குஜராத்
கோப்புகள் குறித்த தோழர்.தமிழ்செல்வன்
(தலைவர் – தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்) உரை (11.09.2016 – புதுச்சேரி) :
இந்நூலின் ஆசிரியர் ரானா அயூப் ஒரு 26 வயதுப் பெண். இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்.
மூன்று வயது பெண் குழந்தை பாலியியல் வங்கொடுமையால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில்
சிகிச்சை பெற்றதைத் தொடர்ந்து அந்தக் குழந்தை சிகிச்சை பெற்று வந்த அரசு மருத்துவமனைக்கு
நிகழ்வினைப் பேட்டி எடுப்பதற்காகச் சென்றிருக்கிறார். அப்போது ஏற்பட்ட மன உளைச்சல்
மற்றும் குஜராத் கோத்ரா சம்பவங்கள் ஏற்பட்ட மனதளவிலான பாதிப்புகள் அவரை இந்நூலை எழுதத்
தூண்டியிருக்கின்றன. குஜராத்தில் நடைபெற்ற காவல் துறை என்கவுண்டர்கள் கொலைகள்தான் என
நிருபிக்க ஆதாரங்களும், நிருபணமும் தேவை. குறிப்பாக அன்றைய தேதியில் குஜராத்தின் உள்துறை
அமைச்சராக இருந்த அமித்ஷாவின் உண்மையான முகத்தை வெளிக் கொணர்ந்து அவர் மீது விசாரணை
செய்ய வைத்த பெருமை இவரையேச் சாரும்.
குஜராத் ரயில் எரிப்புச் சம்பவத்திற்கு சில தினங்களுக்கு
முன் அதாவது பிப்ரவரி 27
அன்று ஒரு பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. அதில் தான் கோத்ரா சம்பவத்திற்கான அடிக்கல்
நாட்டப்படுகிறது. இந்நூல் ஆசிரியர் தனது பெயரை மைதிலி தியாகி என்று மாற்றிக்கொண்டு
கான்பூரைச் சேர்ந்தவர் என்றும் தனது தந்தை வேத சாஸ்திரம் பயின்றவர் என்றும் சொல்லிக்
கொண்டு கஷ்டப்பட்டு சில பகவத் கீதை சுலோகங்களையும் மனப்பாடம் செய்து கொண்டு குஜராத்திற்குள்
நுழைகிறார். தனது நடை உடை பாவனைகளை மாற்றிக் கொள்கிறார். தன்னை ஒரு திரைப்படத் தயாரிப்பாளராக
அறிவித்துக் கொண்டு இச்சம்பவத்தின் போது அங்கிருந்த பலரையும் பேட்டி எடுக்கிறார். ஒரு
திரைப்பட தயாரிப்பாளர் அவருக்கு உதவுகிறார்.
இச்சம்பவம் நடைபெற்ற போது அங்கிருந்த சிங்காள் என்கிற காவல்துறை அதிகாரியைச்
சந்தித்து பேட்டி எடுக்கிறார். நோக்கம் உண்மையைக் கண்டறிவது என்பதால் பல்வேறு நெருக்கடிகளையும்
சகித்துக் கொண்டு பணியாற்றுகிறார். நடந்த சம்பவங்களை உண்மைப் பிண்ணனியில் நூலாக வெளியிட
முடிவு செய்து அணுகும்போது தெஹல்கா நிறுவனம் அதற்கு மறுத்து விடுகிறது. நிகழ்வுகளைப்
பதிவு செய்வதற்காக ரெகார்டரோடு மிகக் கஷ்டப்பட்டு பல்வேறு செக்யூரிட்டி பரிசோதனைகளையும்
வெற்றிகரமாக கடந்து பல இடங்களுக்குச் சென்று பல விஷயங்களைப் பதிவு செய்திருக்கிறார்.
மனம் ஒப்பாத போதும் கோத்ரா சம்பவங்களின் போது ஆளும் கட்சியின் வற்புறுத்தலின் பெயரில்
பகடைக்காய்களாக பயன்படுத்தப்பட்ட காவல் துறை அதிகாரிகள் மீது இரக்கம் வருவதாக சொல்கிறார்.
காரணம் அந்த அதிகாரிகள் அப்போதைய ஆளும் அரசுக்கு நிர்பந்தம் காரணமாக உண்மையாக இருந்ததாக
நிருபிக்கப்படுகிறது.
கோவையில் நடைபெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தின்
போது செல்வராஜ் என்ற காவல்காரர் உயிரிழந்தார். அவர் ஹிந்து என்ற காரணம் காட்டப்பட்டது.
உண்மையில் அந்த காவல்காரரின் முழுப் பெயர் அந்தோணி செல்வராஜ் என்பதாகும் (ஆதாரம் :
நூல் “கோவை கலவரத்தில் எனது சாட்சியம்”). இந்தியா முழுவதும் மதவாதிகளின் பார்முலா ஒரே
மாதிரி தான் இருந்திருக்கிறது.
குஜராத்தில் தலித் DGP இருக்கிறார். ஆனால் அவரால்
தான் பிறந்த ஊரில் தனக்கென ஒரு சொந்த வீடு கட்ட முடியவில்லை.
இதில் குறிப்பாக சொல்ல வேண்டிய விஷயம் நல்லவர்களின்
மெளனம் மிகப்பெரிய ஆபத்தாகும். மதச்சார்பற்ற சக்திகள் சோம்பேறிகளாக இருக்கிறோம். நாம்
கருத்தரங்கள் நடத்திக் கொண்டிருக்கிறோம். அவர்கள் தெருக்களில் இறங்கி தங்கள் வேலைகளை
ஆரம்பித்து விட்டார்கள். மதச் சார்பற்ற சக்திகள் சோம்பேறிகளாக இருக்கிறோம்.
இந்து மதவாதிகள் அம்பேத்கர் நினைவுகளை அழிக்கிறார்கள்.
புதிய அம்பேத்காரை உருவாக்குகிறார்கள். அன்பாய்
இருந்த ராமர் இப்போது கையில் அம்புடன் தான் காட்சியளிக்கிறார். இப்போது புதிய பெரியாரையும்
கொண்டு வர முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்போது திருவள்ளுவர் “சாமி” ஆகிவிட்டார்.
குஜராத் சம்பவம் நடைபெற்ற போது ஜனாதிபதியாக திரு.கே.ஆர்.நாராயணன்
அவர்கள் இருந்தார். என்னைப் பொருத்தவரை மோடி ஒரு பூச்சாண்டிதான். ஆயிரம் சமுத்திரம்
கொண்டு அலம்பினாலும் தீராத கறை.







No comments:
Post a Comment