Tuesday, 29 November 2016
Monday, 14 November 2016
புதுச்சேரி சிற்றிதழ் இயக்கம் - தொடக்க விழா
புதுச்சேரியில் உள்ள சிற்றிதழாளர்கள் நலனுக்காக அமைப்பு ஒன்றினைத் தொடங்கினோம். முதலில் புதுச்சேரி சிற்றிதழ் இயக்கம் எனப் பெயரிட்டோம். அப்பெயரில் அமைப்பு இருக்கிறது என்பதால் புதுச்சேரி சிறுபத்திரிக்கையாளர் சங்கம் என்கிற பெயரிட்டோம். அதுவும் ஏற்கேனவே தொடங்கப்பட்டு விட்டது என பதிவுத் துறையில் சொல்லப்பட்ட நிலையில் மிகவும் ஆழமாக பல நண்பர்களுடன் ஆலோசித்து "புதுச்சேரி சிற்றிதழ் இயக்கம்" எனப்பெயரிட்டோம். பதிவும் கிடைத்து விட்டது.
"புதுச்சேரி சிற்றிதழ் இயக்கம்" தொடக்க விழா நாளை மாலை 6 மணிக்கு புதுச்சேரி நீடராஜப்பய்யர் வீதியில் உள்ள செகா ஆர்ட் கேலரியில் நடைபெற உள்ளது. இயக்கத்தினை திருமிகு.க.இலட்சுமிநாராயணன் - சட்டமன்ற உறுப்பினர் தொடங்கி வைக்க உள்ளார்கள். பத்திரிக்கையாளரும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைச் செயலாருமாகிய தோழர்.மயிலை பாலு சிறப்புரை ஆற்றிட உள்ளார்.
Thursday, 15 September 2016
பாவலர் தங்கப்பாவின் பூம்பூம்மாட்டுக்காரன் நூல் வெளியீடு
பாவலர் தங்கப்பாவின் பூம்பூம் மாட்டுக்காரன் முதலான குழந்தைப் பாடல்கள்.
இடம் : புதுவைத் தமிழ்ச்சங்கம், 45 அடி சாலை, வெங்கட்டா நகர், புதுச்சேரி.
நாள் : 25.09.2016 ஞாயிறு மாலை சரியாக 5.30 மணி
பங்கேற்பு :
பாடல்களுடன் . கலைமாமணி திரு.இ.பட்டாபிராமன்
வெளியிடுபவர் : எழுத்தாளர் பாவண்ணன்
வாழ்த்துரை : பாவலர்.இரா.மீனாட்சி
உடன் வந்து பாடி மகிழ்வடு
Wednesday, 14 September 2016
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க 2015 விருதுகள்
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் வழங்கும் 2015 ஆம் ஆண்டில் வெளியான சிறந்த கலை இலக்கிய நூல்களுக்கான நடுவர் குழு முடிவுகள் வருமாறு :
1.சிறந்த நாவலுக்கான அமரர் கே.பாலச்சந்தர் நினைவு விருது
நூல் : மெளனத்தின் சாட்சியங்கள்
நூலாசிரியர் : சம்சுதீன் ஹீரா
பதுப்பகம் : பொன்னுலகம்
நூலாசிரியர் : சம்சுதீன் ஹீரா
பதுப்பகம் : பொன்னுலகம்
2. சிறந்த கவிதை நூலுக்கான வெம்பாக்கம் ஏ.பச்சையப்பன்- செல்லம்மாள் ப.ஜெகந்நாதன் நினைவு விருது
நூல் : ஆகாயத்தோட்டிகள்
நூலாசிரியர் : பூர்ணா
பதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
நூல் : ஆகாயத்தோட்டிகள்
நூலாசிரியர் : பூர்ணா
பதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
3. சிறந்த சிறுகதை நூலுக்கான அகிலா சேதுராமன் நினைவு விருது
நூல் : புழுதிச்சூடு
நூலாசிரியர் : ம.காமுத்துரை
பதிப்பகம் : வெர்சோ பேஜஸ்
நூலாசிரியர் : ம.காமுத்துரை
பதிப்பகம் : வெர்சோ பேஜஸ்
4. சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான வ.சுப.மாணிக்கனார் நினைவு விருது
நூல் : திப்புசுல்தான்
நூலாசிரியர் : அர்ஷியா
பதிப்பகம் : எதிர் வெளியீடு
நூலாசிரியர் : அர்ஷியா
பதிப்பகம் : எதிர் வெளியீடு
5. சிறந்த விளிம்புநிலை மக்கள் படைப்புக்கான அமரர் சு.சமுத்திரம் நினைவு விருது
நூல் : ஒரு சவரக்காரனின் கவிதை மயிருகள்
நூலாசிரியர் : இ.எம்.எஸ்.கலைவாணன்
பதிப்பகம் : அறம் பதிப்பகம்
நூலாசிரியர் : இ.எம்.எஸ்.கலைவாணன்
பதிப்பகம் : அறம் பதிப்பகம்
6. சிறந்த கலை இலக்கிய விமர்சன நூலுக்கான தோழர்.இரா.நாகசுந்தரம் நினைவு விருது
நூல் : சிலப்பதிகாரம் மறுவாசிப்பு
நூலாசிரியர் : தி.சு.நடராஜன்
பதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
நூலாசிரியர் : தி.சு.நடராஜன்
பதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
7.சிறந்த தொன்மைசார் நூலுக்கான தோழர் கே.முத்தையா நினைவு விருது
நூல் : பாணர் இனவரைவியல்
நூலாசிரியர் : முனைவர் பக்தவச்சலபாரதி
பதிப்பகம் : அடையாளம்
நூலாசிரியர் : முனைவர் பக்தவச்சலபாரதி
பதிப்பகம் : அடையாளம்
த மு எ க ச வழங்கும் கு.சி.பா அறக்கட்டளை விருதுகள்
1. சிறந்த குழந்தைகள் இலக்கியத்திற்கான விருது
நூல் : பறக்கும் பப்பி பூவும் அட்டைக்கத்தி ராஜாவும்
நூலாசிரியர் : மு.முருகேஷ்
பதிப்பகம் : அகநி
நூல் : பறக்கும் பப்பி பூவும் அட்டைக்கத்தி ராஜாவும்
நூலாசிரியர் : மு.முருகேஷ்
பதிப்பகம் : அகநி
2. சிறந்த மொழிவளர்ச்சிக்கு உதவும் நூலுக்கான விருது
நூல் : ஆதிமொழி
நூலாசிரியர் : முனைவர்.இரா.மதிவாணன்
பதிப்பகம் : ஸ்ரீ வித்யாதிராஜ தர்ம சபா
நூல் : ஆதிமொழி
நூலாசிரியர் : முனைவர்.இரா.மதிவாணன்
பதிப்பகம் : ஸ்ரீ வித்யாதிராஜ தர்ம சபா
முற்போக்கு கலை இலக்கியத்திற்கு
சிறப்பான பங்களிப்பு செய்த
கலை இலக்கிய ஆளுமைக்கான விருது
சிறப்பான பங்களிப்பு செய்த
கலை இலக்கிய ஆளுமைக்கான விருது
பெறுபவர் : மார்க்சிய அறிஞர்
எஸ்.வி.ராஜதுரை
எஸ்.வி.ராஜதுரை
வரும் செப்டம்பர் 25 ஆம் தேதி ஞாயிறன்று விருது வழங்கும் விழாவும்,நூல்கள் குறித்த ஆய்வரங்கமும் தேனியிலுள்ள வாசவி திருமண மண்டபத்தில் நடைபெறும்.
எஸ்.கருணா
த.மு.எ.க.ச 2015 கலை இலக்கிய விருதுகள் - அறிவிப்பு
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் வழங்கும் 2015 ஆம் ஆண்டில் வெளியான சிறந்த கலை இலக்கிய நூல்களுக்கான நடுவர் குழு முடிவுகள் வருமாறு :
1.சிறந்த நாவலுக்கான அமரர் கே.பாலச்சந்தர் நினைவு விருது
நூல் : மெளனத்தின் சாட்சியங்கள்
நூலாசிரியர் : சம்சுதீன் ஹீரா
பதுப்பகம் : பொன்னுலகம்
நூலாசிரியர் : சம்சுதீன் ஹீரா
பதுப்பகம் : பொன்னுலகம்
2. சிறந்த கவிதை நூலுக்கான வெம்பாக்கம் ஏ.பச்சையப்பன்- செல்லம்மாள் ப.ஜெகந்நாதன் நினைவு விருது
நூல் : ஆகாயத்தோட்டிகள்
நூலாசிரியர் : பூர்ணா
பதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
நூல் : ஆகாயத்தோட்டிகள்
நூலாசிரியர் : பூர்ணா
பதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
3. சிறந்த சிறுகதை நூலுக்கான அகிலா சேதுராமன் நினைவு விருது
நூல் : புழுதிச்சூடு
நூலாசிரியர் : ம.காமுத்துரை
பதிப்பகம் : வெர்சோ பேஜஸ்
நூலாசிரியர் : ம.காமுத்துரை
பதிப்பகம் : வெர்சோ பேஜஸ்
4. சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான வ.சுப.மாணிக்கனார் நினைவு விருது
நூல் : திப்புசுல்தான்
நூலாசிரியர் : அர்ஷியா
பதிப்பகம் : எதிர் வெளியீடு
நூலாசிரியர் : அர்ஷியா
பதிப்பகம் : எதிர் வெளியீடு
5. சிறந்த விளிம்புநிலை மக்கள் படைப்புக்கான அமரர் சு.சமுத்திரம் நினைவு விருது
நூல் : ஒரு சவரக்காரனின் கவிதை மயிருகள்
நூலாசிரியர் : இ.எம்.எஸ்.கலைவாணன்
பதிப்பகம் : அறம் பதிப்பகம்
நூலாசிரியர் : இ.எம்.எஸ்.கலைவாணன்
பதிப்பகம் : அறம் பதிப்பகம்
6. சிறந்த கலை இலக்கிய விமர்சன நூலுக்கான தோழர்.இரா.நாகசுந்தரம் நினைவு விருது
நூல் : சிலப்பதிகாரம் மறுவாசிப்பு
நூலாசிரியர் : தி.சு.நடராஜன்
பதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
நூலாசிரியர் : தி.சு.நடராஜன்
பதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
7.சிறந்த தொன்மைசார் நூலுக்கான தோழர் கே.முத்தையா நினைவு விருது
நூல் : பாணர் இனவரைவியல்
நூலாசிரியர் : முனைவர் பக்தவச்சலபாரதி
பதிப்பகம் : அடையாளம்
நூலாசிரியர் : முனைவர் பக்தவச்சலபாரதி
பதிப்பகம் : அடையாளம்
த மு எ க ச வழங்கும் கு.சி.பா அறக்கட்டளை விருதுகள்
1. சிறந்த குழந்தைகள் இலக்கியத்திற்கான விருது
நூல் : பறக்கும் பப்பி பூவும் அட்டைக்கத்தி ராஜாவும்
நூலாசிரியர் : மு.முருகேஷ்
பதிப்பகம் : அகநி
நூல் : பறக்கும் பப்பி பூவும் அட்டைக்கத்தி ராஜாவும்
நூலாசிரியர் : மு.முருகேஷ்
பதிப்பகம் : அகநி
2. சிறந்த மொழிவளர்ச்சிக்கு உதவும் நூலுக்கான விருது
நூல் : ஆதிமொழி
நூலாசிரியர் : முனைவர்.இரா.மதிவாணன்
பதிப்பகம் : ஸ்ரீ வித்யாதிராஜ தர்ம சபா
நூல் : ஆதிமொழி
நூலாசிரியர் : முனைவர்.இரா.மதிவாணன்
பதிப்பகம் : ஸ்ரீ வித்யாதிராஜ தர்ம சபா
முற்போக்கு கலை இலக்கியத்திற்கு
சிறப்பான பங்களிப்பு செய்த
கலை இலக்கிய ஆளுமைக்கான விருது
சிறப்பான பங்களிப்பு செய்த
கலை இலக்கிய ஆளுமைக்கான விருது
பெறுபவர் : மார்க்சிய அறிஞர்
எஸ்.வி.ராஜதுரை
எஸ்.வி.ராஜதுரை
வரும் செப்டம்பர் 25 ஆம் தேதி ஞாயிறன்று விருது வழங்கும் விழாவும்,நூல்கள் குறித்த ஆய்வரங்கமும் தேனியிலுள்ள வாசவி திருமண மண்டபத்தில் நடைபெறும்.
எஸ்.கருணா
Tuesday, 13 September 2016
புதுச்சேரி - பாரதியார் நினைவு நாள் உரை
12.09.2016 அன்று புதுச்சேரி பாரதி நினைவு இல்லத்தில் நடைபெற்ற பாரதி நினைவு நாள் நிகழ்வில் முனைவர்.ச.சுப்புரெத்தினம் அவர்கள் "வாழ்வியல் ஞானி பாரதியார்: எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். நிகழ்வில் முனைவர்.எம்.எஸ்.காந்திமேரி, திருமிகு.ச.ஹேமச்சந்திரன், முனைவர் க.பஞ்சாங்கம் பங்கேற்றார்கள்.
முனைவர்.ச.சுப்புரெத்தினம் உரையிலிருந்து சில பகுதிகள் :
முனைவர்.ச.சுப்புரெத்தினம் உரையிலிருந்து சில பகுதிகள் :
பண்பில்லாதவன்
மரத்துக்கு ஒப்பானவன். ஈனத் தொழில் செய்பவன் என்றால் வாழத்தகுதியற்றவன் என்று பொருள்
கொள்ளலாம். ஐயம் என்பதும் பிச்சை என்பதும் வேறு வேறு. ஐயம் என்பது அறவோர்க்கு அளித்தலாகும்.
மனிதாபிமானத்தோடு வாழ்பவனே மனிதன். மனிதன் மட்டுமே பகைவனுக்கு அருளும் தன்மை கொண்டவன்.
பாரதி போதைப் பொருளுக்கு அடிமையானவர் என்பது அறியாமையின் வெளிப்பாடாகும்.
அறிவு எல்லாத் துன்பங்களையும் நீக்கும். “மீனைக்
கொடுக்காதே. மீன் பிடிக்கக் கற்றுக் கொடு” என்றார்கள். ஆசிரியப் பணியும், மருத்துவர்
பணியும் புனிதமான தொழிலாகும். ஆசிரியப் பணி உளநோயைப் போக்கும். மருத்துவப் பணி உடல்
நோயை போக்கும். இருவரும் முக்கியமானவர்கள். ஆசிரியர் ஒழுக்கத்தையும் சேர்த்துக் கற்றுக்
கொடுக்க வேண்டும். அறிவோடு ஒழுக்கத்தையும் சொல்லிக் கொடுக்க வேண்டும்.
ஆங்கிலம் பல மொழிகளைச் சட்டையாகப் போட்டுக் கொண்ட
மொழியாகும். மனைவியையும், நண்பனையும் விட்டுக் கொடுக்காதே என்பார்கள். ஒரு முறை தாமஸ்
ஆல்வா எடிசனின் நண்பர் அவரது கண்டுபிடிப்பைக் கொண்ட குடுவை ஒன்றை உடைத்து விட்டார்.
சுற்றி இருந்த நண்பர்களெல்லாம் எடிசன் நண்பரைத் திட்டுவார் என்று எதிர்பார்த்த போது
அவர் கோபப்படவில்லை. எல்லோரும் காரணம் கேட்ட போது எடிசன் சொன்னார் எனது கண்டுபிடிப்பை
சில காலத்தில் உருவாக்கிக் கொள்ள முடியும் ஆனால் எனது நட்பை கோபப்பட்டு நான் உடைத்து
விட்டால் அதை உருவாக்க முடியுமா ?
50 வயதிற்குப் பிறகு மனைவிக்கு கணவனும், மனைவிக்கு
கணவனும் தான் துணை. தொழில் போல உடலையும் புனிதமாக நினைக்க வேண்டும்.
தோழர் தமிழ்ச்செல்வனின் உரை 11.9.2016 புதுச்சேரி
குஜராத்
கோப்புகள் குறித்த தோழர்.தமிழ்செல்வன்
(தலைவர் – தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்) உரை (11.09.2016 – புதுச்சேரி) :
இந்நூலின் ஆசிரியர் ரானா அயூப் ஒரு 26 வயதுப் பெண். இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்.
மூன்று வயது பெண் குழந்தை பாலியியல் வங்கொடுமையால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில்
சிகிச்சை பெற்றதைத் தொடர்ந்து அந்தக் குழந்தை சிகிச்சை பெற்று வந்த அரசு மருத்துவமனைக்கு
நிகழ்வினைப் பேட்டி எடுப்பதற்காகச் சென்றிருக்கிறார். அப்போது ஏற்பட்ட மன உளைச்சல்
மற்றும் குஜராத் கோத்ரா சம்பவங்கள் ஏற்பட்ட மனதளவிலான பாதிப்புகள் அவரை இந்நூலை எழுதத்
தூண்டியிருக்கின்றன. குஜராத்தில் நடைபெற்ற காவல் துறை என்கவுண்டர்கள் கொலைகள்தான் என
நிருபிக்க ஆதாரங்களும், நிருபணமும் தேவை. குறிப்பாக அன்றைய தேதியில் குஜராத்தின் உள்துறை
அமைச்சராக இருந்த அமித்ஷாவின் உண்மையான முகத்தை வெளிக் கொணர்ந்து அவர் மீது விசாரணை
செய்ய வைத்த பெருமை இவரையேச் சாரும்.
குஜராத் ரயில் எரிப்புச் சம்பவத்திற்கு சில தினங்களுக்கு
முன் அதாவது பிப்ரவரி 27
அன்று ஒரு பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. அதில் தான் கோத்ரா சம்பவத்திற்கான அடிக்கல்
நாட்டப்படுகிறது. இந்நூல் ஆசிரியர் தனது பெயரை மைதிலி தியாகி என்று மாற்றிக்கொண்டு
கான்பூரைச் சேர்ந்தவர் என்றும் தனது தந்தை வேத சாஸ்திரம் பயின்றவர் என்றும் சொல்லிக்
கொண்டு கஷ்டப்பட்டு சில பகவத் கீதை சுலோகங்களையும் மனப்பாடம் செய்து கொண்டு குஜராத்திற்குள்
நுழைகிறார். தனது நடை உடை பாவனைகளை மாற்றிக் கொள்கிறார். தன்னை ஒரு திரைப்படத் தயாரிப்பாளராக
அறிவித்துக் கொண்டு இச்சம்பவத்தின் போது அங்கிருந்த பலரையும் பேட்டி எடுக்கிறார். ஒரு
திரைப்பட தயாரிப்பாளர் அவருக்கு உதவுகிறார்.
இச்சம்பவம் நடைபெற்ற போது அங்கிருந்த சிங்காள் என்கிற காவல்துறை அதிகாரியைச்
சந்தித்து பேட்டி எடுக்கிறார். நோக்கம் உண்மையைக் கண்டறிவது என்பதால் பல்வேறு நெருக்கடிகளையும்
சகித்துக் கொண்டு பணியாற்றுகிறார். நடந்த சம்பவங்களை உண்மைப் பிண்ணனியில் நூலாக வெளியிட
முடிவு செய்து அணுகும்போது தெஹல்கா நிறுவனம் அதற்கு மறுத்து விடுகிறது. நிகழ்வுகளைப்
பதிவு செய்வதற்காக ரெகார்டரோடு மிகக் கஷ்டப்பட்டு பல்வேறு செக்யூரிட்டி பரிசோதனைகளையும்
வெற்றிகரமாக கடந்து பல இடங்களுக்குச் சென்று பல விஷயங்களைப் பதிவு செய்திருக்கிறார்.
மனம் ஒப்பாத போதும் கோத்ரா சம்பவங்களின் போது ஆளும் கட்சியின் வற்புறுத்தலின் பெயரில்
பகடைக்காய்களாக பயன்படுத்தப்பட்ட காவல் துறை அதிகாரிகள் மீது இரக்கம் வருவதாக சொல்கிறார்.
காரணம் அந்த அதிகாரிகள் அப்போதைய ஆளும் அரசுக்கு நிர்பந்தம் காரணமாக உண்மையாக இருந்ததாக
நிருபிக்கப்படுகிறது.
கோவையில் நடைபெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தின்
போது செல்வராஜ் என்ற காவல்காரர் உயிரிழந்தார். அவர் ஹிந்து என்ற காரணம் காட்டப்பட்டது.
உண்மையில் அந்த காவல்காரரின் முழுப் பெயர் அந்தோணி செல்வராஜ் என்பதாகும் (ஆதாரம் :
நூல் “கோவை கலவரத்தில் எனது சாட்சியம்”). இந்தியா முழுவதும் மதவாதிகளின் பார்முலா ஒரே
மாதிரி தான் இருந்திருக்கிறது.
குஜராத்தில் தலித் DGP இருக்கிறார். ஆனால் அவரால்
தான் பிறந்த ஊரில் தனக்கென ஒரு சொந்த வீடு கட்ட முடியவில்லை.
இதில் குறிப்பாக சொல்ல வேண்டிய விஷயம் நல்லவர்களின்
மெளனம் மிகப்பெரிய ஆபத்தாகும். மதச்சார்பற்ற சக்திகள் சோம்பேறிகளாக இருக்கிறோம். நாம்
கருத்தரங்கள் நடத்திக் கொண்டிருக்கிறோம். அவர்கள் தெருக்களில் இறங்கி தங்கள் வேலைகளை
ஆரம்பித்து விட்டார்கள். மதச் சார்பற்ற சக்திகள் சோம்பேறிகளாக இருக்கிறோம்.
இந்து மதவாதிகள் அம்பேத்கர் நினைவுகளை அழிக்கிறார்கள்.
புதிய அம்பேத்காரை உருவாக்குகிறார்கள். அன்பாய்
இருந்த ராமர் இப்போது கையில் அம்புடன் தான் காட்சியளிக்கிறார். இப்போது புதிய பெரியாரையும்
கொண்டு வர முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்போது திருவள்ளுவர் “சாமி” ஆகிவிட்டார்.
குஜராத் சம்பவம் நடைபெற்ற போது ஜனாதிபதியாக திரு.கே.ஆர்.நாராயணன்
அவர்கள் இருந்தார். என்னைப் பொருத்தவரை மோடி ஒரு பூச்சாண்டிதான். ஆயிரம் சமுத்திரம்
கொண்டு அலம்பினாலும் தீராத கறை.
Saturday, 10 September 2016
கலாச்சாரங்க வேற் எனினும் நாம் இந்தியரே ...
பாரத நாட்டின் சிறப்பம்சமே வேறு வேறு வகை கலாச்சாரங்கள், பண்பாடு, மொழி .. இவைகளையெல்லாம் ஒன்றிணைத்து உருவாகியிருப்பது தான் இந்தியா . இதில் ஒன்றை ஒன்று அழிக்க நினைப்பதோ, ஒழிக்க நினைப்பதோ மிக மிக தவறு.. வாருங்கள் அனைவரையும் பாராட்டுவோம்.. அனைத்து கலைகளையும் அழியாமல் காப்போம் .. அதுவே தேவை ..ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் சிறந்து நிற்கிறார்கள் ..
Subscribe to:
Comments (Atom)















