Tuesday, 13 September 2016

புதுச்சேரி - பாரதியார் நினைவு நாள் உரை

12.09.2016 அன்று புதுச்சேரி பாரதி நினைவு இல்லத்தில் நடைபெற்ற பாரதி நினைவு நாள் நிகழ்வில் முனைவர்.ச.சுப்புரெத்தினம் அவர்கள் "வாழ்வியல் ஞானி பாரதியார்: எனும் தலைப்பில்  சிறப்புரையாற்றினார். நிகழ்வில் முனைவர்.எம்.எஸ்.காந்திமேரி, திருமிகு.ச.ஹேமச்சந்திரன், முனைவர் க.பஞ்சாங்கம் பங்கேற்றார்கள்.
முனைவர்.ச.சுப்புரெத்தினம் உரையிலிருந்து சில பகுதிகள் :
பண்பில்லாதவன் மரத்துக்கு ஒப்பானவன். ஈனத் தொழில் செய்பவன் என்றால் வாழத்தகுதியற்றவன் என்று பொருள் கொள்ளலாம். ஐயம் என்பதும் பிச்சை என்பதும் வேறு வேறு. ஐயம் என்பது அறவோர்க்கு அளித்தலாகும். மனிதாபிமானத்தோடு வாழ்பவனே மனிதன். மனிதன் மட்டுமே பகைவனுக்கு அருளும் தன்மை கொண்டவன். பாரதி போதைப் பொருளுக்கு அடிமையானவர் என்பது அறியாமையின் வெளிப்பாடாகும்.
      அறிவு எல்லாத் துன்பங்களையும் நீக்கும். “மீனைக் கொடுக்காதே. மீன் பிடிக்கக் கற்றுக் கொடு” என்றார்கள். ஆசிரியப் பணியும், மருத்துவர் பணியும் புனிதமான தொழிலாகும். ஆசிரியப் பணி உளநோயைப் போக்கும். மருத்துவப் பணி உடல் நோயை போக்கும். இருவரும் முக்கியமானவர்கள். ஆசிரியர் ஒழுக்கத்தையும் சேர்த்துக் கற்றுக் கொடுக்க வேண்டும். அறிவோடு ஒழுக்கத்தையும் சொல்லிக் கொடுக்க வேண்டும்.
      ஆங்கிலம் பல மொழிகளைச் சட்டையாகப் போட்டுக் கொண்ட மொழியாகும். மனைவியையும், நண்பனையும் விட்டுக் கொடுக்காதே என்பார்கள். ஒரு முறை தாமஸ் ஆல்வா எடிசனின் நண்பர் அவரது கண்டுபிடிப்பைக் கொண்ட குடுவை ஒன்றை உடைத்து விட்டார். சுற்றி இருந்த நண்பர்களெல்லாம் எடிசன் நண்பரைத் திட்டுவார் என்று எதிர்பார்த்த போது அவர் கோபப்படவில்லை. எல்லோரும் காரணம் கேட்ட போது எடிசன் சொன்னார் எனது கண்டுபிடிப்பை சில காலத்தில் உருவாக்கிக் கொள்ள முடியும் ஆனால் எனது நட்பை கோபப்பட்டு நான் உடைத்து விட்டால் அதை உருவாக்க முடியுமா ?

      50 வயதிற்குப் பிறகு மனைவிக்கு கணவனும், மனைவிக்கு கணவனும் தான் துணை. தொழில் போல உடலையும் புனிதமாக நினைக்க வேண்டும்.



No comments:

Post a Comment