Wednesday, 2 December 2015

நீதியரசர் சந்துரு அவர்களின் உரை - 6

நெருக்கடி நிலையின்போது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் 42வது திருத்த சட்டத்தின் மூலம் ‘51-A’ என்ற பிரிவு சேர்க்கப்பட்டது. அதன்படி ஒவ்வொரு குடிமகனும் பின்பற்ற வேண்டிய அடிப்படைக் கடமைகள் கொடுக்கப்பட்டிருந்தன. 51-A(h) என்ற ஷரத்தில் ஒவ்வொரு குடிமகனும் அறிவியல் பூர்வமான உணர்வை வளர்த்துக் கொள்ளவும் மனிதாபிமானமும் மற்றும் விசாரணைக்கான உணர்வுடன் சீர்திருத்தங்கள் செய்யவும் கடமைப்பட்டவர்களென்று கூறப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகங் களை எல்லாம் ஒழுங்குபடுத்தக் கூடிய பல்கலைக்கழக மானியக் குழு (UGC) பற்றிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் வந்தது. “சோதிட விஞ்ஞானம்என்ற ஒரு புதிய பட்டப்படிப்பிற்கு யு.ஜி.சி. வழங்கிய அங்கீகாரத்தையெதிர்த்து சில பகுத்தறிவுவாதிகளும் தில்லி அறிவியல் சங்கமும் இணைந்து பி.எம்.பார்கவா என்பவ ருடைய பெயரில் அவ்வழக்கு தொடரப்பட்டது.
அறிவியல் பூர்வமற்ற ஜோதிடக் கலைக்கு அங்கீகாரமளித்த பல்கலைக்கழக மானியக்குழுவின் நடவடிக்கை அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதம் என்று வாதாடப்பட்டது. பல்கலைக்கழக மானியக் குழுவின் கொள்கை முடிவில் தலையிட முடியாதென்று உச்ச நீதிமன்றம் அவ்வழக்கை தள்ளுபடி செய்தது.
இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் இதுபோன்ற கட்டுரை தொகுப்புகளை மக்களிடம் எடுத்துச் சென்றால்தான் நாட்டில் பகுத்தறிவு வளரும். இவை போன்ற பல நூல்களை மறுபதிப்பு செய்ய வேண்டிய தேவை இன்று அதிக அளவில் உள்ளது.
(சென்னை இளெகிக சங்கம் - ஆறு தொகுதிகள் மற்றும் அத்திப்பாக்கம் .வெங்கடாசலனார் ஆக்கங்கள் திரட்டு ஆகிய இரு நூல்களை 28.10.2013 அன்று மாலை வெளியிட்டு நீதிபதி கே.சந்துரு அவர்கள் நிகழ்த்திய உரையின் எழுத்து வடிவம்.)
கருத்து உதவிக்காக நன்றி : தோழர்.அரசு எழிலன்


No comments:

Post a Comment