலை தொடக்கமில்லாதது. முடிவில்லாதது."ழ" உச்சரிப்பின் அடையாளம் சிறப்பானது. சுவாசம் வீணாவதில்லை. இதனால் ஆயுள் நீட்டிப்பு உண்டாகும் சுவாசத்தை வீணாக்காமல் இருந்தால் நீண்ட நாள் வாழலாம். பிரம்மாவின் ஒரு சுவாசத்திற்கு ஆகும் காலம் 4,32,000 ஆண்டுகள். விஷ்ணு ஒரு சுவாசத்திற்கு எடுத்துக் கொள்ளும் காலம் 8,64,000 ஆண்டுகள். சுவாசம் குறையக் குறைய ஆயுள் அதிகரிக்கும். ஆமையின் ஆயுள் 300 ஆண்டுகள். எனவே தான் திருவள்ளுவர் "பொறுமையுள் ஆமை போல" என்கிறார். உடல் அற்புதமான கருவி. நமது உடலிலுள்ள உறுப்புகளை வரிசையாக அடுக்க ஆரம்பித்தால் 1-1/2 இந்தியாவை சுற்றி வரவேண்டி இருக்கும். இவ்வாறு உள்ள உறுப்புகளை மிக அழகாக அடுக்கி வைத்தது யார் ? நாம் உண்ணும் உணவினை தொண்டை வரும் கொண்டு செல்வதோடு நமது பணி முடிந்து விடுகிறது. பிறகு அதை நெறிப்படுத்துவது யார் செயல் ? சாகாக்கலை நோக்கி பயணிக்க ஆரம்பித்தவர்களுக்கு கீழ்நிலை வாராது. முதுமை வருவதற்கான காரணம் என்ன ? உடம்பில் PRE-RADICALS என்று சொல்லக் கூடிய நேர்மின்னேற்றம் கொண்ட துகள்கள் அதிகரிப்பே. வயது வயோதிகத்திற்கு காரணமல்ல. சிறியவர்களிடம் ஒரு காரியத்தை சொல்லி அதை செய்வதற்கு அவர்கள் சோம்பேறித்தனப் பட்டால் அவர்கள் வாலிபத்தில் வயோதிகத்தை அடைந்து விட்டார்கள் என்று பொருள். இந்தியா திபெத் எல்லையில் உள்ள பழங்குடி மக்கள் ஐந்து உடற்பயிற்சிகள் செய்கிறார்கள். அவர்களுக்கு அதனை கற்பிக்க பணித்தது வள்ளார் அவர்கள். அவர்கள் ஆரோக்கியமாக இருக்கிறார்கள். அந்த ஐந்து உடற்பயிற்சிகளை அவர்கள் ஆராதனை என்கிறார்கள்.
"தாயார் முதல் சுற்றத்தார் நீங்குவார்
அந்நேரமதில் நோயால் அணுகுவார்
படுத்த பாயார் துணையார்
நீயார் நான்யார் என்பர் சுற்றத்தார்"
என்கிற வரிகள் வயோதிகத்தின் சுழல் குறித்து விவரிக்கிறது.
மறுபிறப்பு குறித்து ஒரு படம் YOUTUBE உள்ளது. THE UNMISTAKEN CHILD என்கிற அப்படத்தில் மறைந்து போன தனது குருவை சிஷ்யன் கண்டுபிடிப்பது படமாக்கப்பட்டுள்ளது. சாகாக்கலையை கற்பிக்கும் பணியினைச் செய்வோம். புதுச்சேரிக்கு வந்திருந்து அதனை நானே கற்பிக்கும் திட்டமும் உள்ளது. விருப்ப்முள்ளவர்கள் அதில் இணைந்து பயன் பெறலாம்."
இது குறித்து மேலும் விவரங்கள் தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் முனைவர்.க.நாராயணன் அவர்களை கைபேசி எண் 9442152764- யில் தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.
Friday, 14 November 2014
தமிழக மீனவர்கள் 5 பேரின் தூக்கு ரத்து செய்திட இலங்கை அதிபர் ராஜபக்ச ஒப்புதல் அளித்துள்ளார்.
இலங்கை அரசியலமைப்புச் சட்டப்படி, நீதிமன்றம் விதித்த தண்டனையை குறைக்கவோ, ரத்து செய்யவோ அதிபருக்கு அதிகாரம் உண்டு. இந்திய அரசு மேல்முறையீட்டு மனுவைத் திரும்பப்பெற்றவுடன், 5 மீனவர்களும் விடுதலை செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை கால்னடை அபிவிருத்தித் துறை அமைச்சருமான ஆறுமுக தொண்டமான் தெரிவித்துள்ளார்.
மீனவர்களை மீட்டெடுக்க முயற்சிகள் மேற்கொண்ட இந்தியப் பிரதமர் திருமிகு.நரேந்திர மோடி அவர்களும், இலங்கை அதிபர் திருமி. ராஜபக்ச அவர்களும், ஊவா மாகாண உள்கட்டமைப்புத் துறை அமைச்சர் திருமிகு.செந்தில் தொண்டமானும், இலங்கை கால்நடை அபிவிருத்தித் துறை அமைச்சருமான ஆறுமுக தொண்டமானும் பாராட்டுக்குரியவர்கள்.
ஒன்றுபட்ட இலங்கையில் ஈழத்தமிழர்களும், சிங்கள மக்களும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு. எத்தகைய ஆத்திரமூட்டலுக்கும் இரையாகி விடக்கூடாது என்பதே நமது கவலை ..
இலங்கை அரசியலமைப்புச் சட்டப்படி, நீதிமன்றம் விதித்த தண்டனையை குறைக்கவோ, ரத்து செய்யவோ அதிபருக்கு அதிகாரம் உண்டு. இந்திய அரசு மேல்முறையீட்டு மனுவைத் திரும்பப்பெற்றவுடன், 5 மீனவர்களும் விடுதலை செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை கால்னடை அபிவிருத்தித் துறை அமைச்சருமான ஆறுமுக தொண்டமான் தெரிவித்துள்ளார்.
மீனவர்களை மீட்டெடுக்க முயற்சிகள் மேற்கொண்ட இந்தியப் பிரதமர் திருமிகு.நரேந்திர மோடி அவர்களும், இலங்கை அதிபர் திருமி. ராஜபக்ச அவர்களும், ஊவா மாகாண உள்கட்டமைப்புத் துறை அமைச்சர் திருமிகு.செந்தில் தொண்டமானும், இலங்கை கால்நடை அபிவிருத்தித் துறை அமைச்சருமான ஆறுமுக தொண்டமானும் பாராட்டுக்குரியவர்கள்.
ஒன்றுபட்ட இலங்கையில் ஈழத்தமிழர்களும், சிங்கள மக்களும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு. எத்தகைய ஆத்திரமூட்டலுக்கும் இரையாகி விடக்கூடாது என்பதே நமது கவலை ..
Sunday, 2 November 2014
பத்மநாபபுரம் அரண்மனையைக் காணும் வாய்ப்பு சமீபத்தில் கிடைத்தது (
31.10.2014). நாகரகோவிலில் இருந்து தக்கலை சென்று அங்கிருந்து டவுன் பஸ் அல்லது ஆட்டோவில் சென்று பார்க்கலாம். திங்கள் கிழமை விடுமுறை. அவர்களின் கட்டிட வடிவமைப்பு முறை உண்மையில் மிகப் பெரிய ஆச்சரியம். சில புகைப்படங்கள் இங்கே . நடன அரங்கு, சமையல் கூடம் என்று ஏக அமர்க்களம் .
31.10.2014). நாகரகோவிலில் இருந்து தக்கலை சென்று அங்கிருந்து டவுன் பஸ் அல்லது ஆட்டோவில் சென்று பார்க்கலாம். திங்கள் கிழமை விடுமுறை. அவர்களின் கட்டிட வடிவமைப்பு முறை உண்மையில் மிகப் பெரிய ஆச்சரியம். சில புகைப்படங்கள் இங்கே . நடன அரங்கு, சமையல் கூடம் என்று ஏக அமர்க்களம் .
Subscribe to:
Comments (Atom)





































