இன்று 16.09.2015 மாலை 6 மணிக்கு வீட்டை விட்டு கிளம்பிய போது மழை வருவது போல இருந்தது. ஒரு நிமிடம் தான் . பருவநிலை மாறியது. சூரியனின் கதிர்கள் தங்களின் நிறங்களை மாற்றி தாகூர் கலைக் கல்லூரி விளையாட்டு மைதானத்தின் மரங்களின் மீது பட்டுத் தெறித்தது. ரம்மியமான காட்சி. என்னே இயற்கையின் விளையாட்டு .. ரசித்து மகிழ்ந்தேன்.
Wednesday, 16 September 2015
Sunday, 6 September 2015
ஸ்ரீ வில்லிப்புத்தூர் திருமதி.கே.விஜயலட்சுமியின் இசைக் கச்சேரி -
இன்று (06.09.2015) ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணி முதல் ஒரு இசைக்கச்சேரியை அழைப்பின் பேரில் புதுச்சேரி அரவிந்தர் வீதியிலுள்ள பரத கலாமண்டலத்தில் பார்க்க நேர்ந்தது.
ஒரு இசைக்கச்சேரி - ஸ்ரீவில்லிப்புத்தூர் திருமதி.கே.விஜயலட்சுமி பாட்டுக்கு கோயமுத்தூர் எஸ்.உஷா வயலின் இசைக்க மிருதங்கம் வித்வான் எஸ்.கோவிந்தராஜன். தனி ஆவர்த்தனம் மிகவும் ரசிக்கப்படும்படியாக அமைந்திருந்தது.
நிகழ்ச்சி மிக அருமையாக இருந்தது. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் கசக்கி பிழியும் கடுமையான பணிகளுக்கு மத்தியில் இந்த நிகழ்ச்சி மனதுக்கு ஆறுதலாகவும் உற்சாகமூட்டக் கூடியதாகவும் இருந்தது.
அரங்க மேடை அமைப்பும், ஒலி, ஒளி அமைப்பும் மிகவும் பிரமாதம்.
இது போல் நிகழ்ச்சி நடக்க இருக்கிறது என்கிற தகவலை பரவலாக கொண்டு சேர்க்க வேண்டும். அது குறித்து நிர்வாகிகள் ஆலோசித்து செயல்படட்டும்.
பல கலைஞர்கள் பாராட்டை மிகவும் விரும்புகிறார்கள். தங்கள் திறமை திசையெட்டும் பரவ வேண்டும் ஆசைப்படுகிறார்கள். இது நியாயமானதும் கூட. ஏனென்றால் பாராட்டுக்கள் தான் அவர்களுக்கு வழங்கப்படும் மிகப்பெரிய பரிசு.
வாழ்த்துக்கள் தொடரட்டும் திருமதி.கே.விஜயலட்சுமி குழுவினரின் வெற்றிப்பயணம் ...
Wednesday, 2 September 2015
மாறாத புதுச்சேரி தலைமை தபால் நிலையம்
புதுச்சேரி அரசு புதுச்சேரியை இனி 'புதுச்சேரி' என்று அழைக்க வேண்டுமெனவும், அரசு கடிதங்களிலும் புதுச்சேரி என்று தான் எழுத வேண்டுமென உத்திரவு பிறப்பித்து ஆண்டுகள் பல ஆகி விட்டது. என்ன காரணமோ தெரியவில்லை புதுச்சேரி தலைமை தபால் நிலைய மட்டும் பாண்டிச்சேரியையே பிடித்துக் கொண்டிருக்கிறது. ஒரு வேளை பெயர் மாற்றத்தில் புதுச்சேரி தபால் நிலைய அதிகாரிகளுக்கு உடன்பாடு இல்லையோ ?
Tuesday, 21 July 2015
கலை இலக்கியத் திருவிழா - 26.07.2015 - த.மு.எ.க.ச ...
முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், புதுச்சேரி சார்பில் கலை இலக்கியத் திருவிழா வருகிற 26.07.2015 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி முதல் புதுச்சேரி வழுதாவூர் சாலையில் உள்ள பாக்யா திருமண நிலையம் அருகில் (முத்தரையர்பாளையம்) அருகில் நடைபெற உள்ளது. திரு.பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு "கல்வி மெய்ப்பட வேண்டும்" என்கிற தலைப்பில் உரைவீச்சும் சிறப்பு விருந்தினராக எடிட்டர் பீ.லெனின் அவர்களும் கலந்து கொள்கிறார்கள். விழாவில் புதுக்கோட்டை பூபாளம் குழுவினரின் அரசியல் நையாண்டி தர்பார், லிம்போ கேசவனின் தீப்பிழம்பு ஆட்டம், திருநங்கையர் வழங்கும் கரகாட்டம் என கலகலக்கப் போகிறது. விரிவான அழைப்பிதழைக் காண puduvaipparani.blogspot.in வருக ...
Saturday, 11 July 2015
கலாவிசுவின் மாமரத்து ஊஞ்சல் கவிதைத் தொகுப்பு வெளியீடு
கலாவிசுவின் மாமரத்து ஊஞ்சல் கவிதைத் தொகுப்பு வெளியீடு இன்று 11.07.2015 மாலை சொசியேல் அரங்கில் நடைபெற்றது. விழாவில் பேசிய எழுத்தாளர். சோழ.நாகராஜன் நூலில் உள்ள கவிதைகள் குறித்து பேசிவிட்டு நிகழ்ச்சி குறித்த அழைப்பிதழும், நூலின் நகலும் அனுப்பபடாதது குறித்து மிகவும் கவலைப்பட்டார். இது அனைத்து படைப்பாளிகளுக்குமானது. அழைப்பிதழும், நூலின் பிரதி ஒன்றும் சிறப்பு பேச்சாளர்களை சென்று சேர்வதை உறுதி செய்ய வேண்டும்.
Wednesday, 8 July 2015
வீணா கானம் ஆடியோ வெளியீடு
வீணா கானம் ஆடியோ சி.டி வெளியீட்டு விழா புதுச்சேரி அக்கா சாமி கோவிலில் 08.07.2015 புதன் கிழமை மாலை நடைபெற்றது.
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் ஆஸ்தான வித்வான் காருக்குறிச்சி ஏ,ரவி அவர்களின் வீணை இசை மற்றும் கலைமாமணி எஸ்.கோபக்குமார் இணைந்து வாசித்துள்ள இந்த ஆடியோ சி.டி யில் 13 பாடல்கள் உள்ளன.
சிடியை புதுச்சேரி அரசின் கலை பண்பாட்டுத் துறை அமைச்சர் திரு.தியாகராஜன் அவர்கள் வெளியிட சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் கல்வி அமைச்சருமான திரு.க,லட்சுமிநாராயணன் அவர்கள் பெற்றுக் கொண்டார்.
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் ஆஸ்தான வித்வான் காருக்குறிச்சி ஏ,ரவி அவர்களின் வீணை இசை மற்றும் கலைமாமணி எஸ்.கோபக்குமார் இணைந்து வாசித்துள்ள இந்த ஆடியோ சி.டி யில் 13 பாடல்கள் உள்ளன.
சிடியை புதுச்சேரி அரசின் கலை பண்பாட்டுத் துறை அமைச்சர் திரு.தியாகராஜன் அவர்கள் வெளியிட சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் கல்வி அமைச்சருமான திரு.க,லட்சுமிநாராயணன் அவர்கள் பெற்றுக் கொண்டார்.
Friday, 26 June 2015
யோகா கருத்தரங்கம்
இன்று மஹாத்மா காந்தி மெடிகல் காலேஜ் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (கிருமாம்பாக்கமம், புதுச்சேரி) " THERAPEUTIC POTENTIAL OF YOGA" எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.
கருத்தரங்கில் THERAPEUTIC POTENTIAL OF YOGA எனும் தலைப்பில் உரையாற்ற வந்த திரு.பேராசிரியர்.மனோஜ் நாயக் - ரமாமணி ஐயங்கார் மெமோரியல் யோகா நிறுவனம் புனே அவர்கள் திடீரென சட்டை பேண்டைக் கழற்றி யோகா செயல்முறை விளக்கம் செய்து காட்ட ஆரம்பித்து விட்டார். பார்வையாளர்கள் மத்தியில் ஏக கைதட்டல் .. பாராட்டுக்கள் . அவரது உரை நிகழ்ந்த 1-1/4 மணி நேரமும் ஒட்டு மொத்த அரங்கமும் அவரையே வியயப்புடன் பார்த்துக் கொண்டிருந்தது.நீங்களும் பாருங்களேன். நிகழ்வில் துணை வேந்தர் திரு.கே.ஆர்.சேதுராமன், டீன் திரு.எம்.ரவிசங்கர், டீன்.என்.அனந்தகிருஷ்ணன், அம்மாஜி.யோகாச்சாரினி மீனாட்சி தேவி பவனானி, திரு.மதன்மோகன், டாக்டர்.ஆனந்தபாலயோகி பவனானி பங்கேற்றனர்.
Subscribe to:
Posts (Atom)










































