படித்ததில் பிடித்தது ..
இளைஞர்களுக்கான மருத்துவ டிப்ஸ்
இளைஞர்கள் மத்தியில் புகைப் பழக்கம் அதிகரித்துக்கொண்டே போகிறது. அத்துடன் தவறான உணவுப்பழக்கத்தையும் இளைஞர்கள் விரும்பி உண்ணும் துரித உணவு வகைகளில் ஊட்டச்சத்து இல்லை. அதிக கலோரி தரும் கார்போஹைட்ரேட் தான் அதில் அதிகம். அதனால் உடல் பருமனாகிறது. உடலில் கொழுப்பு கூடுகிறது. இதேபோல் கூல்டிரிங்க்ஸ் வெறும் கலோரி மட்டுமே உள்ளது.
ஊட்டச்சத்தில்லாத உணவு வகைகளைச் சாப்பிடுவது, அதிகப்படியான கொழுப்பு சேவது, இதோடு நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தமும் சேர்ந்தால் மாரடைப்பு வந்து விடுகிறது.
அதிகப் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக, நெருக்கடியான பணி சூழலில் டென்ஷனுக்கு மத்தியில் இளைஞர்கள் பணியாற்றுகிறார்கள். டென்ஷன் ஏற்படும் போதெல்லாம் புகைக்கிறார்கள். இப்படி வாழ்க்கை முறை தலைகீழாக மாறிவிட்டதால், இளம் வயதிலேயே மாரடைப்பு வருகிறது.
சத்தான உணவு வகைகளுடன் கீரை, காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றைச் சாப்பிட்டு வந்தாலே மாரடைப்பைத் தடுக்கலாம். அதோடு நடைப்பயிற்சி, உடற்பயிற்சி, யோகா, தியானம் ஆகியவற்றைத் தினமும் செய்ய மறக்கக் கூடாது.
மாரடைப்பு ஏற்பட்ட ஒருவருக்கு முதல் ஒரு மணி நேரம் "கோல்டன் ஹவர்". மார்பில் வலி ஏற்பட்டவுடனே, உடனடியாக அருகில் உள்ள எந்த மருத்துவமனயாக இருந்தாலும் சரி, அங்கு சென்று விடுவது நல்லது. நாக்குக்கு அடியில் ஆஸ்பிரின் மாத்திரை வைத்துக்கொள்வது பயன் தரும். இது உறைந்த ரத்தத்தை ஓரளவு கரைக்ககூடும். ஈ.சி.ஜியை பார்த்தாலே மாரடைப்பு வந்திருக்கிறதா என்பது தெரிந்து விடும். மாரடைப்பு உறுதியானால் அதன்பிறகு நமக்கு ஏற்ற மருத்துவமனைக்கு மாறிக் கொள்ளலாம்
-இதய அறுவைசிகிச்சை நிபுணர் பி.மூர்த்தி எஸ்.ஆர்.எம்.மருத்துவமனை -(நன்றி : ஹிந்து தமிழ் நாளிதழ் - 23.09.2014)
No comments:
Post a Comment