11.9 மஹாகவி நினைவு நாள்
" பராசக்தீ, இந்த உலகத்தின் ஆன்மா நீ.உனக்கு அறிவில்லையா ? உனக்கும் காது கேட்காதா ? நாள்தோறும் உன்மீது பாட்டுப் பாடுகிறேன். நான் கேகும் வரங்களையெல்லாம் கொடுத்து விடக் கூடாதா ?
முதலாவது, எனக்கு என்மீது வெற்றி வர வேண்டும். .....
கடங்காரை தொல்லையும், அத்துடன் வந்து கலந்தது.
வைத்தியனுக்கும்க் கொடுக்கப் பணமில்லை. குழப்பம். குழழப்பம் - தீராத குழப்பம். எத்தனை நாட்கள். எத்தனை மாதங்கள். எத்தனை வருஷங்கள் .
பராசக்தீ, ஓயாமல் கவிதை எழுதிக் கொண்டிருக்கும்படடி திருவருள் செய்ய மாட்டாயா ?
என் குடும்பத்தாரும் என்னைச் சார்ந்த பிறரும் வாழ்ந்திருக்க, நான் எப்போதும் உன் புகழை அயிரவிதமான புதிய புதிய பாட்டுக்களில் அமைக்க விரும்புகிறேன். உலகத்தில் இதுவரை எங்குமில்லாதபடி அற்புதமான ஒளிச்சிறப்பும், பொருட்பெருமையும் உடைய பாட்டொன்று என் வாயிலே தோன்றும்படி செய்ய வேண்டும் .
எனது குடும்பப்பாரமெல்லாம் உன்னைச் சேர்ந்தது உன்னைப் புகழழ்ச்சி புரியும் தொழில் என்னைச் சேர்ந்தது....
ஓயாமல் வியாதி பயம் கொண்டு உளைகின்ற நெஞ்சமே தூ தூ தூ கோழை ..
செட்டி பணத்துக்கு எத்தனை நாள் பொய் சொல்லுகிறது ? பொய் வாயிதா, பொய் வாயிதா, பொய் வாயிதா - தினம் இந்தக் கொடுமை தானா ? சீச்சீ
பராசக்தி - உன்னை நான் நம்புவதை முற்றிலும் விட்டு நிச்சயமாக நாஸ்திகனாய் விடுவேன், நீ என்னை அற்பத் தொல்லைகளுக்கு உட்படுத்திக் கொண்டேயிருந்தால்....
மஹாசக்தி - நீ யிருப்பதை எவன் கண்டான் ? உனக்கு அறிவுண்டென்பதை எவன் கண்டான் ? இந்த உலகம் - சரி, சரி,
இப்போது உன்னைக் வைய மாட்டேன். என்னைக் காப்பாற்று. உன்னைப் போற்றுகிறேன்.
(முனைவர்.சிருங்கை சேதுபதியின் சொற்பொழிவாளர் பாரதியார் நூலிலிருந்து)
என்னே முண்டாசுக் கவிஞனின் ஆக்ரோஷம் . கோபம் .
எல்லாம் சில நொடிகள் தான் .
இவனோடு வாழ முடியாமல் போய் விட்டதே என்பதை நினைக்கும் போது கண்ணில் நீர் திரையிடுகிறது ..
வாழ்க மஹாகவி ..
No comments:
Post a Comment