புதுச்சேரியும் தற்போது பெய்து வரும் கன மழையால் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறது .. கிருஷ்ணா நகர், ரெயின்போ நகர் உள்ளிட்ட பகுதிகள் பாகூர், கரிக்கலாம்பாக்கம், வில்லியனூர், ரெட்டியார்பாளையம் என்று மக்கள் அலைந்து கொண்டிருக்கிறார்கள் .. புதுச்சேரி துணை நிலை ஆளுநர் அவர்களும், சமூக நலத் துறை அமைச்சர் திரு.இராஜவேலு அவர்களும், மக்களைச் சென்று சந்தித்த காட்சிகள். இது தவிர புதுச்சேரி முதல்வரின் பாராளுமன்றச் செயலரும், இலாசுப்பேட்டைத் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமாகிய திரு.வீ.வைத்தியநாதன் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டும், உணவு வழங்கியும், சட்டமன்ற உறுப்பினர் திரு.க்.இலட்சுமிநாராயணன் அவர்கள் களப்பணி ஆற்றியும் உணவு வழங்கியும் வருகிறார்கள். யாரும் எங்களைப் பார்க்க வரவில்லை என்கிற குரல் புதுச்சேரியில் அதிகம் வரவில்லை. முழங்கால் அளவு தண்ணிரில் இறங்கி பொதுப்பணித் துறை அமைச்சர் திரு.என்.ஜி.பன்னீர்செல்வம் அவர்கள் மக்களைக் கண்டு பேசி ஆறுதல் கூறி வருகிறார்கள் .. பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம் ... தமிழகத்தைச் சேர்ந்த ஊடகங்கள் சென்னையை மையப்படுத்தியே காயை நகர்த்துவதாகத் தெரிகிறது. புதுச்சேரியை கண்டு கொண்டதாகவேத் தெரியவில்லை .. வேதனைக்குரிய விசயம்...

No comments:
Post a Comment