Sunday, 25 January 2015

திரைப்பட விழா - நான்காம் நாள் - நிறைவு

திரைப்பட விழா 4ம் நாள் நிகழ்வுகள்
      திரைப்பட விழாவின் நான்காம் நாள் நிகழ்வுகள் இன்று (25.11.2014) “பாட்டாளி படைப்பாளியான வரலாறு” ஆவணப்படம் திரையிடப்பட்டது. இயக்கம் சாரோன். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் குறித்த அருமையான பதிவு. இயல்பாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அரிய பல தகவல்களை உள்ளடக்கியுள்ளது.
      அதனைத் தொடர்ந்து “யாதும்” என்கிற ஆவணப்படம் திரையிடப்பட்டது. இக்குறும்படம் த.மு.எ.க.ச. வின் சிறந்த குறும்படத்திற்கான விருது பெற்ற படமாகும். இயக்கியவர் கோம்பை.எஸ்.அன்வர். இந்து முஸ்லிம் மக்களுக்கிடையேயான கலாச்சாரப் பாரம்பரியங்களை அழகுற வெளிப்படுத்தும் படம். சேர, சோழ மன்னர்கள் காலத்தில் இந்து முஸ்லிம் மக்களுக்கிடையே இருந்த உறவுகள், அது இன்றும் தொடரும் சூழ்நிலைகளை விளக்கும் படம்.
      அதனை அடுத்து “அரணையைக் கண்டிருக்கிறீர்களா” (HAVE YOU SEEN THE ARANA ?” என்கிற மலையாள மொழி குறும்படம் காட்டப்பட்டது. அரணை என்கிற சிறிய உயிரினத்தைக் கண்டீர்களா என்கிற தேடலில் தொடங்கி இஞ்சி பயிரிட்டு நஷ்டமடைந்த விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதைக் கூறும் படம். இயக்கம் : சுனண்டா தத். அதனைத் தொடர்ந்து  நிறைவு விழா நடைபெற்றது.
      இந்த திரைப்பட விழாவில் மிசோராம் மாநிலத்திலிருந்து 20 மாணவ மாணவிகள் கலந்து கொண்டது ஒரு சிறப்பான அம்சம்.  இது குறித்த பல்வேறு பதிவுகள் தொடரும்.
      பங்கேற்க முடியாமல் போனவர்களை நினைக்கும் போது வருத்தமாக இருக்கிறது.


























திரைப்பட விழா - 3ம் நாள் -

திரைப்பட விழா 3ம் நாள் நிகழ்வுகள்
      3ம் நாள் நிகழ்வின் தொடக்க குறும்படமாக “தமாஷ்” (TAMAASH – THE PUPPET) திரையிடப்பட்டது. இயக்கம் : சத்யன்சூ சிங் மற்றும் தேவன்சூ சிங் – காஷ்மீரி மொழிப்படம். தன்னை விட நன்றாகப் படிக்கும் மாணவன் மீது சிறுவன் அன்வர் கொள்கின்ற பொறாமை அதன் தொடர்ச்சியாக நடைபெறக்கூடிய பல விஷயங்களை சுவாரசியமாக விவரிக்கும் படம். இது சிறுவர்களுக்கான படம்.
      அதனைத் தொடர்ந்து எடிட்டர் சிவக்குமார் அவர்களின் திரைக்கதை எழுதுவது எப்படி என்கிற தலைப்பில் வகுப்பு நடைபெற்றது. (இது தனியே பதிவு செய்யப்படும்).
      பின்னர் “NEVERTHLESS IT MOVES” எங்கிற படம். புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர் அஷ்வந்த் ஜி.கிருஷ்ணன் இயக்கியது. காலப்போக்கில் பல்வேறு மாற்றங்கள் நமது பொது போக்குவரத்தில் நடைபெற்றாலும் இன்றும் சைக்கிள் ரிக்க்ஷா மறையவில்லை. வெளிநாட்டினர், வயதானவர்கள் விரும்பி உபயோகிக்கும் வாகனமாகவே இது இருக்கிறது. சைக்கிள் ரிக்க்ஷா ஓட்டுனர் படும் அவஸ்தைகளை விவரிக்கும் படம்.
      அதனைத் தொடர்ந்து “சொறப்பு” (SORAPPU) என்கிற புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர் திரு.கே.பி.பிரபாகர் இயக்கியுள்ள குறும்படம். மீன் வளத்தை மேலும் பெருக்க பவளப்பாறைகள் அதிகம் உருவாக்கப்படும் என்கிற மீனவர்களின் கோரிக்கையை முன்வைக்கிறது.
      இதனைத் தொடர்ந்து “THIS IS THE MOMENT” என்கிற குறும்படம் திரையிடப்பட்டது. காலஞ்சென்ற ஹிந்தி நடிகர் அம்ரிஷ் பூரி குறித்த ஆவணப்படம். அம்ரிஷ் பூரி குறித்து ஷியாம் பெனகல், நஸ்ருதீன் ஷா மற்றும் அமோல் பலேக்கர் சிறப்பாக கூறுகிறார்கள்.
      சிவகாசியில் உள்ள பட்டாசுத் தொழிற்சாலையில் பெண் குழந்தைகள் படும் பாட்டை விவரித்தது “LAST CHILDHOOD” என்கிற குறும்படம். இயக்கம் திரு.பக்கிரிசாமி.
அதனைத் தொடர்ந்து “HINDUSTAN HAMARA” எனும் ஆவணப்படம் திரையிடப்பட்டது. பிரபல ஆவணப்பட இயக்குனர் அனந்த் பட்வர்த்தன் பற்றிய செய்திகளைக் கூறும் இப்படத்தை திரு.ஆர்.வி.ரமணி இயக்கியுள்ளார்.

      அடுத்து ஒரியா மொழி ஆவணப்படமான “அல்காரிதம்ஸ்” (ALGORITHMS) திரையிடப்பட்டது. இயக்கம் : திரு இயன் மெக்டொனால்டு. கண் பார்வையற்றவர்கல் சர்வதேச அளவில் நடைபெறும் சதுரங்கப் போட்டியில் வெற்றி பெறுவதற்காக நடத்தும் போராட்டங்களை விவரிக்கும் அற்புதமான படம். காட்சியமைப்பு நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது.













Friday, 23 January 2015

இன்று திரைப்பட விழா - இரண்டாம் நாள்

புதுச்சேரி சர்வதேச 4வது ஆவணப்பட குறும்படத் திருவிழா
இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள்
இன்று காலை U.R.ANANTHAMURTHY" எனும் குறும்படம் திரையிடப்பட்டது. கர்நாடகாவில் வாழ்ந்து மறைந்த ஒரு இலக்கியவாதியின் முகங்களைக் காட்டும் படம். படத்தின் இயக்குனர் திரு கிரீஸ் காசரவள்ளி திரையிடலுக்குப் பின் நடைபெற்ற உரையாடலில் கலந்து கொண்டார்.
புதுச்சேரி சர்வதேச 4வது ஆவணப்பட குறும்படத் திருவிழாயை ஒட்டி "திரைப்பட விழா சிறப்பு மலர்" யினை திரு.என்.அனில்குமார் (COORDINATOR, MIFF, MUMBAI) வெளியிட திரு.தமிழ்ச்செல்வன், திரு.சிவக்குமார், திரு.சி.ஹெச்.பாலமோகனன் பெற்றுக் கொண்டனர்.













 அதன் பின் இவன் தந்தை" குறும்படம்  திரையிடப்பட்டது. இக்குறும்படத்தை திரு.நீல்சன் (தஞ்சாவூர்) இயக்கியுள்ளார். களம் திரைப்படச் சங்கம் தயாரித்துள்ளது. தந்தையை இழந்த மகனின் மனப்போராட்டத்தை விளக்கும் படம்.
அதனைத் தொடர்ந்து "IN BETWEEN : ISUNG YUN  IN NORTH AND SOUTH KOREA"  எனும் குறும்படம் திரையிடப்பட்டது. இயக்குனர் மரியா ஸ்டாட்மெய்யர். ஐசுங்க் யூன் எனும் செல்லோ இசைக் கலைஞனின் வாழ்க்கையை கூறும் படம்.
பிறகு "DECISION"  எனும் ஹிந்தி குறும்படம் திரையிடப்பட்டது. இப்படத்தை புஷ்பா ராவத் இயக்கியுள்ளார். ஒரு முடிவு எடுப்பதற்கு எவ்வளவு சிரமப்பட வேண்டியிருக்கிறது என்பதை சொல்லும் படம்.
அதன்பின் "700 007" எனும் அஸ்ஸாமி மொழி குறும்படம் திரையிடப்பட்டது. இதனை அல்தாப் மஸீத் இயக்கியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து "WE THE PEOPLE - `17 UNWANTED INDIANS"  எனும் படம் திரையிடப்பட்டது. ஷார்ஷாவில் பிழைக்கச் சென்று கொலைக் குற்றம் சுமத்தப்பட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 17 இந்தியர்களைப் பற்றிய படம்.
பின்னர் கரும்பாறை (BLACK ROCK) எனும் மராத்தி மொழி குறும்படம் திரையிடப்பட்டது. திரு விக்ரந்த் ஜனார்த்தன் பவார் இயக்கியுள்ளார்.
புதுச்சேரி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த திரு சஞ்சீவ் குமார் இயக்கிய "TRUE LIFE" எனும் குறும்படம் திரையிடப்பட்டது. உடல் தானத்தை வலியுறுத்தும் படம்.
இறுதியாக  புதுவைப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த திரு எஸ்.பாலமுருகன் இயக்கிய "NANO BIOTICS" எனும் படம் திரையிடப்பட்டது.  நானோ காந்த ஈர்ப்பைப் பயன்படுத்தி மருத்துவம் செய்வதை கூறும் படம்.