Sunday, 12 October 2014


இன்று நடந்தவை
இன்று 12.10.2014 வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள சரஸ்வதி மஹாலில் தன்வந்திரி சித்த வைத்திய அறக்கட்டளையின் ஆறாம் ஆண்டு மாநாடு மிகச் சிறப்பாக நடைபெற்றது.
விழாவில் மரு.க.கோ.மணிவாசகம் எழுதிய இரண்டு சிறு பிரசுரங்கள் வெளியிடப்பட்டன
உயிர்க்காக்கும் சைவ உணவு
சைவ உணவின் சிறப்பினை மருத்துவ ஆதாரங்களோடு விளக்கும் எளிய பிரசுரம்.
மூலிகை மருந்டதுகள் செய்வோம்
39 சித்த மருந்துகள் தயாரிப்பு குறித்து எளிமையாக விளக்கப்பட்டுள்ளது.
இரண்டு பிரசுரங்களும் தேவைப்படடுவோர் அணுக வேண்டிய முகவரி : அரிமா.மரு.க.கோ.மணிவாசகம்,2-4  பி தெற்குத் தெரு, தேவூர் 611 109 நாகப்படட்டினம் மாவட்டம்.  கைபேசி எண். 9843592039

Sunday, 5 October 2014

படித்து மகிழ்ந்த நூல்..
உழைப்பின் நிறம் கருப்பு
சமீபத்தில் நண்பர் ஒருவர் புதுவைப்பரணி இலக்கிய இதழில் நூல் அறிமுகம் பகுதியில் வெளியிடுங்கள் என்று கொடுத்த நூல்.
திருவண்ணாமலைக் கவிஞர்.ஆரிசன் (கைபேசி எண். 9442311118) அவர்கள் தனது இலக்கிய நண்பர்களுக்கு கைபேசி மூலம் அனுப்பிய குறுஞ்செய்தி ஹைக்கூ கவிதைகளைத் தொகுத்து நூலாக்கியுள்ளார். இது இவரது ஐந்தாவது ஹைக்கூ தொகுதியாகும். அருமையான புகைப்படங்கள் அவரது எழுத்துக்கு மேலும் மகுடம் சேர்க்கின்றன.
சில ஹைக்கூகளைப் பார்க்கலாமா ?
* வரப்பு தகராறு                                          * ஊதிய உயர்வு கேட்டு
   வக்கீல் பாக்கெட்டில்                                அர்ச்சகர்கள் போராட்டம்
   நிலம்                                                                கல்லாக சாமி.
* கோஷ்டிப் பூசலின்றி                             * பயிர் மேய்ந்து
   நிம்மதி தவழ்கிறது                                   கொழுத்தது வேலி
   சுடுகாடு                                                          அரசியல்
* மாடுகள் விடுவித்து                              * தோல் டாக்டருக்கு
   மனிதர்களைப் பூட்டினர்                         பின்னால் இருக்கிறது
   நுகத்தடி உலகமயம்                                 பெரும் "படை"
* இருட்டின் காதலை                               * அம்புகள் தைத்த போதி மரம்
   வெளிச்சத்தில் பேசியது                         ரத்தத்தோடு புத்தர்
   நிலவு                                                              இலங்கை இனவெறி
* சுமையோடு தான்                                  * நீதிமன்றத்தில்
   வாழ்க்கை                                                    விரைவாய் கிடைக்கிறது
   ஆமை                                                            வாய்தா
* ஊர்தோறும் மதுக்கடைகள்               * நடைவண்டிப் பயணம்
   வெறிச்சோடிக் கிடக்கின்றன               இசை சேர்க்கிறது
   நூலகம்                                                          குழந்தையின் கொலுசு
     பல கவிதைகள் படித்து நீண்ட நேரமாகியும் மனதை விட்டு அகல மறுக்கின்றன. அதுவே இந்த நூலின் வெற்றி.   (05.10.2014 - 2040)                              
 

Monday, 29 September 2014





வணக்கம் இன்று (29.09.2014)அழைப்பின் பெயரில் ஏரிகள் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கில் சிறிது நேரம் பங்கேற்றேன் . ஏரிகள், குளங்கள் மற்றும் நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டியதின் அவசியம் குறித்த கருத்தரங்கம். முடிவில் நீர்நிலைகளை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதுச்சேரியிலுள்ள பாகூர் ஏரி உள்ளிட்ட ஏரிகளை சுத்தப்படுத்த மத்திய அரசு ஒதுக்கிய தொகை முழுமையாக செலவிடப்படாமல் திருப்பி அனுப்பட்டது என்கிற தகவலைச் சொன்னார்கள் புதுச்சேரியை சிங்கப்பூர் ஆக்க வேண்டும் என்பதற்காக லேஅவுட் போட்டு தேவையானவைகளை வெளியிலிருந்து வாங்கிக் கொள்ளலாம் என்கிற சிந்தனை புதுச்சேரி அரசிடம் இருக்கிறதோ என்றார் இன்னொரு நண்பர். எது எப்படியோ நீர் நிலைகள் பாதுகாப்பது என்பது நமக்கு சம்பந்தம் இல்லாதது என்கிற மன நிலை இளைஞர்கள் மத்தியில் குறிப்பாக நகர்ப்புற மக்கள் மத்தியில் பரவலாக இருக்கிறது என்பதுதான் எதார்த்தம். கருத்தரங்கில் இரண்டு உபயோகமான புத்தங்களை கொடுத்தார்கள். அது குறித்து அடுத்து பேசுவோம்

Tuesday, 23 September 2014

படித்ததில் பிடித்தது ..
இளைஞர்களுக்கான மருத்துவ டிப்ஸ்
         இளைஞர்கள் மத்தியில் புகைப் பழக்கம் அதிகரித்துக்கொண்டே போகிறது. அத்துடன் தவறான உணவுப்பழக்கத்தையும் இளைஞர்கள் விரும்பி உண்ணும் துரித உணவு வகைகளில் ஊட்டச்சத்து இல்லை. அதிக கலோரி தரும் கார்போஹைட்ரேட் தான் அதில் அதிகம். அதனால் உடல் பருமனாகிறது. உடலில் கொழுப்பு கூடுகிறது. இதேபோல் கூல்டிரிங்க்ஸ் வெறும் கலோரி மட்டுமே உள்ளது.
        ஊட்டச்சத்தில்லாத உணவு வகைகளைச் சாப்பிடுவது, அதிகப்படியான கொழுப்பு சேவது, இதோடு நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தமும் சேர்ந்தால் மாரடைப்பு வந்து விடுகிறது.
       அதிகப் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக, நெருக்கடியான பணி சூழலில் டென்ஷனுக்கு மத்தியில் இளைஞர்கள் பணியாற்றுகிறார்கள். டென்ஷன் ஏற்படும் போதெல்லாம் புகைக்கிறார்கள். இப்படி வாழ்க்கை முறை தலைகீழாக மாறிவிட்டதால், இளம் வயதிலேயே மாரடைப்பு வருகிறது.
சத்தான உணவு வகைகளுடன் கீரை, காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றைச் சாப்பிட்டு வந்தாலே மாரடைப்பைத் தடுக்கலாம். அதோடு நடைப்பயிற்சி, உடற்பயிற்சி, யோகா, தியானம் ஆகியவற்றைத் தினமும் செய்ய மறக்கக் கூடாது.
       மாரடைப்பு ஏற்பட்ட ஒருவருக்கு முதல் ஒரு மணி நேரம் "கோல்டன் ஹவர்". மார்பில் வலி ஏற்பட்டவுடனே, உடனடியாக அருகில் உள்ள எந்த மருத்துவமனயாக இருந்தாலும் சரி, அங்கு சென்று விடுவது நல்லது. நாக்குக்கு அடியில் ஆஸ்பிரின் மாத்திரை வைத்துக்கொள்வது பயன் தரும். இது உறைந்த ரத்தத்தை ஓரளவு கரைக்ககூடும். ஈ.சி.ஜியை பார்த்தாலே மாரடைப்பு வந்திருக்கிறதா என்பது தெரிந்து விடும். மாரடைப்பு உறுதியானால் அதன்பிறகு நமக்கு ஏற்ற மருத்துவமனைக்கு மாறிக் கொள்ளலாம் 
-இதய அறுவைசிகிச்சை நிபுணர் பி.மூர்த்தி எஸ்.ஆர்.எம்.மருத்துவமனை -(நன்றி : ஹிந்து தமிழ் நாளிதழ் - 23.09.2014)

Friday, 19 September 2014

தினம் ஒரு மருத்துவம்
பலத்துக்கு
அருகம்புல் கழுவி கணு நீக்கி சுடு தண்ணீர் தெளித்து இடித்துப் பிழிந்த சாறு 100 மில்லி, தேன் 10 மில்லி, மிளகு 2 சிட்டிகை சேர்த்து காலை மட்டும் பருகி ரர கொழுப்பு குறையும். மற்றும் எல்ல மருந்து நச்சுத் தன்மையும் நீங்கி இரத்தம் சுத்தமாகும். எல்லா நோய்களும் நீங்கி உடல் பலமாகும். இரத்தம் உறையாத் தன்மையை நீக்கும். செயற்கை இரத்தத்தை உடல் ஏற்று தக்க வைக்கும். பல வருடமாயுள்ள பிணிக்கு ஒரு வேளை கொடுத்து, பின் உரிய மூலிகையை தர விரைவில் குணம் தரும்